பகவத் கீதையின் சிறப்புகள் என்ன?

  • by
what are the specialities of bhagavat geethai

இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தில் ஒரு பகுதியில் பாடப்படும் பாடல் தான் இந்த பகவத் கீதை. எல்லோரும் கீதையின் சொல்லை பின்தொடர வேண்டும் என்று புராணக் கதையில் சொல்லி உள்ளார்கள். அதில் இருக்கும் அர்த்தங்கள் உங்களை முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும். இத்தகைய பகவத் கீதை உருவானதற்கான காரணம் எப்படி என்று காணலாம்.

மகாபாரதம்

மகாபாரதத்தில் நடந்த குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கு தன் உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதினால் போரிட மறுத்தார். இதைக்கண்ட தேரோட்டியாக இருந்த கிருஷ்ணன் தர்மத்திற்கு எதிராக போர் புரியும் பொழுது உறவினர்கள், நண்பர்கள் என எதையும் பார்க்கக் கூடாது என அதிலிருக்கும் தர்மத்தை உணர்த்தி பாடியதே பகவத் கீதை.

மேலும் படிக்க – சிவராத்திரியில் நான்கு கால பூஜை வழிபாடும்

கீதையில் உள்ள ஸ்லோகங்கள்

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்களும் 18 அத்தியாயங்களும் உள்ளது. அதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்கள், அர்ஜுனன் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67 திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகமும் உள்ளது.

சூத்திரங்கள்

பகவத் கீதை நூலை உரத்த பிரஸ்தான த்ரயம் என்று சொல்வதுண்டு. இது பிரம்ம சூத்திரம் உபநிஷத்துக்கள் ஆகியவையோடு பகவத் கீதை இணைந்து மூன்று தூன்கள் என்று அழைக்கப்படுகிறது.

ஐந்து வாதங்கள்

கண்ணன் அர்ஜுனனுக்கு 5 வாதங்களை எடுத்துரைத்தார். அவைகள் வேதாந்த பார்வை, சுயதர்மம் பார்வை, கர்மயோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞான பார்வையாகும்..

வேதாந்த வாதம்

வேதாந்த பார்வையில் ஆத்மா ஒன்று தான் அழிவு இல்லாதது. இவ்வுலகில் வாழும் அனைத்தும் நம் வாழும் மூன்று காலங்களில் மற்றவர்கள் உடையதாக மாறிவிடும் என்றார். எனவே உறவை மறந்து எதிரிகளை எதிர்த்துப் போராடும் என்றார். அவர்கள் உடல் இறந்தாலும் அவர்களின் ஆன்மாவை யாரும் அழிக்க முடியாது என்றார்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

சுய தரும வாதம்

போர் புரிவதற்காக அர்ஜுனன் பல ஆண்டுகளாக தவம் புரிந்திருக்கிறார். இதனால் அவரின் சுய தர்மம் காக்க வேண்டும் என்பதற்காக இந்த போரை அவர் புரிய வேண்டும் என்று கிருஷ்ணன் உரைக்கிறார்.

கர்ம யோகம்

இந்தப் போரை புரிவது அர்ஜுனனின் கடமை எனவே ஒருவரின் கடமை அவர் விருப்பத்திற்கு அல்லது வெறுப்பு நிலையில் இருந்தாலும் அவரின் கடமையை சரியாக செய்ய வேண்டும் இதனால் அவருக்கு கிடைக்கும் கர்மத்தை மட்டும் கவனிக்க வேண்டும். ஆசை, நிராசை, கோபம், அழுத்தம் என எதுவும் இல்லாமல் அவரவர், தங்களின் கடமையை செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணன்.

பக்திப் பார்வை

எல்லா வல்லமை கொண்ட இறைவனை எவராக இருந்தாலும் நம்பி தான் ஆக வேண்டும். இவர்கள் எல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள் எனவே நீ செய்வது எதுவும் பாவமில்லை என்று கண்ணன் அர்ஜுனனுக்கு உணர்த்தினான்.

தத்துவப் பார்வை

அகங்காரத்தினால் நான் சொல்வதைக் கேளாமல் நீ எதையாவது செய்தால் அழிந்து போவாய் என்றார். அதன் காரணத்தினால் நீ போர் செய்ய மறுப்பது வெறும் தீர்மானமே, அது நடக்காது. உன் பிறகிறுதி உன்னை அப்படி செய்ய விடாது என்றார்.

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

பகவத் கீதை

“எது நடந்ததோ ,அது நன்றாகவே நடந்தது .

எது நடக்கிறதோ ,அது நன்றாகவே நடக்கிறது .

எது நடக்க இருக்கிறதோ ,

அதுவும் நன்றாகவே நடக்கும் .

உன்னுடையதை எதை இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு

எதை நீ படைத்திருந்தாய்? அது வீணாவதற்கு,

எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .

எதை கொடுத்தாயோ

அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

எது இன்று உன்னுடையதோ,

அது நாளை அடுத்தவருடையது,

மறு நாள் அது வேறொருவருடயதாகின்றது.

இந்த மாற்றம் உலக நியதியாகும்.

ஏனென்றால் இந்த ஒரு வாழ்வில் நாம் நினைத்து வருத்தப்படும் எல்லா விஷயத்தைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார் கண்ணன். எனவே உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எது நியாயம், எது தர்மம் என்று உணர்ந்து அதன் பின்னால் செல்வதே உத்தமம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன