காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

what are the dimensions of love

தெரிந்து கொள்ள வேண்டிய காதல் பரிமாணங்கள்

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஒருவர் முழுமையாக காதலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இயலாத காரியம். ஏனென்றால், காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். இது அவர்களுக்கு ஒவ்வொரு உணர்வையும் ஏற்படுத்தும் இதனால் காதல் என்பது இதுதான் என்று ஒரு சொல்லில் அடக்க முடியாது, ஆனால் எத்தனை விதமான காதல்கள் இருக்கிறது என்பதை நாம் அறியலாம். இதில் உங்கள் காதல் எது போன்றது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

பழங்கால கிரேக்கர்கள் காதல் எட்டு வகையாகப் பிரிக்கிறார்கள். 

அகப்பே காதல், அகப்பே காதல் என்பது காதல் வகையில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான காதல். உங்கள் காதலன் அல்லது காதலி சுயநலம் அற்ற முறையில் உங்களை காதலிக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த வகையான காதலையே உங்கள் மேல் காண்பிக்கிறார்கள். சுயநலமற்ற காதல் என்பது தங்களைப் பற்றி எண்ணாமல் உங்களின் சந்தோஷம் மற்றும் உங்கள் சுதந்திரத்தை பற்றி என்னி அதற்கான உதவிகளை செய்பவர்கள். இவர்கள் உங்கள் மேல் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள், இவர்களும் நேர்மையாக நடந்து கொள்வார்கள். இதுபோன்றவர்கள் உங்களுக்கு கிடைத்தால் அவரை தவறவிடாமல் திருமணம் செய்து கொள்வது நல்லது.

மேலும் படிக்க – உணர்வுகளின் சங்கமத்தில் உதிப்பது காதல்

ஏரோஸ் காதல், இந்த வகை காதல், முழுக்க முழுக்க உடல் சார்ந்ததாகவே இருக்கும். அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் ஏற்பட்டுவிட்டது என்று சொல்வான் ஆனால் உண்மையில் இந்த காதல் அவளின் அழகு மற்றும் உடலை சார்ந்ததாகவே இருக்கும். அதே போல் ஒரு பெண் ஒரு ஆணை பார்த்தவுடன் காதல் வந்துவிட்டது என்று சொன்னால் அது அவன் உடல் கட்டுமானம் மற்றும் முக அழகை பொருத்து இருக்கும். இதுபோன்ற காதலர்கள் முழுக்க முழுக்க தொடுதலையும், தடவுதலையும் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் உறவில் ஆழமாக சென்று விட்டால் இவர்களை பிரிப்பது என்பது கடினமானது. அதேசமயத்தில் காதலில் தொய்வு ஏற்படும் போது இவர்களின் கவனம் வேறொருவர் மேல் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஸ்டோர்ஜ் காதல், எல்லோரும் விரும்பும் காதல் வகையை சேர்ந்தது இது. ஏனென்றால், நண்பர்கள் நிச்சயம் எல்லோருக்கும் இருப்பார்கள். ஆனால் அந்த நண்பர்களே நமக்கு காதலன் அல்லது காதலியாக கிடைக்கும் பொழுது அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இருக்காது. ஏனென்றால், நம்மை முழுமையாக புரிந்து நமக்கென தனி சுதந்திரம் அளிப்பவர்கள் இவர்கள்தான். அதுமட்டுமல்லாமல் நண்பர்கள் எப்போதும் தங்களை முழு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிக்க மாட்டார்கள் நாம் செய்யும் செயல்களை மதித்து அதற்க்கான சுதந்திரத்தை அளிப்பார்கள். ஆனால் ஒரு சில நண்பர்கள் காதலர்கலாக மாறிய பின்பு அவர்களின் குணமும் மாறிவிடும். இதுபோன்ற மாற்றம் ஏற்படுபவர்கள் தங்கள் உறவை நன்கு உணர்ந்து உங்கள் காதலை வலிமையாக்கும்.

பிரக்மா காதல், இந்த வகை காதலை ஒரு சிலர்கள் காதல் என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், இது ஒருவரை காதலிக்கும் முன் அவரின் பொருளாதாரம், குணம், எதிர்காலம் என அனைத்தையும் அறிந்து காதலிப்பார்கள், கிட்டத்தட்ட இது பெரியவர்களால் நிச்சய செய்யப்படும் கல்யாண போன்றது. ஆனால் இதை இருவர் தங்களின் சுய முடிவில் தேர்ந்தெடுப்பதினால் காதல் வகையில் சேர்ந்துவிடுகிறது.

லூட்ஸ் காதல், இந்தக் காதலை ஏதோ கடமைக்கு என்று காதலிப்பார்கள். காதல் என்பது இருவருக்கும் ஏற்படும் ஒரு உணர்வு ஆனால் ஒருவருக்கு முதலில் ஏற்பட்டு விட்டு தன் காதலை மற்றொருவரிடம் சொல்லும்போது அவர் உங்களை காதலிப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நாளடைவில் உங்களுக்கு ஏற்பட்ட அளவிற்கு காதல் அவர்களுக்கு ஏற்படாது இதனால் காதலில் அதிக நாட்டத்தைக் கொள்ளாமல் ஏதோ கடமைக்கு என்று உங்களை காதலிப்பார்கள். உங்களிடம் அவர்களின் ரகசியத்தை சொல்ல மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷம், துக்கம் என எதையும் பகிராமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை காதலித்து விட்டு செல்வார்கள். இதுபோன்ற காதலி அல்லது காதலன் எப்போது வேண்டுமானாலும் உங்களை விட்டு பிரிந்து செல்லலாம். எனவே இருவருக்கும் காதல் உணர்வு ஏற்படும் வரை காத்திருந்து காதலை வெளிப்படுத்துங்கள், இல்லையெனில் அவர்கள் உங்கள் காதலை உணரும் வரை காத்திருங்கள்.

மேனியா காதல், காதலித்து சில நாட்களிலேயே உங்களை முழு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் வேறு ஏதாவது நபர்களுடன் பேசினால் உங்களிடம் சண்டையிட்டு தங்களிடம் பேசுமாறு சொல்வார்கள். என எதற்கெடுத்தாலும் சந்தேகம், சண்டை, உங்கள் கருத்தை அலட்சியப் படுத்துவது, என உங்களுக்குப் பிடிக்காதவற்றை மற்றும் எரிச்சலூட்டும் விஷயங்களையே செய்வார்கள். கடைசியில் இது அனைத்தும் உங்கள் மேல் வைத்திருக்கும் அதிக அளவிலான காதலினால் இதுபோன்ற செயல்களை செய்கிறேன் என்று தங்களையும், உங்களையும் சமாதானப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற காதல், சகிப்புத் தன்மை இருந்தால் மட்டுமே வெற்றி அடையும்.

பிலியா காதல், இது காதலன் காதலிக்கு இடையே ஏற்படும் காதல் அல்ல சகோதரன், சகோதரி, தாய், தந்தை, விலங்குகள் போன்ற எல்லாவற்றின் மீதும் ஏற்படும் காதல். இது பரிசுத்தமானது, இதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை மட்டுமே வெளிப்படுத்தும்.

மேலும் படிக்க – மோசமான நிலையில் இருக்கும் உங்கள் காதலை எப்படி காப்பாற்றுவது?

பிலாவ்டிய காதல், ஒரு சுய காதலாகும். ஒரு சிலர் யாரை காதலித்தாலும் அதை அனைத்தையும் விட தங்களை அதிகமாக காதலிப்பார்கள். எதுவாக இருந்தாலும் தங்களுக்கு பிறகுதான் என்ற சுயநல எண்ணத்தில் இருப்பார்கள். இது போன்ற சுயநல காதல் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பது கொஞ்சம் ஆபத்து தான்.

காதல் என்பதும் ஒரு விதமான அறிவு ஆனால் இந்த அறிவு உங்கள் மூளையிலிருந்து வெளிப்படுவதில்லை, உங்கள் இதயத்தில் இருந்து வெளிவருவது. எனவே இந்த உணர்வை சரியாக புரிந்து கொண்டு சரியான நபர்களை தேர்ந்தெடுத்து சரியான முறையில் காதலியுங்கள். அதை தவிர்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவர்கள் மேல் திணித்து உங்களின் மேல் வைத்திருக்கும் காதலை அழித்து விடாதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன