தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய்.!

what-are-the-benefits-of-using-olive-oil-for-hair

நம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு நம் ஏகப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தி வந்திருப்போம் ஆனால் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு என்ன பயன் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

ஆலிவ் எண்ணெய் மிக ஆரோகியமான எண்ணெய் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த எண்ணெய் உடல் வலிமைக்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் ஆரோக்கியமான ஒரு பொருளாகும். இதை நம் தலையில் பயன்படுத்துவதன் மூலம் நமது முடி அடர்த்தியாக, நீளமாக வளர ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

ஒருவரின் வயது அதிகரிக்கும் பொழுது அவர்களின் கூந்தலின் ஆயுளும் அதிகரிக்கிறது. இதனால் மிக விரைவில் அவர்கள் தங்கள் கூந்தலுக்கு அதுபோன்ற சமயங்களில் ஆலிவ் எண்ணெய்யை நன்கு தேய்த்து கொண்டால் முடி உதிர்வதை தடுப்பது மட்டுமல்லாமல் வயதாகும்போது ஏற்படும் நரைகளையும் இது வரவிடாமல் தடுக்கிறது. ஆலிவ் எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் நம் தலையில் பொடுகுகள் பிரச்சனை இல்லாமல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதனால் நம் ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து நம் கூந்தலில் தடவினால் பொடுகு பிரச்சனை அடியோடு தீர்ந்துவிடும்.

குளிர்காலங்களில் நமது கூந்தல் மிக விரைவில் வெடிப்புகள் ஏற்படும் இதைத் தடுப்பதற்கு நாம் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தவேண்டும். இதனால் நமது கூந்தல் வறட்சி அடையாமல் எப்போதும் ஒரு விதமான ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும், இதற்கு நாம் ஆலிவ் எண்ணெயை கொண்டு அவ்வப்போது மசாஜ் செய்தாலே போதும்.

மேலும் படிக்க – கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்-ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதினால் தலைமுடியை இது அதிகமாக பராமரித்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. உங்களுக்கு சுருட்டை முடி பிடிக்கவில்லையென்றால் ஆலிவ் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்தால் போதும் சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் முடி சுருட்டை தன்மை இழந்து மிக மென்மையாக மாறி நேராகிவிடும்.

எனவே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஆலிவ் எண்ணெயை நாம் தினசரி ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தினால் நிச்சயம் நமது தலைமுடி மிக ஆரோக்கியமாக இருக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன