கொரோனா வைரஸ் சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

  • by
what are the side effects of corona virus

உலகம் முழுக்க இருக்கும் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக ஏதோதோ மருந்துகளை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இதன் மூலமாக தீர்வுகள் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் பக்க விளைவுகள் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கிறது.

அரிசோனா குடும்பம்

அமெரிக்காவின் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைக் கேட்டு அரிசோனாவில் உள்ள ஒரு குடும்பத்தினர் மலேரியா மருந்து மற்றும் மீன்களுக்கு பயன்படுத்தும் மருந்து இரண்டையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் அந்தக் குடும்பத்தின் தலைவர் உடல் முழுவதும் விஷம் தாக்கி உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி மோசமான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இதுபோல் விபரீத முடிவுகளை எடுக்காமல் வைரஸ் தொற்றுக்கள் பரவியவுடன் மருத்துவமனைக்கு செல்வதே சிறந்தது.

மேலும் படிக்க – கோடைகாலங்களில் ஏற்படும் வியர்வையை தடுப்பது எப்படி..!

பக்கவிளைவுகள்

இப்போது உலகம் முழுக்க இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிக்கு மருந்துகளை கண்டு பிடித்து வருகிறார்கள். ஒரு சிலர் இதற்கான மருந்துகளை கண்டுபிடித்து விட்டார்கள், ஆனால் உலக சுகாதாரத் துறை இதற்கான முழு அனுமதி தரவில்லை இதற்கான காரணம் இது போன்ற பக்க விளைவுகள் தான். வைரஸை அழிப்பதற்கு பதிலாக மனிதனின் வாழ்க்கையை அழிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து மருந்துகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்கள். எனவே கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை எடுக்கும் இந்த ஆராய்ச்சியின் மூலம்தான் இந்த மருந்து உண்மையில் கொரோனா வைரஸை தடுக்கிறதா என்று உறுதியாக சொல்ல முடியும்.

பயத்தைப் போக்க வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிப்பை நாம் முடிந்தவரை தடுக்க வேண்டும். அப்படி நம்மை பாதித்து விட்டது என்று எண்ணினால் உடனே மருத்துவமனைக்கு செல்வதே சிறந்தது, தவிர்த்து அதை நினைத்து பயப்படக்கூடாது. உங்களுக்கு ஏற்படும் பயத்தினால் தான் தேவையற்ற முடிவுகளை எடுத்து உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே அழித்து கொள்கிறீர்கள். எனவே பயத்தை போக்கி தைரியமாக கொரோனா வைரசை எதிர்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

ஆரோக்கியமான உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்காது. எனவே உங்கள் உணவு வகைகளை சரியாக தேர்ந்தெடுத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள். தேவையற்ற மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்யாதீர்கள்.

மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகுதான் நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய மறுத்தால் நிச்சயம் உங்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு உங்கள் உயிரைக் குடிக்கும் அளவுக்கு மோசமானதாக மாறும். எனவே இதை கருத்தில் கொண்டு சரியான முடிவுகளை எடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன