சிவலிங்கத்தில் இருக்கும் வகைகள்..!

  • by
what are the different types of shiva lingam's

இந்தியாவைத் தவிர்த்து உலகம் முழுக்க அதிகளவிலான பக்தர்களை கொண்டவர்தான் சிவபெருமான். இவருக்கான தளங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கின்றன, அதில் உத்தர் பிரதேசத்தில் உள்ள வாரணாசி சிவனுக்கான உலகம் என்றே சொல்லலாம். இங்கு சிவன் பக்தர்களான பல அகோரிகள் இங்கே சிவனை வழிபட்டு வருகிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமானை லிங்க வடிவிலும் வழிபடுகிறார்கள். இத்தகைய சிவபெருமானின் லிங்கங்கள் எல்லா சிவன் ஆலயங்களிலும் இருக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த லிங்கத்தில் மொத்தம் ஆறு வகைகள் உள்ளன அவைகளை இங்கே காணலாம்.

சுயம்பு லிங்கம்

சுயம்பு லிங்கம் என்பது இயற்கையால் உருவானது. இயற்கை மாற்றத்தினால் பாறைகள் மற்றும் மதிப்பிற்குரிய கற்கள் தானாக சிவலிங்கம் வடிவில் காலப்போக்கில் உருவாகிவிடும். இப்படி இயற்கையினால் உருவான லிங்கத்தை சுயம்பு என்பார்கள்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

தெய்வீக அல்லது திவ்ய லிங்கம்

தெய்வீக லிங்கத்தை உருவாக்கியவர்கள் கடவுள்களே, உதாரணத்திற்கு சிவனுக்காக அவரின் மனைவி பார்வதி இத்தகைய சிவலிங்கத்தை உருவாக்கினார் என்று பலராலும் நம்பப்படுகிறது. இதைத் தவிர்த்து கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த லிங்கம் இப்போதும் பல சிவாலயங்களில் இருக்கின்றது.

மனுஷ்ய லிங்கம்

மனுஷ்ய லிங்கம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இதை வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் அல்லது ஊர் முழுக்க நன்கொடைகள் செலுத்தி உருவாக்கப்பட்ட லிங்கமாக இருக்கும். இப்போது புதிதாக கட்டப்படும் எல்லா சிவாலயங்களிலும் இதுபோன்ற லிங்கத்தை தான் உருவாக்குகிறார்கள்.

ஹர்ஷகா லிங்கம்

ஹர்ஷகா லிங்கத்தை அகத்தியர்கள் போன்ற முனிவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் சிவன் மீது கொண்ட அளவற்ற பக்தியினால் சிவலிங்கத்தை உருவாக்கி நீண்ட வருடங்கள் தவம் இருப்பார்கள்.

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

ராட்சச லிங்கம்

ராட்சச லிங்கத்தை அசுரர்களினால் உருவாக்கப்பட்டது. உதாரணத்திற்கு இந்த லிங்கத்தை ராவணன் உருவாக்கியது போல். இதுபோன்ற அசுரர்களும் சிவலிங்கத்தை வணங்கி வந்தார்கள்.

பான லிங்கம்

பான லிங்கம் பெரும்பாலான நதிகளில் இருந்து கிடைக்க படுவது. அசுரர்கள் மற்றும் தேவர்கள் சிவ லிங்கத்தை பிராத்தனை செய்து நதிகளில் கலந்து விடுவார்கள். இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிவலிங்கங்கள் கங்கை, காந்தகி, கோமுகி போன்ற நதிகளில் இருக்கின்றது.

மொத்தம் ஆறு வகையான சிவலிங்கத்தை சிவனை பிரார்த்தனை செய்பவர்கள் இன்றும் அதற்கான இடங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புத் தன்மை இருக்கிறது. அதைத் தெரிந்து ஒரு பிரார்த்தனை அல்லது தவமிருந்து நீங்கள் நினைத்ததை அடையலாம் என்று அகோரிகள் நம்புகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன