அனுமானை வழிப்படும் முறைகள்…!

  • by
ways of worshiping lord hanuman

நம் புராணக் கதைகளில் அனுமனைப் பற்றி அதிகமாக அறிந்திருப்போம். இவர் ராமன் மற்றும் சீதை இருவருக்கும் தூதுவராக செயல்பட்டவர். அதை தவிர்த்து தனது பலத்தினால் மலைகளையும் தூக்கும் திறமையை கொண்டவர். இத்தகைய சிறப்புவாய்ந்த அனுமனை தென்னிந்தியா மற்றும் வட இந்தியர்களில் எப்படி வழி படுகிறார்கள் என்பதை காணலாம்.

வட இந்திய வழிபாடு

வட இந்தியாவில் ஆஞ்சநேயரை ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது உகந்த திதியான அமாவாசை மற்றும் துவாதசி நாட்களில் அல்லது அனுமானின் அவதர நட்சத்திரமான மூலம் நாட்களில் அவருக்கு வடைமாலை அணிவித்து வழிபாடு செய்வார்கள்.

இதுதான் தென்னிந்தியாவிலும் செய்வார்கள் ஆனால் இதில் ஒரு வித்தியாசம் உண்டு. அனுமனுக்கு நாம் வடைமாலை கொண்டு பூஜைகள் செய்வோம், ஆனால் வட இந்தியாவில் வடைகளுக்கு பதிலாக ஜிலேபியை அனுமனுக்கு சாத்துவார்கள்.

மேலும் படிக்க – தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் அந்நாளில் என்னவெல்லாம் செய்யலாம்.!

தென்னிந்திய வழிபாடு

தென்னிந்தியாவில் வட இந்தியர்கள் செய்யப்படும் பூஜைகள் செய்து ஜிலேபிகளுக்கு பதிலாக மிளகு, உப்பு, கருப்பு உளுந்து போன்றவைகள் மூலமாக செய்யப்பட்ட காரமான வடையை சாத்துவார்கள். ஏன் இந்தப் பாகுபாடு. வட இந்திய அனுமனுக்கு இனிப்பு உணவும், தென்னிந்திய அனுமனுக்கு கார உணவு.

புராண கதை

வாயு பகவானுக்கும் அஞ்சனை தேவிக்கும் மகனாக பிறந்தவர்தான் ஆஞ்சநேயர். ஒருநாள் ஆஞ்சநேயரின் தாய் அவருக்கு அண்டத்தை காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். எனவே இதையே பழக்கமாக வைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் ஒரு நாள் பகலில் பசியாக இருக்கும் போது சூரியனைப் பார்த்தார். அது பழம் என்று எண்ணி அதை சாப்பிடலாம் என்று வாயு வேகமாக சென்றார். அதே சமயத்தில் ராகுவும் சூரியனைப் பிடிக்க சென்று கொண்டிருந்தார். ஆனால் தன்னைவிட ஆஞ்சநேயர் வேகமாக வருவதைக் கண்டு அவருக்கு ஒரு வரத்தை அளித்தார். அதாவது நீ சூரியனை சாப்பிடாமல் விட்டுவிட்டால் நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன் அது என்னவென்றால், எனக்கு உகந்த தானியமான கருப்பு உளுந்துகளினால் செய்யப்பட்ட மாலைகளையும் உனக்கு அணிவதன் மூலமாக என் பிடியில் இருப்பவர்கள் தோஷங்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்றார்.

மேலும் படிக்க – அரோகரா முருக கோசம் வினைகளை விளக்கும் தைபூசம்

கருப்பு உளுந்து

வட இந்தியாவில் வற்றாத ஜீவநதிகள் இருப்பதினால் அங்கு கரும்பு விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரையைக் கொண்டு கருப்பு உளுந்தை சேர்த்து ஜிலேபியாக தயாரித்து அதை ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்தார்கள்.

அதேபோல் தென்னிந்தியாவில் அதிகமான உப்பு மற்றும் காரங்கள் விளைகின்றன இதனால் அவைகளை ஒன்றாக சேர்த்து உளுந்தில் கலந்து மாலையாக அணிவித்தார்கள்.

மாலைகளின் எண்ணிக்கை

கிரகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் அனுமனுக்கு 27, 54, 108 1008 போன்ற எண்ணிக்கைகளில் மாலை அணிவிப்பார்கள். அனுமன் ஜெயந்தி போன்ற தினங்களில் ஒரு லட்சத்து எட்டு வடைகளை கொண்ட மாலைகள் அணிவிப்பார்கள்.

மேலும் படிக்க – சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

எனவே உங்களுக்கும் ராகுவினால் ஏற்பட்ட தோஷங்கள் விலக வேண்டும் என்றால் அனுமானுக்கு இதுபோன்று மாலைகளை சார்த்தி வழிபாடு செய்யுங்கள். இல்லை நீங்கள் அனுமன் பக்தர்கள் என்றால் இது போன்ற வேண்டுதல்கள் எதையும் முன்வைக்காமல் மனம் முழுக்க அனுமதி வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். அனுமனுக்கு நீங்கள் வடையை செய்ய வேண்டுமென்றால் பூஜைகள் செய்து அனுமனை பிரார்த்தனை செய்துகொண்டே வடைகளை செய்ய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன