ஹெல்மெட்டில் இருக்கும் வகைகள்..!

  • by
ஹெல்மெட்

இன்று பலபேர் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் ஹெல்மெட் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஹெல்மட் அணிவதால் நமது தலையை பாதுகாப்பது மட்டுமில்லாமல் நம்முடைய ஆயுளையும் அதிகரிக்கலாம். நாம் என்னதான் திறமையாக வாகனத்தை ஓட்டினாலும் நமது நேரம் சரியில்லை என்றால் எதிரில் வருபவர்கள் கூட நமக்கு ஆபத்துக்கள் உண்டாக்கலாம். எனவே ஹெல்மெட்டை எப்போதும் அணிந்திருப்பது சிறந்தது.

ஹெல்மெட் வரலாறு

1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த மோட்டார் சைக்கிள் போட்டியில் பலரும் கீழே விழுந்து காயப்பட்டார்கள், அதில் பெரும்பாலானோருக்கு தலையில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட மருத்துவர் “எரிக் கார்னர்” தலையில் ஏற்படும் காயங்களை குறைப்பதற்காக தலைக்கவசம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டார். அதை ஹெல்மெட் தயாரிக்கும் வல்லுநர்களிடம் அணுகி சவுகரியமான ஹெல்மெட் ஒன்றை உருவாக்கினார். ஆனால் அதை முதலில் அனுமதிக்காத அரசாங்கம் பிறகு விபத்துகள் அதிகமாக இருப்பதனால் அதை அனுமதித்தது. 1950ம் ஆண்டு முகம் முழுக்க மூடக்கூடிய ஹெல்மெட் அறிமுகமானது. பின்பு 1954ம் ஆண்டு உற்பத்தி அதிகரித்து உலகெங்கும் ஹெல்மெட் பரவத் தொடங்கியது.

மேலும் படிக்க – வாழ்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வழிகள்

ஹெல்மெட்டில் இருக்கும் வகைகள்

ஹெல்மட் கிட்டத்தட்ட ஐந்து வகைகளாக தயாரிக்க படுகிறார்கள். அதில் முதல் வகை, பெண்கள் அணியும் ஹெல்மெட் அது தலையை மட்டும் பாதுகாக்கும். இரண்டாவது வகை ஹெல்மெட் கிட்டத்தட்ட இதே போன்று தான் ஆனால் ஆண்கள் அணியும்  ஹெல்மெட் இதுவும் தலையை மட்டும் பாதுகாக்கும். பின் மூன்றாம் வகை ஹெல்மட் உருவாக்கப்பட்டது இது தலை மட்டுமல்லாமல் முகம் முழுக்க பாதுகாக்கும். அதைத்தொடர்ந்து நான்காம் வகை ஹெல்மெட் முகம் முழுக்க பாதுகாத்தாலும் தேவைப்படும்போது முகத்திரையை அகற்றி கொள்ளலாம். கடைசியாக இருக்கும் ஹெல்மட் விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஹெல்மெட் இது இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்களின் வாகனத்திற்கு ஏற்றார்போல் பிரம்மாண்டமாக தயாரிப்பார்கள்.

ஹெல்மெட் தயாரிக்கும் முறை

ஆரம்பகாலத்தில் இரும்புகளை கொண்டு ஹெல்மட் தயாரித்து வந்தார்கள். ஆனால் அதன் எடை அதிகமாக இருப்பதினால் நம்முடைய கழுத்துப்பகுதி பாதிப்படைந்தது. இதனால் நவீன கால ஹெல்மெட்டை பிளாஸ்டிக், கண்ணாடி இழைகள், கெவலர் மற்றும் கார்பன் போன்ற மூலப் பொருள்களை வைத்து தயாரித்தார்கள். இதனால் நம்முடைய முகம் மற்றும் தலை செளகரியமாகவும், பாதுகாப்பாகவும் இருன்த்தது.

ஹெல்மெட்டின் தரம்

இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் அவர்களுக்கு ஏற்றால் போல் வடிவமைத்துக் கொண்டார்கள். இது எல்லா அளவிலும் கிடைக்கிறது ஆனால் இதன் தரம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் தரம் பாதுகாப்பு நிறுவனம் இ சி இ அல்லது டி ஒ டி போன்ற தரநிலை கொண்டு ஹெல்மெட்டை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். என்னதான் நாம் தரமான ஹெல்மெட் வாங்கினாளும் அதனுடைய பெல்டை அணியவில்லை என்றால் அது பாதிக்கப்பற்றதாக மாறும்.

மேலும் படிக்க – மூவாயிரம் வருடம் பழமையான மம்மிகள்..!

ஹெல்மெட் செயல்

ஹெல்மெட் அணிவதினால் தலையில் ஏற்படும் காயங்கள் 69 சதவீதம் குறைந்துள்ளது. அதைத் தவிர்த்து உயிர் இழப்பு 41 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்தியாவை பொறுத்தவரை மிகப் பெரிய எண்ணிக்கை. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இயற்கை மரணம் அடைபவர்களை விட சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அலட்சியம் காட்டாமல் உங்கள் குடும்ப நலனுக்காக ஹெல்மெட் அணிந்து வெளியே செல்லுங்கள்.

ஒரு ஹெல்மெட் சராசரியாக 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் அதற்குமேல் பயன்படுத்தினால் அதன் பாதுகாப்பு தன்மை குறைந்திருக்கும். வாகனம் ஓட்டுபவர்கள் போல், பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிவது புத்திசாலித்தனமாககும். அதேபோல் கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன