மருந்தில்லா மருத்துவம்! இயற்கை மருத்துவம்!

  • by

மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப நாமும் உணவு முறைகளில் பல மாறுதல்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். அதனால் நம் உடல் பல்வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது உடலில் ஏற்படும் நோய்களுக்கும் பாதிப்புகளுக்கும் பல்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருந்தாலும் இயற்கை மருத்துவத்தை பலரும் நாடுவதற்கு பல காரணங்கள் உள்ளது அதில் பக்க விளைவுகள் இல்லை.

இயற்கை மருத்துவத்தை எடுத்துக்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுவது கிடையாது; மருந்தில்லா சிகிச்சை, பாரம்பரிய சிகிச்சை, இயற்கை சிகிச்சை என இயற்கை மருத்துவத்திற்கு பல்வேறு விதமான பெயர்கள் இருக்கின்றது. மருத்துவர்களும் மருத்துவமனைகளும் நோயாளிகளை வாட்டிவதைக்கும் கட்டணத்தை குறைக்க மனம் இல்லாததால் பலரும் இயற்கை மருத்துவத்தை நாடி அவர்களுக்கான நோய்களையும் குணமாக்கி வருகின்றனர்.

இயற்க்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் :

  • இந்தியா போன்றதொரு மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவம் பார்க்க பல நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களால் இயலாது ஆகையால் அவர்கள் இயற்கை மருத்துவத்தை சார்ந்திருப்பது அவசியமாகிறது.
  • இயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது. மனித உடலோடு விரைவில் ஒத்துழைக்க வல்லது.
  • இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் 95 சதவிகிதம் மரம், செடி, கொடி அவற்றின் இலை, வேர், காய் மற்றும் இயற்கை சுவாசம் என இயற்கையோடு ஒன்றிய வாழ்வு பற்றிய ஒரு அனுபவத்தை தருவதால் இதில் பக்கவிளைவுகள் கிடையாது.

இயற்க்கை மருத்துவ குறிப்புகள் :

  • குப்பை மேனி இலையையும் உப்பையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அரிப்பு, சிரங்குகளுக்குத் தேய்த்து வந்தால் குணமாகும்.
  • தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி ஏற்படும் என்று பலர் நினைத்துள்ளனர். ஆனால் தயிர் அவர்களுக்கு நன்மையே ஏற்படுத்தும் இதில் புரொபயோட்டிக் அடங்கியுள்ளது.
  • நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நாட்டுவெல்லம் சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நீங்கும்.
  • உடல் எடையைக் குறைக்க இரவில் 1 ஸ்பூன் ஓம நீரை தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
  • கூடுமான அளவிற்கு சூடு நீரை குடிப்பதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.

இப்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் பல நிபுணர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளை ஆன்லைன் வழியே வீடியோ, ஆடியோ அல்லது உரை மூலம் பலரும் கேட்டு அதை பின்பற்றி மருத்துவமனைக்கு அல்லது சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு செல்ல முடியாத காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் மருத்துவர்களிடம் நேரடியாக ஆலோசனைகளை பெற்று தங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கி வருகின்றனர்.

அவ்வகையில் டாக்டர் சங்கீத் சோமநாதபாய் அவர்கள் இயற்கை மற்றும் யோக மருத்துவத்தில் பல்லாண்டுகளாக நிபுணத்துவம் பெற்றுள்ளதால் அவரிடமும் ஆன்லைனில் பலர் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். டாக்டர் சங்கீத சோமநாதபாய் பல்வேறு மாநில மக்களுக்கும் ஆன்லைன் ஆலோசனைகளை வழங்கி வருவதால் உங்களுக்கு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் நீங்களும் இவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

டாக்டர் சங்கீத் சோமநாத பாயை தொடர்புகொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன