குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தும் பெற்றோர்களின் கவனத்திற்கு ……!

  • by
warning for parents who use diapers for their children

இன்று வளர்ந்து வரும் நவீன அறிவியல் காலகட்டத்தில்  குழந்தைகளுக்கு நாம் செய்யும் பல அபாயகரமான செயல்களில் மிக முக்கியமானது டயாப்பர் பயன்படுத்துவதுதான் இதனால்  குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விளக்கும் பதிவுதான் இது.

குழந்தை சிறுநீர் மலம் போவதற்கு முன்  என்ன செய்யும்

குழந்தைகள் பிறந்தது முதல் வளரும் வரை சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்காக ஒரு சில சைகைகளை வெளியிடுவார்கள். இந்த செயல்கள் நடப்பதற்கு முன்பு சிறிய அழுகையால் அச்செயலை நமக்கு அறிவிப்பார்கள். நம் முழு நேரத்தையும் குழந்தைக்காக செலவழித்தால் மட்டுமே குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் .குழந்தை மலம் போகப்போகிறது என்று குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் முக பாவத்தை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும்.  அவர்களின் உணர்வு தன்மை மிகவும் நுட்பமானதாக இருக்கும். குழந்தைகள் சிறிய சத்தங்களைக் கூட எளிதாக அறிந்து கொள்வார்கள் இது போன்ற விஷயங்கள் குழந்தைகளின் உணர்வு நுட்பத்தை விளக்குகின்றன.

மேலும் படிக்க – வேப்பிலையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்..!

பெற்றோர்கள் செய்யும் தவறு 

இன்றைய அவசர உலகில் நாம் குழந்தைகளை அன்புடன் அக்கறையுடன் பார்ப்பதை விட மிக முக்கியமானது அவர்களை சுகாதாரமாக வளர்ப்பது. குழந்தையின் பெற்றோர்கள் இரவு நேரங்களில் தூக்கத்திற்கு தொந்தரவு வரக்கூடாது என்று எண்ணிக்கொண்டு சிறுநீர் மலம் கழிக்க அவர்களுக்கு ஒரு ஏற்பாடு செய்கின்றனர். அது என்னவென்றால் அது தான் டயர்ப்பர்.

இதனைஇடுப்பின் கீழ் ஒரு தினசரி உடையை போல அதை கட்டி விடுகிறோம். எப்போதுமே வெற்று உடம்போடு இருக்கும் குழந்தைக்கு இந்த கட்டாய 24 மணி நேர உடை சற்று கூடுதல் சுமையாக தான் இருக்கும்.

டயப்பர் பயன்படுத்துவதால் குழந்தைகள் உணரும் தன்மையை இழக்கின்றன 

டயப்பர் கட்டி இருக்கும் தைரியத்தில் நம் குழந்தைகளை பயப்படாமல் அதிலேயே மலம் சிறுநீர் கழிக்கும் படி தூண்டிக் கொண்டே இருக்கிறோம். குழந்தைகள் விளையாடும் போதும் தூங்கும் போதும் சிறுநீர் போவது மலம் கழிப்பது போன்ற தங்களுடைய உணரும் தன்மையை படிப்படியாக இழக்கின்றனர். எப்போதும் டயப்பர் கட்டிபழக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அதனை கட்டாமல் விட்டு விட்டால் அன்று சிறுநீர் போவதும் மலம் கழிப்பதும் குழந்தையின் கவனம் இன்றிதானே நிகழ்வதை உணரமுடியும். சிறுநீர் கழிக்கும் உணர்வை மழுங்கச் செய்யும்பழக்கத்தினால் தான் பல குழந்தைகள்  படுக்கையிலே சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை அவர்களால் மாற்றிக் கொள்ள முடிவதில்லை.

நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் மோசமான நோய்கள் காரணமாக இருக்கிறது 

சிறுநீரை அடக்கிக் கொண்டே இருந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். சிறுநீர் குழாயில் நோய் தொற்று அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இன்று அதிக அளவில் குழந்தைகளுக்கு வரும் யூரின் இன்பெக்சன் காய்ச்சல் பசியின்மை வாந்தி என பல நோய்களை ஏற்படுத்துகிறது .உடல் பலவீனமாகும் இதனால் உடல் வெப்பமும் அதிகரிக்கிறது. 

சரியாக மலம் வெளியேற வில்லை எனில் குழந்தைக்கு பசி எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.உடலானது உள்ளே வைத்திருக்க முடியாத ரசாயன கலவையை தான் கழிவாக வெளியேற்றுகிறது. இவ்வளவு மோசமான சிறுநீரை மலத்தையும் அனைத்தையும் சேமித்து வைத்து நெடுநேரம் குழந்தையோடு உடலோடு ஒட்டி வைத்திருப்பது நன்மையானதா? யோசித்துப் பாருங்கள்.

குழந்தையின் உடல் வெப்பம் அதிகரிக்க டயப்பர் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது

கழிவுகள் அடங்கியுள்ள டயப்பரை  நாம் நீண்ட நேரம் சேமித்து வைப்பதால் வெப்பத்தை உடலுக்குள்ளேயே மீண்டும் அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். உடலால் வெளியேற்றப்படும் கழிவுகளின் மீது தான் குழந்தைகள் நாள் முழுக்க அமர்ந்திருக்கின்றனர். இதனால் உடல் நலக்கேடுகள் நம் குழந்தைகளை வந்தடையும்.

டயப்பர் கள் பற்றிய விளம்பரங்கள் 

குழந்தைகள் பயன்படுத்தும் டயப்பர் கள் மென்மையானது சிறப்பானவை என்று பல விளம்பரங்கள்  பல வந்தாலும் அவை உடலுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி எந்த விளம்பரமும் வருவதில்லை அதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருப்பது நிச்சயம் தேவையாக இருக்கிறது. கழிவுகளை சேர்த்து வைத்து உடலோடு ஒன்று செய்வது ஒன்று செய்வது நம் குழந்தைக்கு நல்லதல்ல. 

மேலும் படிக்க – காய்ந்த நெல்லிக்காய் சாப்பிடுவதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டயப்பர் மாற்ற வேண்டும்

இன்றைய அவசர உலகில் டயப்பர் பயன்படுத்தாமல் இருப்பது கொஞ்சம் சிரமமாகத் தோன்றினால் கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு  அதுவே முக்கிய தேவையாக இருக்கிறது இதை மீறியும் வெளியூர் செல்லும் போதும் பொது இடங்களுக்கு செல்லும் போதும் குழந்தைகளுக்கு டயப்பர் அணிந்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக அதை மாற்றியே ஆக வேண்டும் அவ்வாறு செய்தால் மேற்கூறிய நோய் தொற்றுகளில் இருந்து ஓரளவு நம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொறுமை இன்மையால் பல நோய்களை குழந்தைகளுக்கு  நாமே பரிசளிக்கிறோம்.

நவீன அறிவியல் காலத்தில் டயப்பர்  பயன்படுத்தாமல் இருப்பது சற்று சிரமமாகத் தோன்றினால் முடிந்தவரை அதை தவிர்க்க முயற்சி செய்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன