இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துங்கள்!

  • by

உலகில் உள்ள உயிரினங்களின் மனதை இசைய வைப்பது இசையாகிறது. இசை என்பது எங்கும் எதிலும் பிறக்கும் காட்டில் உள்ள மூங்கிலில் தேனீக்களும் வண்டுகளும் இட்ட ஓட்டையினுள் மெல்லிய காற்று சென்றதால் இனிய இசை பிறந்தது, கொட்டும் மழையும் ஓர் இசைதான், கூவும் குயிலும் இசை தான் ஆக இசை எங்கும் எதிலும் நிறைந்துள்ளது.

மனங்களை கவரும் கித்தார் :

கித்தார் 2 பிரிவுகளை கொண்டுள்ளது. அதில் முதல் எலக்ட்ரிக் கித்தார் மற்றும் அஃக்ஸ்டிக் கித்தார். காலமாற்றத்தால் இவை பல்வேறு வடிவங்களில் பல்வேறு இசைகளை அடிப்படையாகக்கொண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கித்தார் இசை மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றினாலும் காலமாற்றத்தால் உலகெங்கிலும் பரவி இப்போது அனைத்து விதமான இசை நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. பெரும்பாலான மக்கள் கித்தார் இசையை கற்க ஆர்வத்துடன் இசை கல்லூரிகளிலும், இசை பயிற்றுவிக்கும் நிறுவனங்களிலும் தங்களை பதிந்து கொள்கின்றனர்.

கித்தார் இசை குறியீடுகள் :

கித்தார் இசைக் குறியீடுகள் மேற்கத்திய இசையின் பாரம்பரிய இசைக்குறியீடுகளிலிருந்து துவங்குகிறது. மேற்கத்திய இசையின் இசைக் குறியீடுகளைப் கற்பது ஒரு தனிக்கலை.

எழுதுதல் :

கித்தாரின் இசையை முதலில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை எடுத்து, அதை முதலில் பார்த்தும், பிறகு பார்க்காமலும் எழுதி பழகவேண்டும்.

படித்தல் :

ஒரு பாடலை எழுதி அந்த நோட்டுகளை, உங்கள் மனதில் பலமுறை படித்து ஓட விடுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் கித்தாரை வாசிக்கக் கூடாது. இப்படி செய்வதால் உங்களுக்கு இசையின் புரிதலை மேம்படுத்தும்.

வாசித்தல் :

இப்பொழுது, நீங்கள் எழுதியதை பார்த்து வாசிக்க வேண்டும். தவறுகள் ஏற்பட்டாலும் சரி. எப்போதும் கித்தாரை பார்க்கும் போது நீங்கள் எடுத்து வைத்துள்ள குறிப்பையும் பாருங்கள்.

கித்தார் வாசிக்கும் முறை :-

கித்தார் பலகையை அழுத்தும் போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். கித்தாரை வாசிப்பவர்கள் தங்கள் வலக் கையில் தந்தியை அழுத்தியவாறு இடக் கையில் பலகையை அழுத்தி இசையை மீட்பார்கள். கித்தாரின் ஒரு தந்தியினை அழுத்தாமல் வாசித்தால் அதன் இயல்பான சுருதியை தரும். இதன் அடிப்படையில் E- A- D- G- B- E எனும் 6 தந்திகளும் அமைந்துள்ளது.

கித்தாரில் சுருதி :

கித்தாரில் 6 தந்திக் கித்தாரில் கீழிருந்து மேலாக தந்திகள் எண்ணப்படும். இதன்படி, 6 வது தந்தியிலிருந்து 1வது தந்தி வரை ஒவ்வொரு தந்தியின் இயல்பான சுருதி E-A-D-G-B-E எனும் சுர வரிசையில் அமைந்திருக்கும். இதை தமிழில் க-த-ரி-ப-நி-க என்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது திறந்த ஒலித் தந்திகள் எனப்படுகின்றன. 1வது மற்றும் 6வது தந்திகள் ஒரே சுரத்தைக் கொண்டிருந்தாலும் அவை உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையில் ஒலிக்கின்றன. இதற்கு அந்த தந்தியின் தடிப்பு காரணமாகிறது.

கித்தார் இசைக்கு ஏதும் தடையில்லை இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஊரடங்கும் இதற்கு சாதகமானதே. இந்த கிதார் இசையை நீங்கள் ஆன்லைனில் வீட்டில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். கித்தார் இசையில் பல ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்த பல இசை ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பீட்டர் ஜெபராஜ் சிறந்த கித்தார் கலைஞர் வர பல நுணுக்கங்களை வித்தியாசமான முறையில் கிட்டார் இசையை இசைத்து பலருக்கும் உதவி வருகிறார். இவர் நடத்தும் கித்தார் ஆன்லைன் வகுப்புகளில் நீங்கள் கலந்துகொண்டு கித்தார் மீதான உங்கள் காதலை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை கித்தார் இசையில் பெரிய அளவில் ஜொலிக்கவைக்கும். இன்றே இணைந்திடுங்கள் பீட்டர் ஜெபராஜ் உடன்.


பீட்டர் ஜெபராஜ் உடன் கித்தார் வகுப்புகளை முன்பதிவு செய்ய…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன