கரோனா வைரஸ், முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்???

  • by
what are the precautions for corona virus

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள வூஹான் என்ற நகரில் முதன்முதலாக மக்களை பாதிக்கத் தொடங்கியது இந்த கோவிட் 19  வைரஸ். இன்று உலகம் முழுவதும் 114 நாடுகளில் பரவி மக்களை பாதித்துள்ளது இந்த கோவிட் 19. இந்த வைரஸ் பரவலை பதற்றம் அடையாமல் தடுப்பது எவ்வாறு என்பதை விளக்கும் பதிவு தான் இது.

அச்சத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது

கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் ஒரு வகையான தொற்று நோய் என்பதால் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக அளவில் பரவுகிறது.

மூக்கு, தொண்டை, சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் தொற்றுநோய் இது. இந்த காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட அவர்களையே அதிகமாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் குறைந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிகளவு கவலை கொள் வேண்டாம். இந்த கோவிட் 19 இந்தியாவில் மட்டும் 80 சதவீத சதவீதத்தினருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது.உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரண்டே வாரங்களில் குணம் அடைந்து விடலாம்.

கோவிட் 19 காய்ச்சல் உள்ளவர்கள் தும்மினாலோ இருமினாலோ சரி பரவும் நீர்த்துளிகள் மற்றவருடைய கண், நாசி,வாய் பகுதிகளில் பட்டால் காய்ச்சல் தொற்று ஏற்படும். இந்த வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபயோகிக்கும் பொழுது இந்த வைரஸ் வெகுவிரைவில் பரவுகிறது.

மேலும் படிக்க – ஆரஞ்சு பழம் சாப்பிடுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கரோனா வைரஸ் பரவுதல் பற்றிய தவறான கருத்துக்கள் 

இந்த வைரஸ் தொற்று நோய் வகையை சார்ந்தது என்பதால் நிச்சயமாக உணவின் வழியாக பரவாது. மேலும் கோழி, முட்டை இறைச்சி ஆகியவை சாப்பிடுவதாலும் இந்த வைரஸ் நிச்சயமாக பரவாது. இப்போது கேரளாவில் அதிக அளவு பாதித்து வரும் பறவைக்காய்ச்சல் காரணமாகவே இறைச்சியை தவிர்க்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இறைச்சியை தவிர்க்க இந்த வைரஸ் ஒரு காரணமாக இல்லை.

கோவிட் 19 காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடு 

சாதாரண வைரஸ் காய்ச்சல் இந்த வைரஸ் காய்ச்சலும் சற்று வேறுபட்டு தான் இருக்கிறது. இப்போது வரும் அனைத்து காய்ச்சல் மே இதுவாக தான் இருக்கும் என அஞ்சுவது தான் மிகவும் தவறு. மற்ற காய்ச்சலுக்கு எல்லாம் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொண்டால் படிப்படியாக சரியாகி விடுகிறது. ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் இதன் தாக்கம் 14 நாட்கள் நீடிக்கும். ஒருவேளை சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவை தொடர்ச்சியாக இருந்தால் பதற்றமடைய வேண்டாம்.

நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை ஆவி பிடியுங்கள்.

சுத்தமான நீரை அடிக்கடி பருகுங்கள்.

அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

இவை அனைத்தும் செய்த பின்னும் காய்ச்சல் தீவிரம் அடைவதாக தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஒருவருக்கு கடும் காய்ச்சல் இருப்பதாலேயே அவருக்கு கோவிட் – 19 வைரஸ் தாக்கிவிட்டதா முடிவு செய்து விடுவது தவறு. காய்ச்சல் வந்தவர்கள் எல்லாம் கோவிட் 19 வைரஸ் சோதனை செய்வது அவசியமானதாக இல்லை. அதை மருத்துவர்கள் மட்டும் தான் தீர்மானிக்க வேண்டும்.

சுய தூய்மை நோய்த்தொற்றை குறைக்கும் 

இந்த கரோனாவைரஸுக்கு இதுவரையிலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை இருப்பினும் நோய் தொற்று ஏற்பட்டு அவர்களில் 80 சதவீதத்தினர் பூரணமாக குணமடைந்து இருக்கின்றார்கள். வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணம் அடைய முடியும் .பூண்டு சாப்பிடுவதால் இந்த வைரஸின் தடுக்க முடியும் என்பது வதந்தி.

வெயில் காலத்திலும் இந்த வைரஸ் பரவாது என்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் அறிவியல் நிரூபணம் ஏதுமில்லை. இருப்பினும் வெப்பம் அதிகரித்தால் இந்த வைரஸ் பரவும் வேகம் குறையலாம் என்று கூறப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை பெருமளவு தவிர்க்கவேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்த உடனே உடைகளையும் உடனே மாற்றிவிட வேண்டும்.

கைகளை சோப்பு போட்டு கழுவி விட்ட பின்னரே நம்முடைய முகத்தில் கைகளை வைக்க வேண்டும்.

வெளியில் செல்லும் பொழுது முகவுரை அணிந்து செல்வது இன்னும் இந்த வைரஸ் நம்மை தாக்கா வண்ணம் பாதுகாக்கும்.

மேலும் படிக்க – புதினா இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

வீரியத்தன்மை இந்த வைரஸ் உள்ள சளி எச்சில் ,ஆகியன காகிதம், மரம், அட்டை, கண்ணாடி பிளாஸ்டிக் பொருட்கள் இரும்பு ஆகிய பொருள்கள் மீது படிந்தால் 8 முதல் 10 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். அப்போது அந்த பொருள்களை தொடர்பவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது. 

குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது 

இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தான் குழந்தைகளுக்கு பள்ளிகளில் விடுமுறை கொடுத்திருக்கின்றனர். ஆனால் நாம் இந்த விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா செல்வது குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும். முடிந்தவரை குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்து விளையாட வையுங்கள். சளி ,இருமல் உள்ள குழந்தைகளில் இருந்து அவரவர்

குழந்தைகளை தனிமைப்படுத்தி வைப்பது நல்லது .அவ்வப்போது சோப்பு போட்டு குழந்தைகளை கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள செய்யுங்கள். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன