மாதுளம் பழத்தால் ஏற்படும் ஆபத்துகள்..!

what are the risks in eating pomegranate fruit

ஆரோக்கியமான பழம் என்று சொன்னாலே நம் மனதில் முதலில் தோன்றுவது ஆப்பிள் தான் அந்த வரிசையில் இப்போது எல்லோர் மனதிலும் தோன்றும் பழம் மாதுளை பழம். ஆப்பிள் பழத்திற்கு நிகராக மாதுளம்பழத்தின் விலையும் இருக்கிறது. இதை தவிர்த்து மாதுளையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளதால் சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை இதை அதிகமாக வாங்கி பயன் பெறுகிறார்கள். ஆனால் இதில் சில தீமைகளும் இருக்கின்றன அது நமது உயிரையும் குடிக்கும் அளவுக்கு கொடுமையானது, அது என்னவென்று பார்ப்போம்.

மாதுளை பழம் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் இதனால் அவர்களுக்கு சருமம் அரிப்பு, தொண்டை எரிச்சல், வீக்கம், வயிற்று வலி மற்றும் தேம்பல் போன்ற அறிகுறி மூலமாக நமக்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போன்ற ஏதாவது உங்களுக்கு நேர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், ஏனென்றால் இது போன்ற அலர்ஜி உங்களின் உயிரை குடிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறும்.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

மாதுளை பழத்தை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் ஏதாவது மருந்து மாத்திரையை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் நமக்கு வேறு ஏதாவது வியாதியின் மூலமாக பாதிப்புகள் இருப்பதினால் நாம் மருந்துகளை உட்கொள்வோம் அதன் சக்திகளை முறியடிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு எனவே இதைப்பற்றி உங்கள் மருத்துவருடன் நன்கு விசாரித்த பின்பு நீங்கள் மாதுளைப் பழத்தை அருந்தவேண்டும்.

மாதுளை பழம் உங்களின் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆனால் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது நல்ல விஷயமாகும் அதே சமயத்தில் ரத்தம் அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இது ஆபத்தாக மாற்றியமைக்கும். எனவே உங்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் அவ்வப்போது ஏற்படும் போது அந்த சமயங்களில் மாதுளை பழத்தை உண்பதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மாதுளைப் பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள் ஏனென்றால் இதை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோகியம் அதிகமாகும் அதே சமயத்தில் கர்ப்பிணி பெண் யாராவது அலர்ஜியினால் பாதிப்படைந்து இருந்தீர்கள் என்றால் இதை தவிர்க்க வேண்டும். இது உங்களை மட்டுமல்லாமல் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மந்தமாக்கிவிடும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் சர்க்கரையை இது குறைக்க உதவும். ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நம் உடலில் சர்க்கரையை அதிகரித்துவிடும். இது மட்டுமல்லாமல் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உங்கள் எடையை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மாதுளை பழத்தை முடிந்தவரை குறைவாக உட்கொள்ளுவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன