கால் வலியை நிரந்தரமாக தீர்க்கும் வழிகள்..!

  • by
what are the remedies for leg pain

நாம் ஒரு நாளைக்கு அதிகமாக பயன்படுத்துவது நமது பாதங்கள் மற்றும் கால்களை தான். நமது முழு உடல் எடையையும் அதிக அளவில் சுமந்து செல்லும் இந்த கால்கள் மிக எளிதில் பாதிப்படைகிறது. அதிலும் உங்களின் எடை கூடுதலாக இருந்தால் உங்கள் கால்கள் ஒரு சில நிமிடங்களிலேயே வலிகளை உண்டாக்கி விடும். எனவே இது போல் எதற்கெடுத்தாலும் கால் வலி அல்லது நடக்கும்போது அசவுகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது சிறந்தது. அதைத் தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் உங்கள் கால் வலிகளை எப்படிப் போக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

வலி ஏன் ஏற்படுகிறது

எலும்பும் முட்டிகள் இணைப்புகளில் காயங்கள் ஏற்படும் பொழுது வலிகள் ஏற்படும், தசை அல்லது தசை நார்கள் கிளியும் பொழுது, ரத்த உறைவு அல்லது மோசமான ரத்த ஓட்டம் போன்ற காரணங்களினால் வலிகள் ஏற்படும் அல்லது ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலைகள் செய்வதின் மூலமாக வெரிக்கோஸ் போன்ற நோய்கள் ஏற்படும். இதனால் நமது முட்டி தேய்மானம் ஏற்பட்டு வலி ஏற்படும்.

மேலும் படிக்க – மூக்கடைப்பு மற்றும் சைனஸ்களிலிருந்து நிரந்தர தீர்வு..!

அரிசி ஒத்தடம்

உங்கள் முட்டிகளில் வலி அதிகமாக இருந்தால் அரிசியை வாணலியில் போட்டு நன்கு வறுத்து அதை மென்மையான துணியில் கொட்டி இறுக்கி பிடித்து கால்களின் மேல் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை இரண்டு முதல் மூன்று முறை செய்து வந்தால் வலி நிவாரணம் அடையும்.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ் என்பது இயற்கையாகவே வலிகள் ஏற்படும் இடங்களில் செய்யக்கூடியவை. இதன் மூலமாக நீங்கள் வீட்டிலேயே ஆயில் மசாஜ் செய்து வலி நிவாரணங்களை பெறலாம் அதற்கு வின்டர் கிரீன் ஆயில், வைட்டமின் ஈ ஆயில், வெஜிடேபிள் ஆயில் என இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து வலிகள் இருக்கும் இடங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை இரண்டு முதல் மூன்று முறை செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

மேலும் படிக்க – ஜப்பானிய குடிநீர் மருத்துவம்..!

யோகா பயிற்சி

எல்லா வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது யோகா பயிற்சி. இதை நீங்கள் தினமும் காலையில் எழுந்து 30 நிமிடங்கள் கால்களுக்கான யோகா பயிற்சி செய்யும்போது உங்கள் முட்டிகள் வலு அடைந்து வலிகள் குறையும். அதேபோல் அதிகாலை சூரிய ஒளியில் நின்று பயிற்சிகளை செய்யும்போது வைட்டமின் ஈ சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

நல்ல உணவுகள்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தினமும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். அதற்கு இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதை தொடர்ந்து உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்புகள் போன்றவைகளை சாப்பிடலாம். இரவில் உறங்கச் செல்லும்போது பாலில் மஞ்சள் கலந்து அருந்துங்கள், இதன் மூலமாக உங்கள் கால்கள் வலுவடையும்.

மேலும் படிக்க – வைரஸ் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் துளசி இலை.!

உப்பு, எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய்

அரிசியைப் போன்றே உப்பையும் அதாவது கல் உப்பையும் பானையில் போட்டு சூடு ஏற்றி பிறகு துணியில் கட்டி நம் கால்களின் மேல் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் சேர்த்து அதை வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி நிவாரணம் கிடைக்கும். எனவே இதை பின்பற்றி உங்கள் வலிகளை ஆரம்பத்திலேயே குறைத்து விடுங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில் எதற்கெடுத்தாலும் கால்களில் வலி ஏற்படுவதை தடுப்பதற்கு ஒரே வழி, வருமுன் காப்பது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன