தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் அந்நாளில் என்னவெல்லாம் செய்யலாம்.!

  • by
what are the benefits of thai ammavasai

தை அமாவாசையில் முன்னோர்களை வணங்கக்கூடிய திதி, தர்ப்பணம் போன்றவைகளை கொடுக்கக் கூடிய சிறந்த நாளாகும். இந்த வருடம் தை அமாவாசை எப்போது வருகிறது மற்றும் திதி தர்ப்பணம் போன்றவைகளை  எப்படி கொடுக்கலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.

அம்மாவாசை சிறப்பு

அம்மாவாசை நாட்களில்தான் நாம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு மரியாதை செய்வோம். எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் அதை அம்மாவாசையில் தொடங்குவதன் மூலம் நன்மை வந்தடையும். அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகளய அம்மாவாசைகளை விசேஷமாக பார்க்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க – கணபதி ஹோமம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்..!

தை அமாவாசை

பிதுர்கள் அவர்களின் தலைமுறைகளை பார்த்துவிட்டு, மீண்டும் பிதுர்லோகத்திற்கு செல்லப்படும் நாள்தான் தை அமாவாசை. இன்றைய தினத்தில் நம் முன்னோர்களுக்கு செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் சிறப்பு மிக்கதாக இருக்கும். இதன்காரணமாக இந்த அமாவாசையில் உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆசி பெறுவது சிறந்தது ஆகும்.

எப்போது தை அமாவாசை வருகிறது

2022 ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் தை அம்மாவாசை வருகிறது. ஜனவரி 24ஆம் தேதி அதிகாலையில் 3.06 மணிக்கு அம்மாவாசை திதி உள்ளது. அன்று முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி போன்றவைகளை செய்து வணங்குவதன் மூலம் நன்மை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – பிரணயமா செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

நீர்நிலைகளில் படைக்கலாம்

திதி, தர்ப்பணம் எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே கொடுப்பார்கள். எனவே கடல், நதி, ஆற்றங்கரை என எதுவாக இருந்தாலும் அங்கு சென்று திதி அல்லது தர்ப்பணத்தை கொடுங்கள்.

இதுவரை உங்கள் முன்னோர்களுக்கு எந்த வழிபாடும் செய்யாமல் இருந்து இருந்தீர்கள் என்றால் உடனே இந்த வருடம் இதுபோன்ற திதி மற்றும் தர்ப்பணம் செய்து உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறுங்கள். அதைத் தவிர்த்து உங்களுக்கு அடுத்து வரும் சன்னதிகளின் பாவங்களையும் போக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன