உடல் எடை குறைப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரை..!

  • by
weight loss tips from a nutritionist

எல்லோருக்கும் இருக்கும் முதன்மையான பிரச்சினையாக பார்க்கப்படுவது, அவர்களின் உடல் பருமன் பிரச்சனை தான். இதை ஒரு சில உணவுகள் மூலமாக நம்மால் மிக எளிதில் குறைக்க முடியும், உங்கள் உடல் எடையை நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாக குறைப்பதற்கு நாம் சிறந்த ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை கேட்க வேண்டும். அப்படி சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் எது போன்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முட்டை உணவு

ஒரு காலத்தில் முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் நம்முடைய உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில் வாழ்ந்து வந்தார்கள், ஆனால் உண்மையில் முட்டையை நாம் காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பது மட்டுமல்லாமல், நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.

உங்கள் உடல் எடையை குறைக்க சிறந்த உணவு திட்டம் எது? நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெற இந்த இணைப்பை அழுத்தவும்

கீரை உணவுகள்

கோடைக்காலங்களில் நாம் என்னையால் செய்யப்பட்ட உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மதிய வேளைகளில் கீரைகள் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கீரையில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் இருக்கின்றன, எனவே இதை குறைந்த அளவு சாப்பிடு வதன் மூலமாகவே நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. இதில் கொழுப்புத் தன்மை குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் இதில் பைபர் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மீன் உணவுகள்

உங்கள் மெட்டபாலிசத்தை சீராக்கி, தைராய்டு சுரப்பியை சீராக சுரக்கச் செய்ய மீன் உணவுகள் உதவுகிறது. மீன் உணவில் ஒமேகா-3, ஃபேடலிக் ஆசிட் போன்றவை இருப்பதினால் உங்கள் உணவுகளால் ஏற்படும் எரிச்சலை முழுமையாக தவிர்க்கிறது. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த உணவு மீன்.

மேலும் படிக்க – தேங்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

காய்கறிகள்

காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, கோஸ் மற்றும் முளைப்பயிர்களை நம்முடைய உடல் எடை குறைப்பதற்கு நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். மற்ற காய்கறிகளை ஒப்பிடுகையில் இதில் புரோட்டின் அதிகமாக இருக்கிறது. இது அனைத்திற்கும் மேலாக புற்றுநோயை எதிர்க்கும் தன்மை இந்த உணவுகளில் அதிகமாக உள்ளது. இதை தவிர்த்து உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க இந்த உணவு போதுமானது.

மாமிச உணவுகள்

கோழிக் கறி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவர்களை உட்கொள்வதினால் நம் உடலில் கொழுப்புத் தன்மை அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும் என்று எல்லோரும் பயந்து வாழ்கிறார்கள். உண்மையில் இது போன்ற மாமிச உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக அதில் இருக்கும் புரதம் நம்முடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது. சராசரியாக 80 முதல் 100 வரை கலோரிகளை குறைக்க மாமிச உணவு பயன்படுகிறது.

மேலும் படிக்க – அன்றாட வாழ்வுக்கு அடிப்படையான ஆரோக்கியம்

இதை தவிர்த்து வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் சூப் போன்றவைகளை குடிப்பதன் மூலமாக நம்முடைய உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஊட்டச்சத்து நிபுணர்களின் பார்வையில் நாம் எப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்கிறோமோ அப்போது தான் நம்முடைய உடல் எடை கட்டுக்கடங்காமல் ஏறுகிறது. எனவே இது போன்றவைகளை தவிர்த்து இயற்கை உணவுகளை சரியான அளவு சமைத்து சாப்பிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன