பழைய கஞ்சி, சின்ன வெங்காயம், உழவர்களின் ஆரோக்கிய ரகசியம்.!

water rice, onion, green chilly health secrets of farmers

பழைய சோற்றில் ஏகப்பட்ட ஆரோக்கிய குணங்கள் உள்ளது என்பதை அமெரிக்க ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனால் பல அமெரிக்கர்கள் இதை எப்படி செய்வது என்பதற்கான தேடுதலை தங்கள் கணினியில் மூலமாக தேட தொடங்கி உள்ளார்கள். ஆனால் இதை உருவாக்கிய நமது முன்னோர்கள் இதன் அருமையை அன்றே அறிந்து நமது காலை உணவாக இதை பயன்படுத்த அறிவுறுத் இருந்தார்கள் ஆனால் நாம் பன்னாட்டு நிறுவனம் அதன் முதலாளிகளில் பேச்சைக் கேட்டு பழைய சோற்றை முழுமையாக தவிர்த்து விட்டோம். இதனால் நமக்கு புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் போன்றவைகளும் அதிகரித்துள்ளது.

இன்றும் உங்கள் வீட்டில் ஏதாவது முதியவர்கள் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள், “நீங்கள் இவ்வளவு வயது வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று” உடனே அவர்கள் சொல்வது கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சாமை போன்ற ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி தான். ஆனால் நாளடைவில் இது அனைத்தையும் அழித்து, தேவையற்ற உணவுகளை நாம் அருந்தி வருகிறோம். பழைய சோற்றில் ஏகப்பட்ட ஆரோக்கிய குணங்கள் உள்ளன இதை 80 மற்றும் 90களில் பிறந்தவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் இளைய தலைமுறைகள் இதைப்பற்றிய விழிப்புணர்வு எதுவும் இல்லாமல் விளம்பரத்தைக் கண்டு தேவையற்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதனால் இளமையில் அவர்களுக்கு ஏகப்பட்ட உடல் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – அவல் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்!

சமீபத்தில் பழைய சோற்றின் செய்யப்பட்ட ஆய்வில், இதில் ஏகப்பட்ட நற்குணங்கள் இருக்கிறது என்பதை அறிந்து பலரும் இணையம் மூலமாக இது எங்கே கிடைக்கும் என்று தேடி வருகிறார்கள். இதற்கு நாம் இவ்வளவு சிரமப்பட தேவையில்லை, இதை நம் வீட்டில் எளிமையான முறையிலேயே செய்யலாம். வீட்டில் அனைவரும் சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தாலே போதும். அடுத்த நாள் காலையில் குளிர்ச்சியான பழைய சோறு தயார்.

அதேபோல் பழைய சோற்றில் இருக்கும் தண்ணீரும் மிக ஆரோக்கியமான பானமாகும். நாம் இப்போது குடிக்கும் தேநீர், காபி, கார்பனேட் நீர் போன்ற அனைத்திற்கும் எதிரியாக இருப்பது பழைய சோற்றின் இருக்கும் பானம் தான். ஏனென்றால் இதில் முழுக்க முழுக்க  இருக்கும் ஆரோக்கிய குணங்கள் நமது உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே அக்காலத்து ஆங்கிலேயர்கள் இதை விரும்பி அதிகமாக அருந்தி வந்தார்கள்.

நமக்குத் தேவையான நீர் ஆகாரம் மற்றும் அனைத்து சத்துக்களும் இந்த பழைய சோற்றில் உள்ளது. இதை தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இன்னும் ஏராளமான கிராமங்களில் பழைய சோறுதான் காலை உணவாக உண்கிறார்கள் இதனாலேயே அவர்களுக்கு எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சினைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

செரிமானமாகாத பல உணவுகளை நாம் சுவைக்காக சாப்பிட்டு வருகிறோம். அதனால் நமக்கு கிடைப்பது எல்லாம் நோய்கள் மட்டும் தான். சுவையும், குளிர்ச்சியையும் அதிகம் கொண்டிருக்கும் பழைய சாதத்தை, நாம் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் அல்லது ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவைக்கு இணையாக வேறு ஏதும் கிடையாது.

பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளது, இதை காலையில் சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.

மேலும் படிக்க – தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

இதில் நார்ச்சத்து இருப்பதனால் உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து உடல் சோர்வை விரட்டி அடிக்கிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை இது குறைக்கிறது. ஒவ்வாமை தோல் தொடர்பான வியாதி களுக்கு இது தீர்வாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் இது தருகிறது. நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.

நோய்த்தொற்றுகள், வயிற்றில் இருக்கும் புண்கள் மற்றும் உங்களை எப்போதும் இளைமையாக வைத்திருப்பதற்க்கான பங்கு பழைய சோறுக்கு அதிகமாக உள்ளது. எனவே நமது பாரம்பரிய உணவான பழைய சோறை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் போலவும் நீங்களும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். எல்லா உணவுகளைப் போல் இதற்கும் ஒரு சில மணி நேரங்களலே தாங்கக் கூடிய தன்மை உள்ளது. எனவே பழைய சோற்றை 15 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது. விவசாயிகள் வெயிலினால் ஏற்படும் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கு பழைய சோற்றைதான் மதிய உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். எனவே நீங்களும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக இருப்பதற்கு பழைய சோற்றை தினமும் உட்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன