இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும்….. தீர்வுகளும்….!

what are the effects of not having proper sleep

நாங்க அமெரிக்கா கம்பெனிக்கு இங்கே, இருந்து வேலை பார்க்கிறோம்.
இதுதான் வேலை பகலில் தான் தூங்க முடியும்! என்பார் ஒருவர்.

நான் இந்திய கம்பெனியில் தான் வேலை பார்க்கிறேன் ஆனால், நள்ளிரவு
வரை வேலை பார்த்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன் என்பார்
இன்னொருவர்.


எனக்கு அந்த மாதிரி பிரச்சினைகள் எதுவும் இல்லை ஆனால் புரண்டுபுரண்டு படுக்கிறேன். தூக்கம் வரவே மாட்டேங்குது! என்போர் பலர்.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?


தூக்கத்தின் அவசியம்; வெற்றிலையில் மை தடவி பார்த்தது முதல் இன்று
எம்.ஆர்.ஐ ஸ்கேன் இல் உற்றுப் பார்த்தாலும், மொத்த உடல் எடையில் 2%
மட்டுமே உள்ள இந்த மூளை எப்படி மலைக்கவைக்கும் அளவு எப்படி
வேலை செய்கிறது என்பது மட்டும் புரியாமலேயே புரியாத புதிராகவே
இருக்கிறது. உலகின் மிக உன்னத இயந்திரமான அந்த மூளையின் தங்கு
தடை இல்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த உறக்கம் அது அவசிய தேவை.
நான் உற்சாகமாக சிந்திக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தும்,
நோயில்லாத வாழவும், உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளை
எல்லாம் தேவையான அளவில் சுரக்க தூண்டும் இந்த இரவு உறக்கம்  மிக
முக்கியமே!


எது நல்ல தூக்கம்       

நள்ளிரவு வரை டிவி யுடனும், கைப்பேசி யுடனும்
போராடிக்கொண்டே அசந்து தூங்கி விடுவதற்கு பெயர் தூக்கம் அல்ல.
விடிவெள்ளி வெளிச்சம் கூட இல்லாத இருட்டில்தான் வரும் தூக்கத்திற்கு 
தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சத்து
சுரக்குமாம். சின்ன வெளிச்சத்திலும் அந்த சுரப்பு குறைந்துவிடும் என்கிறது
நவீன விஞ்ஞானம். அந்த மெலடோனின் சத்து தான் இரவில் நம் உடல்
இயந்திரத்தை சர்வீஸ் செய்து மறுநாள் ஓட்டத்துக்கு தயார் நிலையில்
வைக்கிறது.


கேன்சர் போன்ற பல வியாதிகளை வர விடாமல் தடுக்கிறது. அந்த
மெலடோனின் பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினாலும் கூட சுரக்காது. முதலில் கூறிய மூன்று ரகத்தினருமே,மெலடோனின் சுரப்பில்
பிரச்சினை இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளவர்கள்.

மேலும் படிக்க – வாழையின் வனப்பு சோலைபோல் உடலுக்கு தரும் செழிப்பு..!


தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்                    

தூக்கம் இல்லாமை முதலில் வாய்வு தொல்லை தரும்.ரத்தக் கொதிப்பை
உண்டாக்கும். தொடர்ந்து  நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்தும்.                 
தூக்கமில்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். இறுதியாக மன
உளைச்சலை தொடர்ந்து மன வியாதியில் கொண்டுபோய் நிறுத்தும்.
சட்டையை கிழித்துக்கொண்டு பலர் இவர்கள்தான் மன வியாதி
உடையவர்கள் என பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் நம்மில்
ஐந்தில் ஒருவர் மன நோயாளியாக தான் இருக்கிறோம். தூக்கமில்லாமல்,
அகமகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல் எதற்கும்
புன்னகைகள் எதிலும் நிறைவு கொள்ளாமல் நம்மில் பலர் மன
நோயாளியாக தான் இருக்கிறோம். அதற்கு தூக்கமின்மையை மிக மிக
முக்கிய காரணம்.


நல்ல தூக்கத்தைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள்; தூக்கம் வரும்
போது தூங்கிக் கொள்ளலாம் என்பது உடம்புக்கு நல்லதல்ல . இரவு
உணவை புரோட்டாவில் தொடங்கி பலுடா வில் முடிக்கும் பழக்கம்
தூக்கத்துக்கு நிச்சயம் எதிரி.

புரோட்டா ஜவ்வாக இழுத்து இழுப்புக்கெல்லாம் வர அதிலுள்ள குளூட்டூன்
என்ற ஒருவகை புரதம் அதிகமாக சேர்க்கப்படுவது தான். சிலருக்கு
ஜீரணத்தையும் ஒரு சிலருக்கு குடல் புற்றையும் பரிசு அளிக்கும்.
குளூட்டூன் ஜீரணத்தை தாமத படுத்துவதால் தூக்கம் கண்டிப்பாக கெடும்.
கீரை வகை உணவுகள் அதிக கொழுப்பு கொண்ட இறைச்சி உணவுகள்
இவைகளை தவிர்ப்பது இன்னும் நலம் பயக்கும் .இரவு நேரங்களில்
எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய ஆவியில் வேகவைத்த இட்லி இடியாப்பம்
போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும்
அதோடு இல்லாமல் இரவு உறக்கம் இனிமையானதாக இருக்கும்.

மேலும் படிக்க – பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!


உறக்கத்தை ஒழுங்குபடுத்த சில டிப்ஸ் ;

ஆழ்ந்த தூக்கத்திற்கு தினசரி நடைப்பயிற்சி மிகவும் அவசியம். தினசரி 45
நிமிடங்கள் தூக்கத்தை சீர்படுத்தும். மனதை ஒருமுகப்படுத்தி
தூங்கவைக்கும்.

கம்பு குருணை அரிசியில், வெங்காயம், மோர் சேர்த்து பிசைந்த சோறு
சாப்பிட்டு பாருங்கள் கடைசி உருண்டை சாப்பிடுகையில் கொட்டாவியும்
கூடவே சேர்ந்து வரும்.

அலுவலகத்திலிருந்து திரும்பி வர தாமதமாகும் என்பவர்கள் இரவு
உணவை அலுவலகத்தில் ஏழு அல்லது எட்டு மணிக்குள் சாப்பிட்டு
விடுங்கள். உறங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிடுங்கள். இது
உறக்கத்திற்கும், உடல் நலத்துக்கும் சாலச்சிறந்தது.

ஜாதிக்காய் தூள் போட்ட பால், அமுக்கர கிழங்கு பொடி , மாதுளை பழம் இனவ
எல்லாம் தூக்கம் வரவழைக்கும் தூக்கம் மருந்தில்லா உணவுகள். உங்களை
குழந்தைகளை அன்புடன் அரவணைப்புடன் தூங்கவைக்க அன்றைய நாள்
பொழுதில் நடந்த ஏதோ ஒரு விஷயத்தை வைத்து அவர்களை பாராட்டுங்கள் அது
அவர்களின் இரவுத் தூக்கத்தை குட்நைட் ஆக மாற்றும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன