கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறைகள்..!

  • by
ways to cure corona virus

கொரோனா வைரஸ் பாதிப்படைந்த ஒவ்வொரு நாடுகளிலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உலக நாட்டு மக்கள் எந்த வகையான சிகிச்சைகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கிறார்கள், தமிழ்நாட்டில் இதே சிகிச்சைகளை பின்தொடர்கிறார்களா என்பதை தெளிவாக காணலாம்.

ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின்

உலக நாடுகளுக்கு இந்திய அதிகளவில் ஏற்றுமதி செய்யும் மருந்தாக இந்த ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 20 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதில் அமெரிக்கா, கன்னடா, யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பிரேசில், இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற முக்கிய நாடுகளும் இந்த மருந்து ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த மருந்தை உட்கொள்வதன் மூலமாக கொரோனா வைரஸின் தாக்குதல் குறையும், ஆனால் இது மலேரியாவுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்து என்பதினால் இது ஒரு விதமான பக்க விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இந்த மருந்து முழுமையாக கொரோனா வைரஸை கொள்ளும் என்ற எந்த ஒரு ஆய்வும் கூறவில்லை. இதனுடன் சேர்ந்து காய்ச்சல்களை குணப்படுத்தும் பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸிற்க்கான தடுப்பூசியின் நிலை..!

வேறு மருந்துகள்

அதேபோல் இந்திய மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக எச்ஐவி மற்றும் மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகளையும் சிறிய அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இதை தவிர்த்து பன்றிக்காய்ச்சலுக்கு பயன்பட்ட மருந்தையும் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாக இந்த வைரஸ் தாக்குதல் குறைகிறது.

வெண்டிலேஷன் உதவி

கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நோயாளியை முதலில் சுவாசிக்க வைப்பதற்காக வெண்டிலேர்னை பயன்படுத்துவார்கள். அதன்பிறகு அவர்களின் சுவாசத்தை சீராக்கி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை அவர்களுக்கு அளிப்பார்கள். இதை தொடர்ந்து அவர்கள் உடல் வலிமைக்கான குளுக்கோஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிப்பார்கள். பின்பு உங்கள் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளை உங்களுக்கு அளிப்பார்கள். எனவே மருத்துவர்கள் உங்கள் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராட செய்வார்கள்.

மேலும் படிக்க – முன்னோர்களின் வழியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்..!

நோயாளிகளை பொறுத்தது

கொரோனா வைரஸிற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் என்று ஏதுமில்லை, ஒவ்வொரு நோயாளிகளும் அவர்களின் உடல் வலிமையைப் பொருத்து இந்த சிகிச்சை முறைகள் மாற்றப்படுகிறது. இதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் நம்மிடம் கைவசம் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை வைத்து இந்த நோய்த்தொற்று பாதித்தவர்களை குணமாக்கி வருகிறோம். ஒவ்வொருவரின் வயது மற்றும் உடல் வலிமையைப் பொறுத்து அதற்கேற்ப மருந்துகளை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறார்கள். இதன் மூலமாக இயற்கையாகவே நமது உடல் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.

எனவே நீங்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைய கூடாது என்று நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர்த்து உங்கள் எதிர்ப்புத் தன்மையை குறைக்க கூடிய செயல்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன