வீட்டில் இருந்தபடியே நம் முகத்திற்கு பேஷியல் செய்யலாம்.!

what are the steps to be followed to do facial at home

நம் முகம் பொலிவுடன் இருப்பதற்காக நாம் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்போம் இதற்குக் காரணம் நமது தோற்றத்தை வைத்து தான் நமது நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் நாம் வெளியே செல்லும் போதெல்லாம் நம் அழகாகவும், பொலிவுடனும் இருக்க முயற்சி செய்வோம். இதற்காக நாம் பெரிய தொகைகளை செலவுசெய்து நம் தோற்றத்தை மாற்ற பேஷியல் செய்து கொள்வோம். இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் இருந்தபடியே மிக எளிமையான முறையில் நாம் பேஷியல் செய்து கொள்ளலாம்.

இந்த பேஷியலுக்கு தேவையான பொருட்கள் ஆரஞ்சு பழம், கற்றாழை, முல்தானிமட்டி, காட்டன் துணி மற்றும் தண்ணீர்.

நாம் முதலில் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டு அதனை பாதியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் பின்பு கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் ஜெல்லியை தனியாக எடுக்க வேண்டும். பின்பு அதை அப்படியே வைத்துவிட்டு. மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும் பின்பு அந்த நீரைக் கொண்டு காட்டன் துணியால் நமது முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் நமது முகத்தில் இருக்கும் சிறு துளைகளும் விரிவடைந்து காற்றோட்டத்தை அதிகப்படுத்தும்.

மேலும் படிக்க – ரிச் அண்ட் கியூட் லுக் வேணுமா பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க.!

பிறகு முல்தானி மட்டியை பாதியாக்கப்பட்ட ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் நன்கு தேய்க்கவேண்டும் குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மட்டி சிறந்த ஒன்றாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெற்றி, தாடை ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு அதை ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

அடுத்தது கற்றாழை ஜெல்லியை எடுத்துக்கொண்டு அதில் ஆரஞ்சு சாற்றை கலந்து அதை நம் முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவ வேண்டும். கடைசியாக காட்டன் துணியைக் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.

மேலும் படிக்க – கண் மேக்கப்பில் நாம் கவனித்து செய்ய வேண்டியது!

இதேபோல் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நமது முகத்தில் இருக்கும் வறட்சியைப் போக்கி நம்மை பொலிவுடனும் அழகாகவும் மாற்றிவிடும் இதனால் நான் பெரும் தொகைகளை செலவு செய்து நம் முகத்தை அழகு பெறுவதற்கு பதிலாக இதுபோல் வீட்டிலேயே செய்து நம் நேரத்தையும், பணத்தையும் சேமித்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன