கொரோனாவை பரிசோதிக்கும் முறைகள்..!

  • by
ways to test corona virus affection

கொரோனா வைரஸ் பாதிப்புகள் வளர்ந்த நாடுகளைவிட வளராத நாடுகளில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, பல நாடுகளில் அதற்கான பரிசோதனைகளை அதிகமாக செய்து வருகிறார்கள். இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இதனாலேயே வளர்ந்த நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதுவே வளராத நாடுகளின் கொரோனா பரிசோதனையை ஒரு சிலருக்கு செய்கிறார்கள். யாருக்கு இந்தத் தொற்றின் அறிகுறிகள் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

பரிசோதனை அவசியம்

சீனாவில் உள்ள மக்கள் இந்த வைரஸினால் பாதிப்படைந்தவுடன் சீன அரசு எல்லா மக்களையும் பரிசோதித்தது. அதைத் தவிர்த்து இதே யோசனையை மற்ற நாடுகளும் பின்தொடர்ந்தது. உதாரணத்திற்கு ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இதே வழியை பின் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவியின் விலை அதிகமாக இருப்பதினால் இந்த கருவியின் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும், வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பரிசோதனையை செய்கிறார்கள். ஆனால் இதுபோன்ற பரிசோதனையின் மூலமாக எப்படி ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறது என்பதை கண்டறிய முடியும்.

மேலும் படிக்க – ஒருவரிடமிருந்து 400 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது..!

ஆர்டி பிசிஅர்

ரிவர்ஸ் டிரான்ஸ்மிஷன் என்று அழைக்கப்படும் இந்த ஆர்டிபிசிஅர் வழியை பின்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து வந்தார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொண்டையிலிருந்து சிறிதளவு நீரை எடுத்து, அதை கொண்டு பரிசோதனை செய்தார்கள். எனவே எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு ரசாயனத்தை கலப்பார்கள். இதன் மூலமாக நம் தொண்டையில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ்களில் டிஎன்ஏவாக மாற்றியமைகிறது. இதில் கொரோனா வைரஸின் டிஎன்ஏ இருந்தால் அந்த நீர் ஒருவித மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். இதன் மூலமாக அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கலாம். ஆனால் இந்த பரிசோதனை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு நாள் வரை தேவைப்படுவதால் இதற்காக நாம் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதைத் தவிர்த்து கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே செய்யமுடியும். பாதிப்புகள் குறைவாக இருப்பவர்களுக்கு இதன் பரிசோதனை முடிவு தெளிவாக இருக்காது.

எலைசா

ஜெர்மன் போன்ற நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு பரிசோதனை முறை தான் எலைசா. இந்த முறையை பயன்படுத்தி அவர்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பரிசோதனை செய்துள்ளார்கள். ஏற்கனவே கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருக்கும் மாதிரிகளை சேகரித்து அதில் இருக்கும் எதிர்ப்பு சக்திகளை கொண்டு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை ஒரு சில ரசாயனங்களுடன் ஒன்று சேர்ப்பார்கள். இதன் மூலம் பரிசோதிக்கப்படுபவரின் மாதிரியும், அதனுடன் கலக்கப்பட்ட மாதிரியும் ஒன்றிணைந்தால் அது மஞ்சள் நிறமாக மாறும். இதன் மூலமாக அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகும். அப்படி அது மாறவில்லை என்றால் அவர்களுக்கு எந்த ஒரு தொற்றும் இருப்பதற்கான வாய்ப்பிள்ளை.

மக்கள் தொகை

மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இந்த பரிசோதனையை செய்தால் மட்டுமே நமக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு நாம் செய்யலாம், அதில் எல்லோருக்கும் தொற்றுகள் இல்லை என உறுதியானால் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம், இல்லையெனில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த தொற்று இருந்தால் ஒவ்வொருவராக பரிசோதிக்கும் சூழ்நிலை ஏற்படும். இதையும் பாதியாக குறைத்து நாம் பரிசோதிப்பதன் மூலமாக அரசாங்கத்தின் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும் படிக்க – கொரோனாவை தடுத்த நாடுகளில் இருந்து இந்தியா இதை கற்றுக்கொள்ள வேண்டும்..!

ரேபிட் கிட்

இன்னும் சில நாட்களில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு ரேபிட் கிட்டு என்ற சிறிய வகை கொரோனா பரிசோதிக்கும் கருவி வரவிருக்கிறது. இதை பயன்படுத்தி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் கொரோனா நோயாளிகளை கண்டறியமுடியும். இதுவும் எலைசாவை போல் ஒருவகையான ஆன்டிபாடி கொண்டு பரிசோதிக்கும் முறையாகும். எனவே கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்த பரிசோதனை கருவியை தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது. எனவே இது நம் நாட்டிற்கு வந்த பிறகு கொரோனா வைரஸின் பரிசோதனை அதிகரிக்கும். இதன் மூலமாக அடுத்த சில வாரங்கள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இந்த தொற்று சமூக தொற்றாக மாறாமல் நம்மால் தடுக்க முடியும்.

எனவே இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழிப்பதற்கு என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அந்த வழிகள் எல்லாவற்றையும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு செய்து கண்டறிந்து வருகிறது. இதற்கு மக்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதை முழுமையாக இந்தியாவைவிட்டு அழிக்க முடியும், அதேபோல் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு உங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன