ரக்குள் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி..!

  • by
viral video of rakul preet singh

கன்னட மொழி திரைப்படத்தில்  அறிமுகமாகி பின்பு தமிழ், தெலுங்கு, இந்தி என ஏராளமான மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்துள்ள கதாநாயகிதான் ரக்குள் பிரீத் சிங். எல்லா மொழிகளிலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து கொண்டே இருக்கிறார்கள். இவர் நடித்த படங்களின் மூலமாக பெற்ற ரசிகர்களை விட சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் பதவிகளை பின் தொடர்வதன் மூலமாக கிடைத்த ரசிகர்கள் ஏராளம். இது அனைத்திற்கும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் காணொளிகள்.

யோகா பயிற்சி

ரக்குள் பிரீத் சிங் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றிய பதிவுகள் ஏராளமாக பதிவிட்டு வருகிறார். அதிலும் ரசிகர்கள் கூகுள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு யோகா பயிற்சியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்து அதை காணொளி மூலமாக வரும் இவரின் வீடியோக்கள் இப்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க – சினிமா பிரபலங்கள் இதுபோன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும்..!

முத்த பயிற்சி

சமீபத்தில் கிஸ் த வால் என்ற பெயரில் ஒரு யோக பயிற்சியை இவர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையின் பெயர் சக்கராசனம், இதை அவர் சரியாக செய்து தனக்கு பின்னால் இருக்கும் சுவற்றில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த காணொளியை ஏராளமானோர் பார்த்ததால் இது இந்தியா முழுவதும் இதில் பிரபலமாகியுள்ளது. அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கின் ரசிகர்களின் எண்ணிக்கை இதன் மூலமாக அதிகரித்துள்ளது. சினிமா பிரபலங்கள் இதுபோன்ற காணொளிகளை பதி விடுவதன் மூலமாக ரசிகர்களும் உற்சாகமடைவார்கள்.

சினிமா பிரபலங்கள்

இதே போல் ரசிகர்களை அதிகமாக கொண்டுள்ள நடிகர், நடிகைகள் உபயோகமுள்ள பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ரசிகர்களும், புத்துணர்ச்சியுடன் மற்றும் உற்சாகமாக இருப்பார்கள். வீட்டில் சொல்வதை கேட்கும் மனிதர்களை விட தான் பின்தொடரும் பிரபலங்கள் எது சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்டு நடக்கும் சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம். இதை எல்லா பிரபலங்களும் சரியான முறையில் எடுத்துக் கொண்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க – தொலைக்காட்சி முடக்கத்தில் இணையதள சேவை..!

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதனால் அனைத்து பொழுதுபோக்கு துறைகளும் முடங்கி உள்ளது, எனினும் இவர்களின் ஒரே பொழுதுபோக்காக கருதப்படுவது இணைய தளம் மட்டுமே. அதில் எல்லா பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி இது போன்ற ஏதேனும் உபயோகமுள்ள காணொளிகளை பதிவிட்டால் அவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு இந்த ஊர்டங்கை மக்கள் அமைதியாக கடைப்பிடிப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன