யோகாவில் இருக்கும் அறிவியல்பூர்வ நன்மைகள்..!

  • by
Benefits of yoga

நம்முடைய முன்னோர்கள் உடலையும் உள்ளத்தையும் இணைப்பதற்காக யோகாவை பயன்படுத்தி வந்தார்கள். அதில் இருக்கும் நிலைகளை ஒரு சிலர் கேலி செய்து வந்தாலும் யோகாவில் அறிவியல்பூர்வமாக ஏராளமான ஆரோக்கிய குணங்கள் அடங்கியுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

வயதிற்கு ஏற்ப சரியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு by Anjanaa Annadurai | SparkLive Expert

உடல் எடையை குறைக்க முடியுமா? ஆசனங்களை செய்ய தொடங்குவதற்கு முன், தேவைக்கு ஏற்ப உடல் வளைவுகளை செய்ய வேண்டும். ஆசன நிலையில் இருந்து சூரிய நமஸ்காரத்தை செய்வது, வலிமையான யோகா போன்றவற்றை செய்வதன் மூலமாக உடல் எடையை நீங்கள் சுலபமாக குறைக்கலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தியானம், பிரணயமா, மற்றும் சிறிய உடற்பயிற்சி. போன்ற மூன்றையும் செய்து உங்கள் மனதிற்குள் இருக்கும் அனைத்து அழுத்தத்தையும் குறைத்து உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தத்தை குறைக்கும்

உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் யோகவை தங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே பயிற்சி செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களும் கூட மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாவை பின்பற்ற சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த ஏதேனும் சம்பவங்கள் உங்கள் மனதில் வருத்தத்தை உண்டாக்கினால் அதை யோகா பயிற்சி செய்வதின் மூலமாக நாம் குணப்படுத்தலாம்.

மன பதட்டத்தை கட்டுப்படுத்தும்

எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை நினைத்து அல்லது உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுவதால் ஏற்படுவதே மனப்பதட்டம். இதைப் போக்குவதற்கு நாம் யோகாவை சரியாக பயன்படுத்த வேண்டும். யோகா உங்கள் மனதில் உள்ள அனைத்து பிரச்சினையையும் தீர்க்க உதவியாக இருக்கிறது என்று ஏராளமான ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க – ஊரடங்கின் பொழுது உடல் பருமன் பிரச்சினையை தடுப்பது எப்படி..!

உடல் உஷ்ணத்தை குறைக்கும்

கோடைக் காலங்களில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கும் மற்றும் அதீத உழைப்பினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் நாம் யோகாவை தினமும் காலையில் பயிற்சி செய்ய வேண்டும். நாம் எப்படி நம் உடல் உஷ்ணத்தை சமமாக வைத்துக் கொள்கிறோமோ அப்பொழுது தான் நம்முடைய ஆரோக்கியமும் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் உடலையும் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள யோகா பயிற்சி மிகவும் அவசியம்.

இதயத்திற்கு உதவும்

உங்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சரியாக செலுத்த யோகா பயிற்சி உதவுகிறது. அதை தவிர்த்து இதயத்தில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும், அதன் உறுதித் தன்மையை அதிகரிக்க யோகா பயன்படுகிறது. இதயத்தில் உண்டாகும் எல்லா பிரச்சினையும் தீர்க்க யோகா அதிகமாக உதவுகிறது என பல ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக அதன் வீரியம் குறைந்து அதன் தாக்கம் தரத்தை குறைக்கின்றது.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரமாகவும் மற்றும் கௌரவமாகவும் வாழ வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் ஆரோக்யமாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல் அதில் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் உடல் மற்றும் மன பிரச்சனை அனைத்தும் தீர்ந்து எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள், இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உங்கள் அடுத்த தலைமுறைகள் உங்களை முன்னோடியாக பார்ப்பார்கள்.

கவலையை குறைக்கும்

எதிலும் நோக்கமில்லாமல் எந்நேரமும் கவலையாக இருப்பவர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா இயற்கையாகவே உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை வலுவாக்குகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செயல்பட்டு உங்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் எந்த கவலையாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் வாழ உதவுகிறது.

தூக்கப் பிரச்சனையை தீர்க்கும்

இரவில் தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது நள்ளிரவில் முழிப்பு வருபவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தாலே இரவில் உண்டாகும் தூக்கப் பிரச்சினை முழுமையாகத் தீரும். அது மட்டுமல்லாமல் உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனையையும் வலுப்படுத்தும்.

Yoga for sleep

சுவாசப் பிரச்சினை மற்றும் மயக்கத்தை தடுக்கும்

ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்வதன் மூலமாக அந்த பிரச்சனையை தாக்கத்தை குறைக்க முடியும். அதை தவிர்த்து தொடர்ந்து யோகா செய்து வந்தால் ஆஸ்துமா போன்ற பிரச்சினை முழுமையாக தீரும். அதேபோல் எதற்கெடுத்தாலும் தலைசுற்றல், மயக்கம் போன்றவைகள் உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை சமநிலையில் வைத்து உங்கள் எண்ணங்களை ஒழுங்காக பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஐந்து ஆசனங்கள்..!

இதை தவிர்த்து ஏராளமான அறிவியல்பூர்வ நன்மைகள் யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக நிகழ்கிறது. எனவே உங்கள் உடல் மற்றும் உள்ளத்தை எப்போதும் வலுவாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினமும் சிறிது நேரம் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் உடல்வாகு மற்றும் வயதிற்கு ஏற்ற யோகா பயிற்சியை பற்றி சிறந்த வல்லுநர்களுடன் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன