வைகுண்ட ஏகாதசி விரதம் நாம் ஏன் இருக்கிறோம், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது.!

what are the benefits of doing fasting on vaigunda egadesi

ஏகாதேசி என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வருகிறது. அம்மாவாசை மற்றும் பௌர்ணமி பின் பதினோராவது நாள் வருவதுதான் ஏகாதேசி ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு மிகச் சிறப்புடைய சக்திகள் உள்ளது. இதை தான் வைகுண்ட ஏகாதேசி என்கிறார்கள்.

ஏகாதசி விரதம் என்பது நாம் இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு கடவுளை பிரார்த்தனை செய்வதன் மூலம் நமது சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். இதன் மூலம் நமக்கு நிலையான செல்வமும் அதிகமான நம்பிக்கையும் கிடைக்கும். ஆனால் வைகுண்ட ஏகாதேசி அன்று நாம் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால் நமக்கு மோட்சம் கிட்டும் அதோடு வைகுண்டதிலேயே நமக்கு நிரந்தரமான இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க – ஹோரை தெரிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்!

2019 டிசம்பர் 27-ஆம் தேதி ஏகாதேசி தொடங்குகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்கு சமமாகும் அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். மகாவிஷ்ணு இந்த கண் விழித்து இருக்கும் சமயம் இதனால்தான் மார்கழி மாதம் சிறப்புபெற்ற மாதமாக விளங்குகிறது. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மாதமாக இருந்தால் மார்கழி மாதம் ஆகவே இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதசி விரதம் என்பது இந்துக்கள் அனைவரும் உண்ணாமல், உறங்காமல் பரந்தாமனை நினைத்து இருக்கும் விரதமாகும். இந்த நாட்களில் அவரின் புகழைப் பாடி, அவர்களை பற்றிய கதைகளை பலருக்கு சொல்லி, மகாவிஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவு பஜனை பாடல்கள் மூலமாக பாடுவார்கள்.

ஏகாதசி விரதம் மேற்கொண்டால் நமக்கு ஏகப்பட்ட நற்பயன்கள் கிடைக்கும். இதில் நமக்கு ஏற்பட்ட தோஷங்கள், சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள், திதி சூனியம், பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு செல்வமும் ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கும்.

மேலும் படிக்க – விரதங்களின் மகிமை சாராம்சம் தெரிந்துகொள்வோமா

எனவே ஏகாதேசியில் மாற்றும் அல்லாமல் வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வதன் மூலம் நமக்கு வைகுண்டத்தில் இடம் கிடைத்து மோட்சம் செல்ல வழி வகுக்கிறது. இதனால் இந்துக்கள் மறக்காமல் இந்த சமயங்களில் பெருமானை நினைத்துக்கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து ஆன்மீகச் சிந்தனையுடன் பிரார்த்தனை செய்வதினால் உங்களுக்கு நன்மையும், ஏகப்பட்ட பலன்களும் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன