காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

  • by
ways of worshiping goddess kaali and its power

காளி தெய்வத்தை பார்ப்பதற்கே கருமையாகவும், மிக உக்கிரமாகவும் இருப்பார். கையில் கொடுவாள் மற்றும் சூலத்தை வைத்து  கொடூரமான தோற்றத்தை உடையவள். காளி இவர் கைகளில் வில், அம்பு, கழுத்தில் எலும்புக்கூடுகள் மற்றும் உயிரிழந்தவர்களின் ரத்தங்கள் என மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்கும் தோற்றத்தை கொண்டவன்.

காளியின் சக்திகள்

காலியான அவள் காலத்தை கட்டுப் படுத்தும் சக்தி கொண்டவர். அதைத் தவிர்த்து ஒரு உயிரை ஆக்கவும், அழிக்கவும் குணங்களைக் கொண்டவள். இவர்களின் சக்தி கட்டுக்கடங்காமல் உலகை பலவிதமாக மாற்றக்கூடியது. காளியை அதிகமாக இந்துக்கள் வணங்கப்படும் பொது தெய்வமாகும்.

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

மகா காளி

காளியை ஒரு தெய்வீக பாதுகாவலராக பார்க்கிறார்கள். அவரால் ஒருவருக்கு மோட்சத்தையும் அல்லது விடுதலையைப் தரமுடியும். ஈசனின் துணையான காளியை ஆதி பராசக்தி என்று அழைப்பார்கள். இவரை எப்படி வழிபடலாம் என்ற முறைகளை பல தந்திரகளில் கூறப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. 

காளி வழிபாடு

இந்துக்கள் அதிகமாக வணங்கப்படும் காளியை, வங்காள தேசத்தில் எல்லா ஊர்களிலும் வணங்குகிறார்கள். தாந்திரீகம் மற்றும் மந்திரங்களை செய்பவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் பெரும்பாலும் காளி தெய்வத்தின் படத்தைவைத்து வழிபாடு செய்வார்கள்.

காளியின் பிறப்பு

மகரிஷி என்ற எருமைகளின் அரக்கர்களிடம் போர்புரிந்திருந்தார் துர்கா. அவர்களின் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்கள் வைத்து மிக உக்கிரமாக போர் புரிந்து வந்தார். அவரின் கோபம் தலைக்கேறி துர்க்கையின் நெற்றி பகுதியில் இருந்து வெளியான ஒரு அவதாரம்தான் காளி. இதனால் கட்டுக்கடங்காமல் கண்ணில் பட்ட எல்லா அரக்கர்களையும் காளி கொன்று அவர்களின் தலையை துண்டித்து தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டால். இதை நிறுத்த முயற்சித்த எல்லோரையும் வெறித்தனமாக கொன்று குவித்தார். உடனே சிவன் அவரை தடுப்பதற்காக அவர் செல்லும் பாதையில் படுத்து அவளை சாந்தப் படுத்தினார். இதன் மூலமாக தான் காளி உருவாகி எல்லா அரக்கர்களையும் அழிக்கும் சக்தி கொண்டவராக மாறினார்.

மேலும் படிக்க – மகா சிவராத்திரியில் மகத்துவம் பெறனுமா

காளி உருவாவதற்கு பல விதமான கதைகள் இருக்கின்றன அதில் அதிகமாக நம்பப்படும் கதைகளில் ஒன்றுதான் இது. எனவே கெட்டதை செய்யும் எண்ணங்களில் இருப்பவர்களை அழித்து, நல்லவர்களை ஆதரித்தும் காளி எல்லோரின் காலத்தையும் தன் கட்டுக்குள் வைத்து அருளை வழங்குகிறாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன