மாசி மாதத்தின் சிறப்புகள்..!

  • by
what are the specialities of maasi magam

மாசிமகம் என்பது இந்துக்களினாள் பெரிதாக கொண்டாடப்படும் தெய்வீக மாதமாகும். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மாசிமகத்தன்று நீர்நிலைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

மாசி மாத வழிபாடு

நீர்நிலைகளில் மேன்மையை மக்களுக்கு போதிக்கப்படும் மாதம்தான் மாசி மாதம். இந்நாளில் இறைவனை நீராடல் செய்வதுடன், மக்களும் புனித நீரில் தங்கள் பாவங்களை கழிக்கிறார்கள். மாசிமகத்தன்று கும்பகோணத்தில் இருக்கும் முக்கிய கோவில்களில் மகாமக குளத்திற்கும், காவிரி ஆற்றிற்கும் சுவாமிகள் எழுந்தருள்வார்கள். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.

மேலும் படிக்க – பகவத் கீதையின் சிறப்புகள் என்ன?

முருகனுக்கு உகந்த மாதம்

மாசி மகம், மகா விஷ்ணு, உமா மகேஸ்வரன் மற்றும் முருகனுக்கு உகந்த மாதமாகும். உமாதேவி தான் மாசி மாதத்தில் தட்சனின் மகள் தாட்சனியாக அவதரித்தார். இதனால் இந்நாளை புண்ணிய நாளாகவும், பெண்களுக்கு உகந்த விரத நாளாகவும் கருதப்படுகிறது. பெருமாள் அவர்கள் வராக அவதாரமாக உருவான நாளும் இதுதான். இந்நாளில்தான் தன் தந்தைக்கு மந்திர உபதேசங்கள் முருகன் செய்தார் எனவே இது முருகனுக்கு முக்கியமான நாள்.

தோஷங்களை போக்கும் நாள்

சிவன், விஷ்ணு மற்றும் முருகன் என மூன்று முக்கியமான தெய்வங்களுக்கு உகந்த நாளான மாசிமகத்தன்று நமக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா தோஷங்களும் தீரும் என்பது ஐதீகம். இந்நாளில் புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதும் அல்லது புனித நீரில் நீராடினால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும்.

தீர்த்தமாடும் நாள்

நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பிதுர்தோஷம், தர்ப்பணம் செய்வது நன்மையை தரும்.

மாசிமக நாளில் தீர்த்தமாடும் நாள் என்பார்கள். புண்ணிய இடங்களுக்கு சென்று தீர்த்தமாட முடியாதவர்கள் விரதமிருந்து கோவில்களுக்கு சென்று உமா மகேஸ்வரனை வழிபடுவார்கள்.

மேலும் படிக்க – கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

தமிழகத்தில் மாசி மகம்

தமிழகத்தைப் பொருத்தவரை கும்பகோணத்தில் மாசி மகத்தை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும், காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும் என்பது அனைவரும் நம்புகிறார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8ம் தேதி மாசிமகம் வருகிறது. இந்த நாள் அதிகாலை ஒன்றரை மணி முதல் காலை பத்தரை மணி வரை கிட்டத்தட்ட 9 மணி நேரம் மாசி மகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் வரும் மாசிமகம் சிறப்பை விட 12 வருடத்திற்க்கு ஒருமுறை வரும் மாசிமகம் மிகச் சிறப்புடையது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன