கித்தார் இசை கற்க உங்களுக்கு ஆசையா?

  • by

இருக்கும் இசை கருவிகளில் மிகவும் தனித்துவமானது மற்றும் பலரும் விரும்பக்கூடியது தான் இந்த கித்தார். இந்த இசைக்கருவியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் வட அமெரிக்காவில் இசைக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகள் குறிப்பாக இந்திய போன்ற நாடுகளில் கித்தார் போன்ற இசை கருவிகள் முகலாயர்களுக்கு முன்னரே இருந்ததாக சுவடுகள் கிடைத்துள்ளது.

கித்தாரின் வகைகள் :

கித்தாரில் பல பிரிவுகள் உள்ளது அவற்றில் குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் கித்தார் மற்றும் அக்குஸ்டிக் கித்தார். இதில் மேலும் பல உட்பிரிவுகள் இடம் பெற்றுள்ளது.

  • அக்குஸ்டிக் கித்தார்
  • செவ்விசைக் கித்தார்
  • பேஸ் கித்தார்
  • எலக்ட்ரிக் கித்தார்
  • தோப்ரோ கித்தார்
  • தந்திக் கித்தார்
  • மேல் வளைவு கித்தார்

மேற்சொன்ன இந்த கித்தார் இசைக்கருவிகள் மிகவும் பிரபலமானது. இந்த கித்தார் இசைக்கருவிகள் பெரும்பாலான நாடுகளில் இன்றும் பிரபலமாக இசைக்கப்பட்டு வருகிறது.

அக்குஸ்டிக் கித்தார் :

அக்குஸ்டிக் கித்தாரில் நைலான் தந்திகளுக்குப் பதிலாக எஃகு தந்திகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஃகு தந்திகள் ஒலியினை அதிக படுத்துவதால் இதை பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் மின்சாரத்தை பயன்படுத்தி ஒலியை அதிகரிக்கும் வகையும் உள்ளது.

செவ்விசைக் கித்தார் :

செவ்விசைக் கித்தார் கருவிகள் நைலான் தந்திகளைக் கொண்டுள்ளன. இந்த இசை கருவி உட்கார்ந்த நிலையில் வாசிக்கப்படுகின்றது. மெக்சிகோவில் மரபுவழி இசை கித்தார் கொண்டு மீட்டுபவர்களை மேரியாச்சி என்று அழைப்பர். இந்த செவ்விசைக் கித்தார்களை ஸ்ப்பானிய கித்தார்கள் எனவும் அழைப்பர்.

எலக்ட்ரிக் கித்தார் :

இந்த எலக்ட்ரிக் கித்தார் மின் ஆற்றலால் இயக்கப்படுகின்றது. இதில் மின்காந்த ஆற்றலின் மூலமாக இசை எழுப்படுகின்றது. பழங்காலத்தில் கித்தாரின் உடலானது வெற்றிடமாக இருக்கும், அதில் இசை அலைகளின் மூலம் பெருக்கமடையும்; ஆனால் அதில் வெற்றிடம் இருப்பதைக் காட்டிலும் முழுமையான உடல் அமைப்பினை கொண்ட கித்தார்கள் வசதியானவை என்பதனால் எலக்ட்ரிக் கித்தார்களில் துளையிடுவதில்லை. முதன் முதலில் மேற்கத்திய இசையான ஜாஸில் எலக்ட்ரிக் கித்தார்கள் இடம்பிடித்திருந்தன.

தந்திக் கித்தார் :

தந்திக் கித்தார் என்பது எஃகுத் தந்திகளைக் கொண்டது. ராக் அண்டு ரோல் மற்றும் புளூஸ் இசைகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பேஸ் கித்தார் :

பேஸ் கித்தார் என்பது அடித்தொனிக் கித்தார் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பேஸ் கித்தார் பொதுவாக 4 தந்திகளைக் கொண்டுள்ளன. இவை E- A- D- G என்னும் தந்திகளை மேலிருந்து கீழாகக் கொண்டுள்ளன.

மேல் வளைவு கித்தார் :

மேல் வளைவு கித்தார் என்பது எஃகுத் தந்திகளைக் கொண்டுள்ளது. இதன் மேற்பகுதி குடைந்து எடுக்கப்பட்டு ஒரு வளைவைக் கொண்டிருக்கும். வயலின்களைப் போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இது பலரால் விரும்பி இசைக்கப்படுகிறது. இது மேற்கித்திய இசையான ஜாஸ் இசைக்கு ஏற்ற இசைக்கருவியாகும்.

கித்தாருக்குச் சுருதி சேர்ப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன.
கித்தார் இசைக் கருவியை பலரும் ஆன்லைனில் கற்று வருகின்றனர். இவ்வேளையில் ஆன்லைன் வகுப்புகளை கற்று கித்தாரில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர் அவ்வகையில் பல வருடங்கள் கிதார் வாசிப்பில் அனுபவம் பெற்ற ராக் ஸ்டார் ஜே. சாமுவேல் தாம்சன் அவர்கள் ஆன்லைன் கித்தார் வகுப்புகளை எடுத்து வருகிறார்.

ஜே. சாமுவேல் தாம்சன் இசை வகுப்புகளை குறிப்பாக கித்தார் சம்பந்தமான இசை வகுப்புகளை பல ஆண்டுகளாக நடத்தியும் பல கித்தார் இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து பல இசை கிதார் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

மேலும் அறிய -> கிதார் வாசிக்க ஆர்வமா!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன