உணவை விரைவாக சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்.!

what are the effects to your body while eating in a hurry

நம் வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவை மிக விரைவில் எடுத்துக்கொள்கிறோம். இதற்கான காரணம் நமக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை, படிப்பவர்களும் தாங்கள் விளையாடுவதற்கு நேரம் குறைவாக இருப்பதால் உணவை விரைவாக எடுத்துக்கொள்கிறார்கள். இதுவே வேலைக்கு செல்பவர்கள் இதே தவறுகளை செய்கிறார்கள். எனவே நம் உணவை விரைவாக எடுப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க – மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

நாம் அதிவிரைவில் உணவை உட்கொள்வதன் மூலம், நம் மூளைக்கு நாம் எந்த அளவு உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பதற்கான புரிதலை மிகத் தாமதமாகவே ஏற்றுக்கொள்கிறது. இதனால் நமக்கு போதுமான உணவு அளவு என்பதை கணக்கிடுவதற்கு முன்பாகவே நாம் உணவை அதிகமாக உட்கொண்டு விடுகிறோம். இதனால் நமது உடல் எடை பலமடங்கு அதிகரித்து விடுகிறது.

உணவை நாம் வேகமாக உன்னுவதால் நமக்கு ஜீரணக்கோளாறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எப்போது நாம் கட்டுப்பாடில்லாமல் அதிகமான உணவை வாயில் தினிக்கிறோமோ அப்போது நமது செரிமான பிரச்சனை ஏற்பட்டு தொண்டையில் உணவு அடைத்துக் கொள்கிறது. இதனால் நாம் தண்ணீரோ அல்லது தேவையற்ற குளிர் பானங்களை விழுங்கினால் நமது உடல் செரிமானத்திற்ல்க்கு அது உகந்ததாக இல்லாமல் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நமது வயிறு பெரிதாகி நமது உடல் பருமனாக பிரச்சனைக்கு உள்ளாகிறது.

மேலும் படிக்க – கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

வேகமாக உணவு அருந்துவதன் மூலம் நமது ரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே நாம் எப்போதும் மெதுவாக சாப்பிடுவதையே கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அந்த நேரத்தில் எந்த அளவு உணவை உங்களால் உன்ன முடியுமோ அதை மெதுவாக மென்று விழுங்குங்கள். இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் உங்கள் ஆயுளையும் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன