உறவுகளில் உணர்வு துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்!

 • by

உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளை நீங்கள் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவில் மீள முடியும், காலம் தவறினால் மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

கீழுள்ளவற்றை கண்டறிந்து உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க-> நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்களா? அதற்க்கான அறிகுறிகள்…!

உணர்வு துஷ்பிரயோகத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்:

ஒருவருக்கு உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் நடைபெறும்போது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வெளிப்படையாக தெரியலாம்.

மேலும் சிலருக்கு இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கலாம், பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களின் அணுகுமுறைகளும் அறிகுறிகளும் சாதாரணமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது போல் இருப்பினும், ஒரு நபர் வாய்மொழியாகவோ, உளவியல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

உணர்வு ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நபர்:

 • பாதுகாப்பற்றதாக உணரலாம்.
 • சுயமரியாதை குறைவாக இருக்கும்.
 • மனச்சோர்வு அல்லது கவலையுடன் இருப்பார்கள்.
 • பிறருடன் பழகுவதற்கு உணர்வு பூர்வ தடை.
 • எபோதும் சந்தேக பார்வை உங்கள் மேல் விழும்.

மனக்கசப்பு, பாதுகாப்பின்மை அல்லது வேறு ஏதேனும் காரணங்களாக இருந்தால் அதை முன்னதாகவே சூழ்நிலையை அடையாளம் கண்டு பிறர் ஆதரவை பெற முயற்சி செய்யுங்கள். உணர்வு துஷ்பிரயோகம் இன்னும் தீவிரமான நிலைக்கு செல்லும் முன் அதை தடுக்க இதுவே சிறந்த வழி.

மேலும் படிக்க-> மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

உணர்வு துஷ்பிரயோகம் செய்பவர்:

 • மற்ற நபரை இழிவுபடுத்துவது அல்லது அவமானப்படுத்துவது.
 • மற்ற நபரின் முடிவுகளை எடுப்பது அல்லது சில விஷயங்களைச் செய்யும்படியம் செய்ய வேண்டாம் எனவும் நிர்பந்திப்பது.
 • தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது.
 • பிறரின் தனியுரிமையில் ஈடுபடுவது.
 • பிறரை மதியாது இருத்தல்.

மேற்சொன்னவை யாவும் உணர்வுபூர்வமாக துஷ்பிரயோகம் செய்பவர் செய்யும் செயல்களாகும். இதை ஒரு நபர் தொடர்ந்து செய்வாராயின் அந்நபர் குற்றத்திற்குரிய நபர் ஆவார். அடங்கா ஆசை, பணம், பொருள் மீதான பேராசை, இதுபோன்ற செயல்களால் உணர்வு துஷ்பிரயோகம் செய்பவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர், இதில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள திடமாக இருங்கள்.

உணர்வு பூர்வ துஷ்பிரயோகத்தை கண்டுபிடிப்பது கடினம் ஏன்?

உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகங்கள் அனைத்தும் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்கக்கூடும்.

ஆனால், காயங்கள் வெளிப்புறமாக தெரிபவை. உண்மையில், பல சந்தர்ப்பங்களில், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நபர் வெட்க உணர்வுகள் காரணமாக இந்த அடக்குமுறையை மறைக்க கடுமையாக உழைக்கிறார், ஏனென்றால் மற்றவர்கள் கவலைப்படுவதை அவர்கள் விரும்பவில்லை, அல்லது துஷ்பிரயோகம் செய்பவர் சிக்கலில் சிக்குவதை அவர்கள் விரும்பவில்லை.

மேலும் படிக்க-> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

உண்மையில் இது மிகவும் தீவிரமானது, துன்பகரமானது. சரியான புரிதலுடன் சரியான நேரத்தில் இத்தகைய சிக்கலிலிருந்து நீங்கள் மீளவில்லை என்றால் மேலும் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன