கொரோனா வைரஸிற்க்கான அறிகுறிகள்..!

  • by
what are the symptoms of corona virus

கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தால் ஆரம்பத்தில் அவர்களுக்கு சளி, காய்ச்சல், வறண்ட இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தொண்டைவலி, சுவை குறைதல் போன்றவைகள் அதிகரிக்கும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமாக கொரோனா வைரஸின் வீரியத்தை நம்மால் தடுக்க முடியும். இதைத் தவிர்த்து வேற என்னென்ன அறிகுறிகள் எந்தெந்த நாட்களில் உங்களுக்கு தோன்றும் என்பதை தெளிவாக இந்த பதிவில் காணலாம்.

முதல் மூன்று நாள்

வைரஸ் பிரச்சினைகளால் ஏற்படும் வியாதிகளாக பார்க்கப்படுவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல். ஆனால் இது சாதாரண வைரஸ் மூலமாக தோன்றியதா அல்லது கொரோனாவின் மூலமாக தோன்றியத என்பதில் சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் வந்த உடனே நாம் பயப்படத் தேவையில்லை. இது எப்போது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அதிக வீரியத்துடன் இருக்கிறதோ அப்போது தான் இது கொரோனாவாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அச்சமயத்தில் உடனே மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்வது சிறந்தது. இந்த அறிகுறிகள் தோன்றிய நாள்முதல் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள், ஒருவேளை இது கொரோனா வைரஸாக இருந்தால் அது உங்கள் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களையும் தாங்காமல் இந்த செயல் பாதுகாக்கும்.

மேலும் படிக்க – வெங்காயச்சாறில் இவ்வளவு நன்மை இருக்கிறதா..!

தொண்டை வலி

பாதிப்பு ஏற்பட்ட நான்காம் நாளிலிருந்து உங்களுக்கு தொண்டை வலி அதிகரிக்கும். தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தைனாள் உங்கள் குரல் கரகரப்பாக இருக்கும். இதைத் தவிர்த்து காய்ச்சல் அதிகரித்து உணவுகளை சாப்பிட முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலையை எட்டிய உடன் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதைத் தவிர்த்து இதுபோன்ற பிரச்சனைகளை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் உங்கள் உடலில் பாதிப்புகள் அதிகரிக்கும்.

உடல் வலி அதிகரிக்கும்

நான்காம் நாளிலிருந்த அனைத்து பிரச்சினைகளும் ஐந்தாம் நாள் தொடர்ந்து மேலும் உங்களுக்கு உடல் வலியும் உண்டாகும். அதேபோல் உணவுகளை சாப்பிடும் போதும் மற்றும் விழுங்கும் போதும் தொண்டையில் அதிகமான வலி ஏற்படும்.

மூச்சுத் திணறல்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஆறாம் நாளில் காய்ச்சல் மற்றும் வறட்டு இரும்பல் அதிகரிக்கும், தீராத உடல் வலி உண்டாகும். பேசும் போதும் அல்லது ஏதேனும் உணவுகளை உண்ணும்போதும் தொன்டைகளில் அதிகமான வலி உண்டாகும். இதைத் தவிர்த்து இந்நாளில் இருந்து மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். இந்த நிலையை எட்டிய பின்பு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இந்த பாதிப்பில் இருந்து உங்களை காப்பாற்றுவது மிகக் கடினமாகும்.

மேலும் படிக்க – புரோட்டின் உணவுகளின் அவசியம்..!

வயிற்றுப்போக்கு, வாந்தி

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஏழாம் நாளில் உங்களுக்கு வயிற்றுப் போக்கு அதிகமாக இருக்கும். அதைத் தவிர்த்து எந்த உணவுகளை உண்டாலும் அது வாந்தியாக வெளியேறிவிடும். இதைத்தவிர்த்து பித்தநீர், வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வாந்தி வழியே வெளியேற்றிவிடும் இதனால் உடல் சோர்வு, உடல் வலி, தொண்டை பிரச்சனை, காய்ச்சல், இருமல் போன்ற அனைத்தாலும் நாம் துன்புறுத்தப்படுவேம். இதைத்தொடர்ந்து எட்டாம் நாளில் உங்கள் மூட்டுகளில் வலிகள் ஏற்படும். இந்த நிலைவரை நீங்கள் சிகிச்சை ஏதும் பெறாமல் வீட்டில் இருந்தால் நிச்சயம் உங்களை மரணம் பிடித்துக் கொள்ளும்.

எனவே இந்த வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல் சாதாரண காய்ச்சல் மற்றும் இருமலுக்கு பயப்படாமல் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். இந்த வைரஸ் தொற்று எப்போது யாருக்கு பரவுகிறது என்பதை சரியாக கணிக்க முடியாது. எனவே இதை கருத்தில் கொண்டு உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன