சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்கும் வழிகள்..!

  • by
ways to cure sun tan

ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் சருமத்தை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும், சூரிய ஒளி நிச்சயம் நம்மேல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் படத்தான் செய்கிறது. இதனால் நம்முடைய சருமம் நிறம் இழக்கிறது. பின்பு நம்முடைய சருமம் பொலிவிழந்து கருமையாக மாறுகிறது. இதற்கு நாம் சன் ஸ்கிரீன் லோசனை தடவி வெளியே செல்ல வேண்டும் அப்படி மறந்தவர்கள் தங்கள் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்குவதற்க்கு சில வழிகளை பின்தொடர்ந்து அதை முழுமையாக நீக்க முடியும்.

தயிரை பயன்படுத்துங்கள்

கோடைக்காலம் வந்தாலே நம்முடைய சருமம் பொலிவிழந்து கருமையாக மாறுகிறது. அதை தடுப்பதற்கு நம் வீட்டில் கிடைக்கும் தயிரைப் பயன்படுத்தலாம். சுத்தமான தயிரை நம்முடைய சருமம் முழுக்க தேய்த்து அதை 15 நிமிடங்கள் ஊறவைத்து குளிப்பதன் மூலமாக உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் கருமைகள் விலகும். இதனால் உங்கள் சருமம் மென்மையாகும்.

மேலும் படிக்க – சரும பொலிவிற்கு இதனை செய்யுங்கள்

எலுமிச்சை சாறு

நம் உடலை குளிர்ச்சி அடைய செய்வதற்காக நாம் எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். அத்தகைய சிறப்புமிக்க எலுமிச்சை சாறை நம் சருமத்தில் தேய்ப்பதன் மூலமாக வெயிலினால் ஏற்பட்ட கருமை உடனே விலகும். எங்கெல்லாம் நம்முடைய சருமம் நிறம் மாறி உள்ளதோ அந்த இடத்தில் எலுமிச்சை சாறை பஞ்சில் கொண்டு 10 முதல் 15 நிமிடம் வரை மென்மையாக தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நீங்கள் இழுந்த சருமம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

பால் மற்றும் ஓட்ஸ்

ஒரு சிலருக்கு சருமம் ஒருவிதமாகவும், அவர்களின் கழுத்து வேறு நிறமாகவும் இருக்கும். இதை ஒரு நிறமாக மாற்றுவதற்காக நாம் ஓட்ஸ் மற்றும் பாலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை நமது கழுத்துப் பகுதியில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் கருமைகள் விலகும்.

சந்தனம் மற்றும் தக்காளி சாறு

இயற்கையாகவே நம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு மிகுந்தது சந்தனம். அதேபோல் தக்காளியில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கிறது. எனவே இவைகள் இரண்டையும் வைத்து உங்கள் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க முடியும். முதலில் தக்காளியை நன்கு குழைத்து கொள்ள வேண்டும், பின்பு அதில் சந்தனப் பொடியை கலந்து நம் சருமத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாறில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது. எனவே உருளைக்கிழங்கில் இருந்து சாறை தனியாக எடுத்துக் கொண்டு அதை நம் முகம் மற்றும் சருமத்தில் தேய்க்க வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்வதினால் உங்கள் சருமத்தில் உள்ள கருமை விலகும்.

பப்பாளி மற்றும் தேன்

பப்பாளியும் மற்றும் தேன் இரண்டும் உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. எனவே பப்பாளியை நன்கு குழைத்து கொண்டு அதில் சிறிதளவு தேன் கலந்து உங்கள் முகம் முழுக்கத் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க – டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

ஆலுவேரா மற்றும் மைசூர் பருப்பு

இயற்கையாகவே ஆலுவேராவில் நமது சருமத்தை பாதுகாக்கும் தன்மை அதிகமாக உள்ளது. எனவே இந்த ஆலுவேரா ஜெலில் சிறிதளவு மைசூர் பருப்பு பொடியை ஒன்றாக கலந்து சருமத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். பின்பு இதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் சருமம் சமநிலையான நிறத்தில் இருக்கும்.

கோடைக் காலம் வர இருப்பதனால் இந்த எளிய வழிகளை பின் தொடர்ந்து உங்கள் சருமத்தில் ஏற்படும் நிற மாற்றத்தைத் சரிசெய்யலாம். அதேபோல் ஆரம்பத்திலேயே இது போன்ற கருமைகளை அகற்றுவது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன