நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

  • by

யோகா ஒரு முன்னோட்டம்:

உலக மக்கள் இன்புற வாழ உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தான் இந்த யோகா. யோகா என்பது நம் உடல், மனம், அறிவு, உணர்வு  மற்றும்  ஆத்மாவை உணர்த்தும்  ஒரு உன்னதமான கலையாகும்.

யோகா-வின் வரலாறு: 

இந்த யோகக்கலை எங்கிருந்து,யாரால் உருவாக்கப்பட்டது என்கின்ற சரியான மற்றும் தெளிவான வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் தொல்பொருள்  சார்ந்த ஆய்வுகளில் கிடைத்த அரிய சில தகவல்கள் நமக்கு யோகக்கலை பற்றிய  புரிதலை வழங்குகிறது.

மேலும் படிக்க – பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..!

ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் மேற்கொண்ட தொல்பொருள்     ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்றவைகளில் சித்தாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஆணின்  உருவம்  பொறிக்கப்பட்ட ஒரு சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. கார்பன் கால கணிப்பின்  மூலம் கிட்டத்தட்ட 5,000ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  பதஞ்சலி மற்றும்  திருமூலர் ஆகிய  முனிவர்கள் யோகக்கலையின் வளர்ச்சிக்கு   ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை பாடல்களாகவும், சூத்திரங்களாகவும் கொடுத்தவை தான் இன்று வரை பலராலும் கடைபிடிக்கப்பட்டு  வருகின்றன.

யோகா-வின் தாக்கம்:

தற்போது யோகா-வை  உலகின் பல்வேறு மக்கள் அறிந்து கொண்டுள்ள இவ்வேலையில்  இன்றும் இந்தியாவில் பலர் இதன் புரிதலை கொண்டிருக்கவில்லை.  

 இந்த உன்னதமான யோகக்கலை பற்றிய போதிய விழிப்புணர்வு பள்ளிகள், கல்லூரிகள், அரசாங்கம் முதற்கொண்டு பல தொண்டு நிறுவனங்களாலும்  ஏற்படுத்தப்பட்ட  பின்னரும் மக்கள் இதை பற்றிய ஒரு அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பது  நிதர்சனமான உண்மை.

யோகா-வில் பொதிந்துள்ள நன்மைகள்:

இந்த யோகா பயிற்சி செய்வதன் மூலம் பல்வேறு உடல் சார்ந்த, மனம் சார்ந்த  நன்மைகள் வாழ்வில் நிம்மதி போன்றவை ஏற்படும், இதில் பத்திற்கும்  மேற்பட்ட  ஆசனங்கள் செய்வதன் மூலம் நம் சரீரத்தில் உள்ள 80% நோய்களுக்கு தீர்வு ஏற்படும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை, அதிலும் குறிப்பாக சூரிய  நமஸ்காரம் என்பது நம் முன்னோர்கள்  நமக்கு தந்த ஒரு சிறந்த பயிற்சி.

மேலும் படிக்க – யோகாவில் இருக்கும் அறிவியல்பூர்வ நன்மைகள்..!

நாம் இயற்கையை விட்டு சற்று விலகி கொண்டிருக்கும் இந்த நவீன காலகட்டங்களில்  சூரிய நமஸ்காரம் நமது முழு உடல் மனம் போன்றவற்றினை நன்கு செம்மைப்படுத்த  உதவுகிறது. இந்த சூரிய நமஸ்காரத்தை ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என  அனைவரும் செய்யலாம். ஒருசில ஆசனங்களை சிலர் செய்வதை தவிர்ப்பது சிறந்தது, மேலும் யோகாசனங்களை மேற்கொள்ள ஒரு ஆசான் இருப்பது அவசியம்.

இத்தகைய யோகா-வின் மகிமையை அறிந்துகொண்ட அயல் நாட்டினர் நம்  இந்திய நாட்டினை நோக்கி படையெடுக்கும் நிலை  தற்போது ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமன்றி சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இது யோகா-விற்கு மேலும் ஒரு அங்கீகாரம். பல்வேறு நன்மைகளை  தன்னுள்ளே  கொண்டுள்ள யோகா-வைமதம் சார்ந்தவைகளுடன்  ஒப்பிடுவது ஏற்புடையதாகாது, இது மனிதர்களுக்கானது என்ற ஒற்றை நோக்கம் கொண்டு வாழ்வு வளம் பெற  ஒன்றிணைவோம் யோகா-வில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன