உங்களின் இசை பயணம் இனிதே தொடங்க!!!

 • by

மிருதங்கத்திற்கு, தண்ணுமை என்றும் பெயருண்டு. இந்த மிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியம். பல கர்நாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி. பெரும்பாலும் பலா மரத்தை குடைந்து மிருதங்கம் செய்யப்படுகிறது.

இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்ற முனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த 2 முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினால் செய்த வார்களினால் ஒன்றோடொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வல பக்கத் தோலில் ‘சோறு’ எனப்படும் கருமை நிற பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.

types of tones in carnatic music

மிருதங்க வரலாறு :

மிருத் + அங்கம் எனும் வட மொழி சொல்லுக்கு ‘மண்ணை அங்கமாகக் கொண்டது’ என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் குடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெரிதாவும், வாசிக்கும் 2 பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல் வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர். கடம் போன்ற வாத்தியங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும்.

இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு. 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் ‘மிருதங்கம்’ தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்த மிருதங்கம், தஞ்சை வந்த பின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.

frequently asked question about carnatic music

முக்கிய மிருதங்க கலைஞர்கள் :

மிருதங்கத்தில் பல பிரிவுகள் உள்ளது இவையனைத்தும் நன்கறிந்தவர்கள் ஆசான் ஆகின்றனர்.

 • பழனி முத்தையா பிள்ளை
 • தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர்
 • தஞ்சாவூர் நாராயண சாமி அப்பா
 • புதுக்கோட்டை தக்ஷினாமூர்த்தி பிள்ளை
 • தஞ்சாவூர் ராமதாஸ் ராவ்
 • சென்னை வேணுநாயக்கர்
 • பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்
 • திருச்சி சங்கரன்
 • காரைக்குடி மணி
 • திருவாரூர் பக்தவத்சலம்

மிருதங்கம் வகுப்பில் கற்றுத்தரப்படுபவை :

 • விரல் பயிற்சி
 • ஆதி தாலத்தில் அடிப்படை பாடங்கள்
 • ஆதி, ரூபகம்,
 • தாலங்களில் உள்ள தனி ஆவர்த்தம்
 • கதி பேதம்
 • பாடல்களுக்கு நடை வாசித்தல்.

அடிப்படையில் இருந்து கற்பது மிகவும் முக்கியம். அடிப்படைகள் தெளிவாக இருந்தால், உங்களுக்கு கற்பிக்கும் அனைத்தையும் நீங்கள் உடனடியாக புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீராம் அவர்கள் ஆன்லைன் மூலம் இசை வகுப்புகளை நடத்தி வருகிறார். ஸ்ரீராம் அவர்கள் கடந்த 20 வருடங்களாக பலருக்கு குரல் மற்றும் மிருதங்கம் கற்று தந்து வருகிறார். காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள கட்டைகூத்து சங்கம் பள்ளியில் பகுதி நேர இசை ஆசிரியராக பணிபுரிகிறார் இவர். இசை எல்லோராலும் சுலபமாக கற்றுக் கொள்ள இயலாது, இசைக் கற்க குரல் வளம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு சிலர் எவ்வளவு தான் பயிற்சி பெற்றாலும் இனிமையாக பாடுவதென்பது கடினமாகவே உள்ளது. இந்த குரல் பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பிழையில்லாமல் பாடுவது போன்ற பயிற்சிகளை தருகிறார் ஸ்ரீராம்.

ஸ்ரீராம் அவர்களிடம் இசை கற்றுக்கொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன