இசையால் எதையும் குணப்படுத்தலாம்..!

  • by
we can heal anything with the help of music

மோசமான நிலையில் இருக்கும் உங்கள் எண்ணங்களை புத்துணர்ச்சியாக மாற்றுவதற்காக 7 நிமிடம் உங்களுக்கு பிடித்த இசையைக் கேட்டால் போதும் என்று பிரபல மருத்துவர் பெஞ்சமின் ரஸ் அவர்கள் கூறியுள்ளார். இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் இசையின் மூலமாக சிகிச்சை அளித்து ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர். இதை இன்றும் ஏராளமான இளைஞர்கள் தங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக தங்களை அறியாமலேயே பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்மறை எண்ணங்களை போக்கி நேர்மறையாக சிந்திக்க 7 நிமிடம் இசை உங்களுக்கு உதவுகிறது.

உடல் மற்றும் உணர்வு

பண்டைய காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இசை சிகிச்சையை இன்றும் ஏராளமானோர் பயன் படுத்தி பலனைப் பெற்று வருகிறார்கள். இசை சிகிச்சையின் மூலமாக உங்கள் உடல் மற்றும் உணர்வுகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். அல்சீமர், ஆட்டிசம் போன்ற உடல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்க இசை பயன்படுகிறது. அதேபோல் மன அழுத்தம் மனப் பதற்றம் போன்றவற்றை உடனடியாக குறைத்து உங்கள் எண்ணங்களை உருவாக்கும் இந்த இசை சிகிச்சை உதவுகிறது. உங்கள் உணர்வுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று இசையை கேட்பதற்கு முன்பு, மற்றொன்று இசையை கேட்பதற்கு பின்பு இதன் மூலம் உங்கள் மன நிலையை நீங்களே பரிசோதிக்கலாம்.

இசையால் நம் நோய்களை எப்படி கட்டுப்படுத்துவது? இந்த இணைப்பை அழுத்தவும்

எதையும் கட்டுப்படுத்தலாம்

தினமும் குறுகிய நேரம் இசை கேட்பதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் தெளிவடையும், இதனால் உங்கள் சிந்திக்கும் திறன் அதிகரித்து எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சவால்களை நாம் சந்திக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். அதுபோன்ற நேரங்களில் சரியான முடிவை எடுப்பது என்பது நம் வாழ்க்கையையே தீர்மானிக்கிறது. இதனால் உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்து சரியான முடிவை எடுப்பதற்கு இசை பயன்படுகிறது.

உண்மைத் தன்மை

இசை சிகிச்சை பெறுவதன் மூலமாக உங்களால் உண்மைத்தன்மையை எளிதாக அறிய முடியும். ஒருவரின் உணர்வுகளை பார்வையாலேயே கண்டறிந்து அதற்கான உடனடி பதிலையும் நம்மால் அளிக்க முடியும், உறவுகளில் இருக்கும் பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்கலாம். உங்கள் சமுதாயத்தை எளிதில் புரிந்துகொண்டு, அதன் பிரச்சினைகளையும் கண்டறியும் திறன் இசை சிகிச்சை நமக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க – ஆபாசப்படம் பார்ப்பவர்கள் கவனத்திற்கு..!

ஊக்கம் அளிக்கும்

தினமும் சிறிது நேரம் இசையை கேட்பவர்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் இசை கேட்காதவரை விட, இசையை கேட்பவரின் மன நிலை அமைதியாகவும், ஆற்றலாகவும் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். அதேபோல் கவனிக்கும் தீரன், ஞாபகசக்தி போன்றவைகளும் இவர்களுக்கு அதிகரித்துள்ளது. எந்த சூழலிலும் கோபம் அடையாமல் உங்களை அமைதியாக வைத்திருந்து, எல்லா சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ள இசை உதவுகிறது.

இசை சிகிச்சையின் மூலமாக நம்முடைய ஏராளமான பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக சிறந்த சிகிச்சை மையங்கள் இருக்கின்றன, இதை தவிர்த்து இணையதளம் மூலமாகவும் நாம் இசை சிகிச்சை பெற முடியும். ஸ்பார்க் என்ற செயலியின் மூலமாக நேரடியாக சிறந்த இசை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நாம் தொடர்பு கொண்டு நம்முடைய தெரபியை தொடங்கலாம். உங்கள் வாழ்க்கைப் பாதையை சரியான திசைக்கு கொண்டு செல்ல இந்த சிறிய செயல் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன