பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
waking brahma muhurtham is bring good startup

லட்சுமிகடாட்சம் நிறைந்ததுதான் பிரம்மமுகூர்த்தம், இச்சமயங்களில் எவர் ஒருவர் தினமும் எழுந்து சூரிய காற்றை சுவாசித்து, சூரியநமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. பிரம்மா யோகத்திற்கு திதி வார நட்சத்திர தோஷம் என எதுவும் கிடையாது. அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இருப்பதுதான் பிரம்ம முகூர்த்தம். இது ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றார் போல் மாறும். எனவே அவர்கள் நாட்டில் அதிகாலை நேரம் பின்படுத்தப்படுவது பிரம்ம முகூர்த்தம்.

பிரம்மனின் செயல்

நம்மை படைத்தவர் பிரம்மர் என்று புராணங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி இரவில் உறங்கும் ஒவ்வொருவரும், மறுநாள் காலையில் எழுவதே ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. எனவே அந்த எழுதுதல் மிக முக்கியமானதாக இருக்க வேண்டி அதை பிரம்மமுகூர்த்தத்தில் எழுவதினாள் நமக்கு பிரம்மனின் ஆசீர்வாதம்  கிடைக்கும். ஆனால் இதன் அருமை தெரியாமல் பலரும் தாங்கள் நினைத்த நேரத்திற்கு எழுந்து வருகிறார்கள். இதுவே இவர்களின் ஆரோக்கியத்தை குறைத்து ஒரு நாள் காலையில் ஏழாத நிலை ஏற்படும். மனிதர்களை தவிர்த்து மீதி உளள எல்லா உயிரினங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அதற்கான வேலைகளை செய்ய தொடங்குகிறது. ஆனால் மனிதனாகிய நாம் மட்டும்தான் இன்னும் இதை சரியாக கடைபிடிக்காமல் தவறான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

மேலும் படிக்க – இறை அருள் தரும் மலர்கள் இறைக்கு சூடும் முறை

சுப காரியங்களுக்கு சிறந்தது

பொதுவாக இந்துக்கள் தங்கள் வீட்டில் சுபகாரியங்கள் ஏதேனும் நிகழ்த்துவதாக இருந்தால் அவர்கள் நாள், தேதி, கிழமை, நேரம் என அனைத்தையும் பார்த்து அதற்கேற்ப ஒரு காரியத்தை செயல்படுத்துவார்கள். பிடித்த நாளில் நல்ல நேரம் எது இல்லை என்றால் கவலை வேண்டாம். அதை நாம் பிரம்மமுகூர்த்தத்தில் செய்வதன் மூலமாக நமக்கு எந்த தீங்கும் வராது.

ஆரோக்கிய கதிர்வீச்சு

பிரம்ம முகூர்த்தத்தில் சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இது நம் உடம்பில் படும்போது நமது நரம்புகள் புத்துயிர் பெற்று நமக்கு புது தெம்பையும், உற்சாகத்தையும் தருகிறது. நாம் இச்சமயங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நமது ஆயுள் அதிகரிக்கும். இதனால்தான் அதிகாலையில் எழுவது ஆரோக்கியமான ஒன்று, என நம் முன்னோர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அதிகாலை பொழுதில் நமது மூளையின் செயல்பாடு பலமடங்கு அதிகமாக இருக்கும். எனவே இச்சமயங்களில் நமது சிந்திக்கும் திறன் மற்றும் ஆற்றல் அதிகரித்து நம் வேலைகளை எளிதாக்கும்.

மேலும் படிக்க – விருப்பங்களை நிறைவேற்றும் பிரபஞ்சத்தின் 555

சூரிய நமஸ்காரம்

பிரம்மமுகூர்த்தம் முடியும் தருவாயில் சூரிய ஒளி உதயமாகும் போது நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம். இதன் மூலமாக நமது கண்கள் வலுவடைந்து நமது உடல் ஆரோக்கியமாகும்.

அதேபோல் அதிகாலையில் நாம் ஓசோன் காற்றை சுவாசித்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு உண்டாகி நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே அதிகாலை பொழுதில் யோகா பயிற்சியை திறந்தவெளியில் செய்வது நல்லது.

மேலும் படிக்க – அருள் தரும் கணபதியின் ரூபங்கள், தரிசனங்கள்

அதிகாலை நீராடல்

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் நமக்கு பல சிறப்புகள் கிடைக்கும் என சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல் பிரம்ம முகூர்த்தத்தில் ஒரு விதமான உஷ்ண உங்கள் நிலவுவதால் குளிர்ந்த நீரும் வெதுவெதுப்பாக மாறும். எனவே அச்சமயங்களில் இதுபோன்று நீர் குளிப்பதற்கு உகந்ததாக மாறுகிறது. எனவே பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

நம் வாழ்க்கையில் ஏதேதோ செயல்களை மிக எளிதில் செய்கிறோம். ஆனால் எளிதாக செய்யக்கூடிய அதிகாலை எழுவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. எனவே வாழ்க்கையில் நாம் எதை தொடர்ந்து 40 நாட்கள் செய்து வருகிறோமோ அதுவே நம்முடைய பழக்கமாக மாறுகிறது. அதை அறிந்து தினமும் தொடர்ந்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழும் பழக்கத்தை கொண்டு வாருங்கள், அதுவே உங்கள் நிரந்தர பழக்கமாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன