உங்களை கட்டிப்போடும் கர்நாடக இசை!!!

 • by

கர்நாடக சங்கீதம் என்பது தென்னிந்திய சங்கீதமே ஆகும். தென்னகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். உழை, இளி, குரல், துத்தம், கைக்கிளை, விளரி மற்றும் தாரம் என செம்மொழியில் ஏழிசையாக அமைந்துள்ளது. தமிழ் மொழியில் வடமொழிக் கலந்த பின் இந்த 7 இசைகளை ‘சுரம்’ என்றனர்.

கர்நாடக இசைக் கருவிகள் :

கர்நாடக இசைக்கருவிகள் 3 பிரிவுகளாகப் உள்ளது. பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை ஏற்படும் கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும். துளைகள் வழியாக ஒலியுண்டாக்கும் ஒரு பொருள் மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் ஏற்படும் இசை காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன.

நரம்பு வாத்தியங்கள் :

உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை ஏற்படும் கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 • யாழ்
 • கோட்டு வாத்தியம்
 • வீணை
 • வயலின்
 • தம்புரா

தாள வாத்தியங்கள் :

தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும்

 • தவில்
 • உடுக்கை
 • மிருதங்கம்
 • மோர்சிங்
 • ஜலதரங்கம்
 • கஞ்சிரா
 • கடம்

காற்று வாத்தியங்கள் :

துளைகள் வழியாக ஒலியுண்டாக்கும் ஒரு பொருள் மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் ஏற்படும் இசை காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன.

types of tones in carnatic music
 • புல்லாங்குழல்
 • முகவீணை
 • நாதஸ்வரம்

கர்நாடக இசை சொற்களுக்கேற்ப தமிழ் இசை சொற்கள் :

சுரங்கள் நுட்பமாகப் பிரிக்கப்படும் போது அவை ‘ஸ்ருதிகள்’ என அழைக்கப்படுகின்றன. தொன்மைக் காலத்தில் அவை ‘அலகுகள்’ என்றும் பின் ‘மாத்திரைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைய தமிழ் ராகங்கள் வடமொழியில் பலரால் மாற்றம் செய்யப்பட்டது பிற்காலங்களில் இந்த உண்மை வெளிவந்தது. பண் என்பது தமிழிசை ராகத்தை குறிக்கும். சில தமிழ் மொழி பண்ணிற்க்கு ஏற்ற வட மொழி பெயர்கள் பின்வருமாறு,


தமிழ்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்கள்

அரும்பாலைப்பண் – கல்யாணி
கோடிம்பாலைப்பண் – கரிஹாம்போதி
செம்பாலைப்பண் – சங்கராபரணம்
படுமலைப்பண் – கரஹரப்பிர்யா
விளரிப்பாலைபண் – நடன பைரவி
செவ்வழிப்பண் – தோடி
மேற்செம்பாலைபண்- சுத்த தோடி

கர்நாடக இசையில் ஸ்ருதி, தாளம், நாதம், ஸ்வரம் என்னும் கலைச்சொற்க்கள் உள்ளது. இவற்றை அடிப்படையாக கொண்டு தான் இன்றும் பல இசை கச்சேரிகளில் பாடல்கள் அமைந்துள்ளது.

frequently asked question about carnatic music

நாதம் :

நம் செவிக்கு இனிமை கொடுப்பது த்வனி எனபடும் நாதமே. சங்கீதத்தில் மூல ஆதாரமாக விளங்குவது நாதம். சீரான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. சீரற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது.

இதில் பொதுவாக இரு பிரிவுகள் உள்ளது

 • ஆகதநாதம் – மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம்.
 • அநாகதநாதம் – இயற்கையாக உண்டாகும் நாதம்.

நாதத்திலிருந்து ஸ்ருதியும், ஸ்ருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து ராகமும் உண்டாகிறது.

ஸ்ருதி :

ஸ்ருதி என்பது ஸ்வரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படை ஒலியமைப்பு ஆகும். ஸ்ருதி உற்பத்தியாகின்றது. இதை கேள்வி என்றும் அழைப்பர்.

 • பஞ்சம சுருதி
 • மத்திம சுருதி

இவை இரண்டும் மத்யஸ் தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.

ஸ்வரம் :

இயற்கையாக ரஞ்சனையை, கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். இவை சப்த ஸ்வரங்கள் என்றழைக்கப்படுகிறது. சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் 7 ஆகும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை என்று பெயர் உண்டு.

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட பலர் தங்கள் சங்கீத ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் விதமாக ஆன்லைனில் சங்கீதத்தை கற்று வருகின்றனர். இப்போதுள்ள சூழ்நிலையில் சங்கீத பயிற்றுவிப்பாளர்கள் பலர் ஆன்லைன் மூலம் கர்நாடக சங்கீத வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் வினயா கார்த்திக் ராவ் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றார். வினயா கார்த்திக் ராவ் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் பல்வேறு இடங்களிலும் சென்று இசைநிகழ்ச்சிகளை நடத்தியும் உள்ளார்.

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட பலர் தங்கள் சங்கீத ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் விதமாக ஆன்லைனில் சங்கீதத்தை கற்று வருகின்றனர். இப்போதுள்ள சூழ்நிலையில் சங்கீத பயிற்றுவிப்பாளர்கள் பலர் ஆன்லைன் மூலம் கர்நாடக சங்கீத வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் வினயா கார்த்திக் ராவ் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றார்.

வினயா கார்த்திக் ராவ் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் பல்வேறு இடங்களிலும் சென்று இசைநிகழ்ச்சிகளை நடத்தியும் உள்ளார்.

வினயா கார்த்திக் ராவ் அவர்களுடன் கர்நாடக இசையை கற்க…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன