மூலிகை பல்பொடியினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
what are the health benefits of using herbal tooth powder

நாம் பல்லை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்காக பலவிதமான மூலிகை பல்பொடி கிடைக்கின்றன. ஆனால் அதைத் துறந்து நாம் விளம்பரங்களில் காட்டக்கூடிய ரசாயனங்கள் அதிகளவில் கலக்கப்பட்ட பல் துலக்கும் சாதனங்களை பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் பற்கள் வெண்மையாக தெரிந்தாலும் அதன் ஆயுள் குறைவாகவே இருக்கும். எனவே எல்லோரும் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் மூலிகை பற்பொடி களைப் பயன்படுத்த வேண்டும். அப்படி நமக்கு சக்திகளை அதிகளவில் தரகூடிய பல்பொடிகளை நாம் இங்கே காணலாம்.

கருவேலங்குச்சி

கருவேல மரம் என்பது எல்லோரும் அறிந்திருப்பார்கள். இதிலிருக்கும் கருவேலங்குச்சிகளை உடைத்து நாம் அப்படியே பல் துலக்கலாம் இதிலிருந்து வெளிவரும் சாறு நமது பற்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்து உங்கள் பற்களை சுத்தப்படுத்தும். இதை காயவைத்து, பொடியாக்கி நம்ப பல் பொடியாகவும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – உடல் மற்றும் மனவலிமைக்கு எண்ணெய் (ஆயில்) மசாஜ்..!

வேப்பங்குச்சி

கிராமப்புறங்களில் இன்றும் பலரும் வேப்பங்குச்சியில் தான் பல்துலக்குகிறார்கள். இதிலிருக்கும் எதிர்ப்புத்தன்மை நம் பற்களில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்கிறது. அதை தவிர்த்து நம் பற்களை மிக ஆரோகியமாகவும் பார்த்துக் கொள்கிறது. எனவே நீங்கள் உங்கள் வீட்டு அருகில் உள்ள வேப்பங் குச்சியை உடைத்து அதில் பல் துலக்கினால் மிகவும் நல்லது. இல்லை எனில் அதை நன்கு காய வைத்து உலர்த்தி அதனை பொடி செய்து பல் துலக்கலாம்.

ஆலங்குச்சி

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள் அதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதுதான் இந்த ஆலங்குச்சி இதை எடுத்து பல் துலக்கினால் பற்களுக்கு மிகவும் நல்லது.

இதைத் தவிர்த்து நாம் சில மூலிகைப் பொடிகளை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம் அதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையை காணலாம்.

ஒளசதம் பற்பொடி

ஒளசதம் பற்பொடியை செய்வதற்கு நமக்கு சில மூலிகைப் பொருட்கள் தேவை. படிகாரம், மிளகு, சாம்பிராணி, இந்துப்பு, ஓமம், கிராம்பு, வேப்பம்பட்டை போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாக அரைத்து பல்பொடியாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – காய்ந்த நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

தந்த தானம் சூரணம்

இதை செய்வதற்கு நமக்குத் தேவையானவை கடுக்காய், நெல்லிக்காய், தன்றிக்காய், மாசிக்காய், ஜாதிக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், லவங்கம், லவங்கப்பட்டை, கற்பூரம், நெல் பதர் சாம்பல், இந்துப்பு போன்றவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இதைக் கொண்டு பல்துலக்கினால் பல பலன்கள் கிடைக்கும்.

இது போன்ற ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு பல் துலக்கினால் பல் கூச்சம், பல்வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற அனைத்தையும் போக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன