ஆண்கள் அழகிய முறையில் பிளேசர் அணிவது எப்படி?

  • by
ways that men can wear blazer in a stylish manner

மிகப்பெரிய விருந்துகள், திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டுமென்றால் ஆண்கள் அதிகமாக விரும்பி அணிவது பிளேசர் தான். இதில் ஏராளமான வகைகள் உள்ளன, அதை எப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு தகுந்தார்போல் அணிந்து செல்வது, அதற்கு இணையாக எந்த வித ஆடைகளை அணியலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

காட்டன் பிளேசர்

சமீபத்தில் பிரபலமடைந்து வரும் இந்த காட்டன் பிளேசர் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால் இதன் எடை மிகக்குறைவு அதை தவிர்த்து இதை சாதாரண உடையாக அணிந்து அதற்கு ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்தால் பார்ப்பதற்கு மிக ஆடம்பரமாக இருக்கும். அதேபோல் இந்த வகை ஆடைகளை வெள்ளை நிற குடும்பத்தை சேர்ந்த நிறங்களில் அணிவதன் மூலம் கூட்டத்தில் கூட நீங்கள் தனியாக தெரியலாம்.

மேலும் படிக்க – ஆளுமையுடன் அழகு கொண்டபிரியங்காவின் வாழ்வியல்

வுள் பிளேசர்

உள்ளன் பிளேயர்கள் பனிக்காலம் மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக அணிவார்கள். இதை குளிர் பிரதேசங்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள். இது போன்ற பிளேசர்ஸ் அணியும் பொழுது அதற்கேற்ற பேண்ட் அணிய வேண்டும். ஒருசில உள்ளன் பிரேசர் கால் முட்டி வரை நீளமாக இருக்கும். அது போன்ற ஆடைகளுக்கு நம் கீழே வெள்ளை நிற பேண்ட்களை பயன்படுத்தலாம். அதேபோல் இதற்காக பயன்படுத்தும் காலணிகளும் மிக பெரியதாக இருக்க வேண்டும்.

லெனின் பிசர்ஸ்

காட்டன் பிளேசர்ஸ் விட மிக மெலிதாக இருக்கக் கூடியது தான் இந்த லெனின் பிளேசர்ஸ். பொதுவாக கோடைக் காலங்களில் நாம் ஒரு சில இடங்களுக்கு பிளேசர்ஸ் தவிர்க்க முடியாமல் இருக்கும். அச்சமயங்களில் வெப்பத்தை உடனே வெளியேற்றம் இதுபோன்ற லெனின் பிளேசர்ஸ் அணிந்து கோடை கால கொண்டாட்டங்களுக்கு செல்லலாம். இதற்கு எதிர் நிறத்தில் பேண்ட்கலை அணியலாம். அதேபோல் மிக சிறியதாக இருக்கும் காலணிகள் மற்றும் செப்பல்களை அணியலாம்.

மேலும் படிக்க – கண்னக்குளி அழகி காதல் மொழி பேசும் தீபீகா

டிவிடு பிசர்ஸ்

இது கிட்டத்தட்ட உள்ளன் பிளேசர்ஸ் போல அடர்த்தியாக இருக்கும். ஆனால் இதன் மேல் பஞ்சு போன்ற எந்த கோட்டிக்கும் இருக்காது. குளிர் மற்றும் பனி காலங்களுக்கு ஏற்ற பிளேசர், ஆனால் இதை கொண்டாட்டங்களுக்கு போட்டுச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார். எனவே இதற்கு நீங்கள் நீல நிற ஜீன்ஸ் ஆடைகளை அணியலாம்.

தைக்கும் ஆடைகள்

ஒரு சிலர் தங்களது உடல் அமைப்புக்கு ஏற்றார்போல் ஒட்டியவாறு ஆடைகளை வாங்கி வைப்பார்கள். ஆனால் இது போன்ற ஆடைகளை நாம் திருமணங்கள் மற்றும் வியாபார ரீதியாக செல்லும் பயணங்களுக்கு மட்டும் தான் அணிய முடியும். இதை அணிவதனால் உங்கள் மேல் மரியாதை அதிகரிக்கும், இது போன்ற ஆடைகளை கரு நிறங்களில் அதிகமாக அணியலாம்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களின் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள்..!

அதேபோல் விளையாட்டிற்கு என்று தனியாக பிளேசஸ் களும் உள்ளது மற்றும் சிறுரக பிளேசர்ஸ்களும் உள்ளது. எனவே ஆண்களின் அழகை அதிகரிப்பதற்காக பிளேசர்ஸ்களும் கிடைக்கின்றன, எனவே உங்கள் தோற்றத்திற்கு ஏற்றார் போல், நீங்கள் செல்லும் நிகழ்ச்சி தகுந்தாற்போல் பிளேசர்ஸ்களை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன