தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வழிகள்..!

  • by
ways to celebrate tamil new year at home

“உலகில் வாழும் எல்லா தமிழர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை நாம் வெளியே சென்று கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதுவரை தமிழ் புத்தாண்டை அதற்கேற்ற வழியில் கொண்டாட மறந்தவர்கள் இந்த பதிவின் மூலமாக நாம் தமிழ் புத்தாண்டை ஏன் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாட வேண்டும் என்பதை காணலாம்.

சித்திரை மாதம்

தமிழர்களுக்கு என்று தனி யான நாட்காட்டி இருக்கிறது. அதில் ஆங்கில மாதத்தில் இருப்பதைப் போல் எல்லா மதங்களும் தமிழில் இருக்கும். ஆனால் இதில் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றும் கோள்களின் மாற்றங்களை சரியாக கணித்து உருவாக்கப்பட்டதே நம் தமிழர்களின் நாட்காட்டி. இதற்கேற்ப ஆங்கில மாதத்தில் எப்படி ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாடுகிறார்களே அதேபோல் தமிழ் மாதத்தில் சித்திரை 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் மாதம் இடையில் வரும் இந்த நாளை தென்னிந்தியாவில் ஏராளமானோர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஊரடங்கில் வீட்டில் வேலைப்பார்க்கும் பொழுது கவனம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்றைய நாளில் உலகில் உள்ள எல்லாத் தமிழர்களும் தங்களுக்கு பிடித்தமான கடவுளை வழிபட்டு அவர்களுக்கு பலகாரங்கள் மற்றும் விருந்து படைத்து வழிபாடு செய்வார்கள். இதைத் தவிர்த்து ஒவ்வொரு தமிழர்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருவார்கள். இது ஒருவிதமான தமிழர்கள் பண்டிகை என்பதினால் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் மிகப்பெரிய தமிழர் பண்டிகை இதுவாகும்.

முக்கனிகள்

தமிழ் புத்தாண்டு அன்று ஒவ்வொரு தமிழர்களும் அவரவர் வீட்டில் முக்கனிகளான மா, பலா, வாழை மூன்றையும் கடவுளுக்குப் படைப்பார்கள். அதைத் தவிர்த்து பச்சை மாங்காயை துண்டுகளாக நறுக்கி ஒரு வித உணவை செய்வார்கள். ஒரு சிலர்கள் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை செய்வார்கள், மற்றவர்கள் இனிப்பு பலகாரங்களை கடைகளில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதைத் தவிர்த்து தமிழர்கள் புத்தாண்டு அன்று கடைகளில் வாங்குவதை விட வீட்டில் ஏராளமான பலகாரங்களை செய்வதிலேயே கவனத்தை மேற்கொண்டு வந்தார்கள். இதன் மூலமாக குடும்பம் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த நாளை ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தார்கள்.

மேலும் படிக்க – ஏப்ரல் 30 வரை ஒடிசா ஊரடங்கை பின் தொடர்கிறது..!

மீனாட்சி அம்மன்

தமிழ் புத்தாண்டு அன்று மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகப்பெரிய வழிபாடுகளை செய்து வந்தார்கள். இங்கு உள்ள மீனாட்சி அம்மனை இந்த நாளில் வழிபடுவதன் மூலமாக தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பெருமைகள் அனைத்தும் பல்லாண்டு நீடித்திருக்கும் என்று ஏராளமான பக்தர்கள் நம்பி வருகிறார்கள். இதை தவிர்த்து ஒவ்வொரு கோவில்களிலும் இருக்கும் தெய்வங்களை இந்த நாளில் வணங்கி வருவதை ஒரு கடமையாகக் கொண்டுள்ளார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று யாராலயும் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பான முறையில் வீட்டிலிருந்தபடியே அவர்களின் தெய்வங்களை வணங்க வேண்டும்.

மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரமாக தமிழர்களின் கலாச்சாரம் பார்க்கப்படுகிறது. எனவே நாம் கொண்டாடப்படும் இந்த தமிழ் தமிழ் புத்தாண்டை அடுத்தவரும் தலைமுறைகள் கொண்டாடவேண்டும். அதைத் தவிர்த்து நாம் இந்த பண்டிகையை கொண்டாட எந்த வழிகளை பின்தொடர்ந்தோமோ அதை அவர்களும் பின் தொடர வேண்டும். இதை தவிர்த்து குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை என்றும் இருப்பதற்காக இன்றைய நாளில் அனைவரும் பலகாரங்களை சமைத்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன