பாதாம் பால் குடிப்பதனால் ஏற்படும் பிரச்சனைகள்.!

what are the advantages and disadvantages of drinking badam milk

உடல் ஆரோக்கியத்திற்காக திருமணமான முதல் இரவில் மணப்பெண் மற்றும் மணமகன் பாதாம் பால் குடித்து விட்டு தங்கள் முதலிரவை கழிப்பார்கள். இப்படி பாதாம் பாலில் ஆரோக்கியமான குணங்கள் அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் நம்பப்படும் நிலையில் பாதாம் பால் குடிப்பதனால் நமது உடல் நிலை அதிகமாக பாதிக்கப்படும் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இதில் இருக்கும் நன்மை தீமைகளை இந்த பதிவின் மூலம் காணலாம்

பாதாம் பாலில் புரதங்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் அதிகமாக இருக்கின்றன. இதை சர்க்கரை சேர்க்காமல் நாம் குடித்தால் நமது உடல் எடையை குறைக்க உதவும் என ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன ஆனால் இதிலும் சில பக்க விளைவுகள் மற்றும் தீமைகளும் அடங்கி உள்ளது, அது என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க – புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.?

நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஒரு சிலருக்கு பாதாம் பருப்பு வகைகளை உட்கொள்ளும் போது அவர்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும் இதனால் வாந்தி மயக்கம் குமட்டல் வயிற்றுப்போக்கு என இவர்களை இதுபோன்ற பிரச்சினையில் பாதிப்படைய செய்து விடும். எனவே இதனால் இவர்கள் பாதாம் பருப்புகளை உட்கொள்வதும், பாதாம் பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பாதாம் பருப்புகள் நமக்கு சுரக்கும் தைராய்டு சுரப்பிகளை பாதிப்படைய செய்து விடும். இதனால் முடிந்தவரை நாம் பாதாம் பருப்புகளை தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும் இதற்கு எதிராக இது அவ்வளவாக வேலை செய்வதில்லை.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

பாதாம் பருப்பு மற்றும் பாதாம் பாலை நாம் குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறோம். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கிறது என்று நம்பி இதனை செய்கிறோம் ஆனால் உண்மையில் இதனால் அவர்களுக்கு எந்த மாற்றத்தையும் தருவதில்லை அதைத் தவிர நாளடைவில் இது ஏதாவது ஒரு உடல் நிலை கோலாரை தூண்டிவிடும்.

பாதாம் பால் உட்கொள்வதினால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதைத் தவிர்த்து சருமப் பிரச்சனைகள், சளி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் பாதாம் பருப்புகள் யாருக்கு ஒற்றுக்கொள்கிறதோ அவர்கள் பயன்படுத்தலாம் அதை தவிர்த்து இது உடல் கோளாறுகளை ஏற்படுத்தினால் இதை தவிர்ப்பது நல்லது.

2 thoughts on “பாதாம் பால் குடிப்பதனால் ஏற்படும் பிரச்சனைகள்.!”

  1. Pingback: மாதுளை பழத்தின் உதவியால் இளமையாக இருக்க முடியும்

  2. Pingback: எதிர்மறை எண்ணங்கள் ஏன் வருகிறது,தடுப்பதற்கான வழி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன