தலைவலி வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்!!!

  • by
what are the reasons for headache

சிலர் தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் அதுவும் பலர்  தலைவலிக்கு என்று வீட்டில் மாத்திரையை வாங்கி அடுக்கி வைத்திருப்பார்கள். இது மட்டுமல்லாமல் தற்போது பெயின் கில்லர் என்பதை ஏதேனும் வலி ஏற்பட்டால் உடனே எடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இந்தப் பெயின் கில்லர் உடலுக்கு மிகவும் கேடானது. சில சமயங்களில் ஞாபக மறதியை கூட ஏற்படுத்தும். 40 வயதைத் தாண்டி விட்டாலே நரம்பு தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும். சிலருக்கு மைக்ரேன் எனக் கூறப்படும் ஒற்றை தலைவலி இருக்கும். அந்த வலியை அவர்களால் தாங்கவே முடியாது. அதனாலேயே பலர் இந்த பெயின் கில்லர் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். 

தலைவலி வருவதற்கான காரணம்

நம்முடைய தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டமானது சீரற்ற காணப்படுவதனால்,   அதுவே இந்த தலை வலி ஏற்பட காரணமாகிறது. அதிகம் நேரம் மொபைலை பயன்படுத்துவது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பது தான் கண்களில் உள்ள நரம்புகளை பாதித்து பார்வையில் மங்கல் தன்மையை உண்டாக்குகிறது. 

மேலும் படிக்க – கல் உப்பை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கண்களில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்தாலே இந்த தலைவலியை போக்கிவிடலாம். அதற்கு நீங்கள் அதிக நேரம் இந்த எலக்ட்ரானிக் சாதனங்களில் உங்கள் நேரத்தை செலவிட கூடாது. உங்களது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்கும் போது தலைவலி போன்ற பிரச்சினைகளை நாம் தடுக்க முடியும். 

சிலருக்கு சைனஸ் பிரச்சினை இருக்கும். இதனால் எப்பொழுதும் தலை பாரமாகவும் அல்லது காலை நேரங்களில் பாரமாகவும் காணப்படும். இந்த சைனஸ் பிரச்சினையால் ஏற்படும் தலைவலியை சரிசெய்ய மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதை காட்டிலும், யூகலிப்டஸ் தைலம் அல்லது ஆவி பிடிப்பது போன்ற முறைகளைக் கையாளலாம்.

தலைவலி பிரச்சினை தீர

தொடர்ந்து மூன்று நாட்கள் உங்களுக்கு தலைவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நலம். மைக்ரேன் தலைவலி ஏற்படுவதற்கு குறிப்பிட்ட எந்த காரணத்தையும் சொல்ல முடியாது, நமது மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த மைக்ரேன் தலைவலி உங்களுக்கு ஏற்படும். 

மேலும் படிக்க – கோடைகாலங்களில் ஏற்படும் வியர்வையை தடுப்பது எப்படி..!

சிலர் காபி டீ குடிப்பதன் மூலம் இந்த தலைவலியை சரிசெய்ய முடியும் என்று நினைத்து தொடர்ந்து அதை அருந்தி கொண்டே இருப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த பழக்கத்தை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால் அதற்குப் பிறகு காபி டீ குடிக்காமல் இருந்தால் தலைவலி ஏற்படும் என்ற நிலையை உங்களுக்கு உருவாக்கிவிடும். சிறு வயதிலிருந்தே சத்தான உணவு பழக்கங்களை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட முடியும். உங்களது குழந்தைகளுக்கு இப்பொழுது இருந்தே சரிவிகித உணவுகளை கொடுத்து பழகுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்தல், 8 மணி நேரம் முறையான தூக்கம் ஆகியவை உங்களுக்கு தலைவலி வராமல் உங்களை பாதுகாக்கும்.தலைவலியை  அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன