சந்திர கிரகணத்தின் போது சங்கடமா!

what are the problems for naksthara's during lunar eclipse

சந்திரகிரகணம் என்பது சூரியன் பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் தோன்றுவதால் ஏற்படுகிறது. ஆனால் சூரியகிரகணம் சந்திரகிரகணம் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சந்திரகிரகணம் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது அதுவே சூரிய கிரகணம் என்றால் சூரியனின் ஒலியை சந்திரன் மறைத்து பூமியை இருட்டு ஆக்கிவிடுகிறது. சந்திர கிரகணம் என்பது ஆண்டிற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஏற்படும் அந்த சமயங்களில் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் நம் மனநிலை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சந்திரனுக்கு என சொந்த ஒலிகள் கிடையாது இது சூரிய ஒளியை உள்வாங்கி இரவு நேரங்களில் நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. அதுவே சந்திர கிரகணத்தின் போது இது எந்த வெளிச்சத்தையும் உள்வாங்காமல் பூமியானது தடுத்து விடுகிறது. இதனால் நிலவு அச்சமயங்களில் ரத்த சிவப்பு நிறமாக அல்லது கருப்பாக காட்சியளிக்கிறது.

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

இன்று இரவு அதாவது ஜனவரி 10, 2020 ஆம் ஆண்டு இரவு 10.37 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 2.45 மணி வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும். மற்ற சந்திர கிரகணத்தை விட இந்தச் சந்திரகிரகணம் கூடுதல் கருப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள்.

சூரிய கிரகணம் போல் சந்திர கிரகணம் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதல்ல இதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால் இரவு நேரங்களில் நம் கண்களுக்கு எதுவும் தெரிய போவதில்லை. இதைத் தவிர்த்து இந்த சமயங்களில் நமக்கு தேவையான உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இந்நேரங்களில் உடலுறவை தவிர்ப்பது நல்லது.

இந்த சந்திர கிரகணத்தின் போது நம் கண்களுக்கு மிகவும் சிறிய அளவு நிலவே தெரியும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ஆனால் நாசா அமைப்பினர்கள் நாம் சந்திரனை முழுமையாக பார்க்க முடியாது என்கிறார்கள்.

மேலும் படிக்க – மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

சந்திர கிரகணத்தின் பொழுது எல்லா ராசிக்காரர்களும் பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் இதில் ஒரு சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது அவர்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கோட்டை, புரட்டாசி, அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. இதனால் இவர்களில் மன சங்கடங்கள் நீக்கி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதேபோல் இந்த சமயங்களில் கடல் சீற்றங்கள் சற்று அதிகமாகவே இருக்கும் எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன