தைராய்டு பிரச்சனையை தடுப்பதற்கு வழிகள்..!

  • by
what are the remedies for thyroid

ஒவ்வொருவரின் உடலிலும் தைராய்டு சுரப்பது மிக முக்கியமான ஒன்று. இதனால் தான் அவர்களுக்கு ஆற்றல் சக்தி அதிகரிக்கிறது. அதேபோல் மூளை மற்றும் தசைகள் வளர்ச்சி, இருதய மற்றும் செரிமான நலன்கள் மற்றும் எலும்புகளை உறுதியாக்க என பல வழிகளில் நமக்கு உதவுகிறது. ஆனால் பல பேர்களுக்கு தைராய்டு சுரப்பி சுரக்காமல் அவர்களுக்குத் தைராய்டு மூலமாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அயோடின் குறைபாட்டினால் கிட்டத்தட்ட 30% பேர் தைராய்டினால் பாதிக்கப்பட்டார்கள். எனவே எதிர்காலத்தில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படி முன்னெச்சரிக்கையாக வாழலாம் என்பதை காணலாம்.

அயோடின் உணவு

சில வருடங்களுக்கு முன்பாக நாம் அயோடின் சத்துக்கள் பயன்படுத்தாத உப்புகளை அதிகமாக பயன்படுத்தி வந்தோம். இதன் மூலம் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்து அயோடின் உள்ள உப்பை மட்டும் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். இதனால் நாம் சமையலுக்கு பயன்படும் உப்பு அயோடின் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

குடல் பராமரிப்பு

தைராய்டு மூலமாக டி4 என்ற சுரப்பி ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இது உடலில் குறைவதனால் நமது குடல் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் மூலமாக தைராய்டு சுரப்பி போதுமான அளவு சுரக்காமல் நம் குடலை பெரிதாக பாதிப்படைய செய்கிறது. ஒருமுறை குடல் பாதிக்கப்பட்ட பிறகு தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக மாற்ற முயற்சி செய்தாலும் அது உங்களை பாதிப்படையச் செய்யும். இதை கருத்தில் கொண்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

கவலை மற்றும் மன அழுத்தம்

டி4 ஹார்மன்களின் உற்பத்தியை பாதிக்கச் செய்யும் மற்றொரு பிரச்சனை மன அழுத்தம். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு ஆர்வம் இல்லாமல் இருந்தால் மன அழுத்தப் பிரச்சினைகள் உண்டாகும். இதன் மூலமாக உங்களை தைராய்டு பிரச்சினையை எளிதில் தாக்கும்.

அதேபோல் கணவன் மனைவிகள் இடையே இருக்கும் உறவுகள் மகிழ்ச்சியாக இருந்தால் தைராய்டு பிரச்சனை ஏற்படாது. இல்லையெனில் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் டி3 குறைபாடுகள் ஏற்பட்டு தைராய்டு உண்டாகும்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தடுக்கும் உணவு

தைராய்டு பிரச்சனையை நாம் சரி செய்வதற்கு நாம் அதிகமான பச்சைக்காய்கறிகள் மற்றும் அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கு நாம் திணை, வேர்க்கடலை, முளைகள், கீரைகள், அடர் பச்சை இலை காய்கறிகளை உணவில் பயன்படுத்தி பிரச்சனையை வரவிடாமல் தடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அது என்னவென்றால் முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் ப்ரோக்கோலி இது உங்கள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும், இதனால் உடல் பருமன் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – வாழை இலையின் மகத்தான நன்மைகள்..!

புளித்த உணவுகள்

நம் உணவுகளில் புளிப்பை சேர்த்துக் கொள்வது நல்லது இதனால் தைராய்டு சுரப்பிகள் பாதிப்படையாமல் நம்மை பாதுகாக்கும். எனவே தைராய்டு சுரப்பினால் ஆபத்துகள் உங்களுக்கு ஏற்பட உள்ள நிலையில் இதுபோன்ற வழிகளை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன