லிப்ஸ்டிக்கில் இருக்கும் வகைகள்..!

  • by
what are the different types of lipstick

பெண்கள் அழகை அதிகரிக்க உதவுவது அவர்களின் உதடுகளில் போடப்படும் லிப்ஸ்டிக் தான். சாதாரணமாக ஒரு பெண் முகத்தில் எந்த ஒரு ஒப்பனை களையும் செய்யாமல் லிப்ஸ்டிக் மட்டும் அணிந்தால் அவர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். இப்படிப்பட்ட லிப்ஸ்டிக்கில் ஏராளமான வகைகள் உள்ளது அதை ஒவ்வொன்றாக இங்கே காணலாம்.

சீர் லிப்ஸ்டிக்

இந்த வகை லிப் ஸ்டிக்கை தான் பெண்கள் எப்போதும் முதலில் தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால் இது ஒருவிதமான மினுமினுப்பு உண்டாகும். அதைத் தவிர்த்து பார்ப்பதற்கு மென்மையாகவும் தோன்றும். இந்த லிப்ஸ்டிக்கை பெண்கள் குறுகிய நேர கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலும் படிக்க – பழைய வெள்ளி நகைகளை புதுப்பிக்கும் வழிகள்..!

மேட் லிப்ஸ்டிக்

மேட் லிப்ஸ்டிக் மினுமினுப்பை தராது ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது போன்ற லிப்ஸ்டிக்கை அலுவலகத்திற்கு அல்லது ஏதேனும் உரையாடல்களுக்கு பயன்படுத்துவார்கள். மேட் லிப்ஸ்டிக் பெண்கள் பேண்ட் மற்றும் சட்டைகள் அணியும் பொழுது பயன்படுத்துவார்கள்.

கிளாசி லிப்ஸ்டிக்

இந்த வகை டிப்ஸ்களை சினிமா நடிகைகள் அல்லது கவர்ச்சியாக தோற்றத்தை வெளிப்படுத்தும் பெண்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். இதை பார்த்தவுடன் ஆண்கள் உருவி விடுவார்கள் அத்தகைய ஈரப்பத தன்மையைக் கொண்டது தான் இந்த லிப்ஸ்டிக்.

கிரீமி லிப்ஸ்டிக்

இந்த வகை லிப்ஸ்டிக் ஒருவிதமான மெழுகுகளை கலந்த தயாரிப்பார்கள். இது பார்ப்பதற்கு கிளாஸ்சாகவும் மற்றும் மினுமினுப்பாகவும் இருக்கும்.

ஸ்டெயின் லிப்டின்ட்

இந்த வகை லிப்ஸ்டிக் வண்ணங்களை அதிகமாக எடுத்துக் கொடுக்கும். நீங்கள் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த வகையில் லிப்ஸ்டிக் உங்களுக்கு உதவும். காலையில் ஒரு முறை போட்டால் போதும் மாலை வரை இந்த லிப்ஸ்டிக் உங்கள் உதட்டில் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க – 40 வயதிலும்  முகம் பொலிவுடன் இருக்க 20 வயதில் இருந்தே உண்ண வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா???

லிக்விட் லிப்ஸ்டிக்

லிக்விட் லிப்ஸ்டிக் நம் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் இது சில சமயங்களில் உங்கள் வாய்க்குள் நுழைந்து விடும். இதுபோன்ற லிப்ஸ்டிக் ஒரு சில மணி நேர பயன்களுக்காக பயன்படுத்துவார்கள். அழகு போட்டியில் கலந்துகொள்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவது இந்த லிப்ஸ்டிக்தான்.

இதைத் தவிர்த்து ஒரு சில பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தாமல் லிப் பாம் போன்றவைகளை பயன்படுத்துவார்கள். அது பார்ப்பதற்கு கண்ணாடி போல் இருக்கும். எனவே நீங்கள் எந்த வகை லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் இரவு உறங்குவதற்கு முன்பு அதை அகற்றி விட்டு உறங்குவது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன