நடிகர் வடிவேலுவின் உருக்கமான பாடல்..!

  • by
viral song of vaigai puyal vadivel on corona virus

தமிழக மக்களை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வழியில் மக்களை சிரிக்க வைத்து, சந்தித்துவரும் சினிமா பிரபலம் தான் நம்முடைய நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு அவர்கள். இவர் கடந்த வாரம் கொரோனா வைரஸிற்க்கு எதிராக ஒரு பதிவை இணையதளத்தில் பதிவிட்டார். அதில் மக்களை வீட்டில் இருக்கும் படியும், இந்த வைரஸ் தொற்றை எளிதாக எடுக்க வேண்டாம் என்றும், எல்லோரும் மிகப் பாதுகாப்பான முறையில் அவரவர் வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அச்சமயத்தில் அவர் கண்களில் தன்னை அறியாமல் தானாக கண்ணீர் கொட்டியது. இதனால் மனம் உருகிய அனைத்து வடிவேல் ரசிகர்களும் இந்த பதிவை வைரல் ஆக்கினார்கள்.

வடிவேலுவின் பாடல்

நடிகர் வடிவேலு நேற்றைய தினத்தில் மீண்டும் ஒரு காணொளி பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் அவர் கொரோனா வைரஸின் தாக்கத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு பாடலை பாடியுள்ளார். எல்லோரும் கம்பீரமாக பார்க்கப்பட்ட நடிகர் வடிவேலு, ஏராளமான மக்களை சந்தோஷ படுத்தியவர். இவர் கண்ணீர் மல்க இந்த பாடலை தனது ரசிகர்களுக்காக அர்ப்பணித்து பாடியுள்ளார்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களில் கொரோனா நன்கொடை..!

“காடுகளை அழித்தோம் மண்வளம் தொலைத்தோம் நீர் வளம் முடித்தோம்

நம் வாழ்க்கையைத் தொலைத்தோம்

வைரஸாய் வந்தே நீ

பாடம் புகட்டிவிட்டாய்

இயற்கையை மதிக்கின்றோம்

இதோடு விட்டுவிடு”

இதுதான் அவர் பாடிய பாடலில் இருந்த வரிகள்.

இயற்கையின் விளையாட்டு

இந்தப் பாடலில் ஏராளமான உள்ளத்தை அடக்கி உள்ளார் நடிகர் வடிவேலு. அதாவது இன்று வரை இயற்கைக்கு நாம் செய்த துரோகத்தின் கணக்குகள் எல்லாம் அதிகரித்து அது நம்மை மீண்டும் இது போன்ற வைரஸ் தொற்றின் மூலமாகத் தாக்குகிறது என்றார்‌. இதை தவிர்த்து இனிமேல் இயற்கையை மதித்து அதற்குத் தீங்கு செய்யாமல் பாதுகாப்பதன் மூலமாக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் எனவே இனிமேல் இந்த கொரோனா வைரஸின் தாக்குதலை குறைந்து நம் உலகை விட்டு வெளியேறும்படி நடிகர் வடிவேல் அவர்கள் பாடல் மூலமாக கேட்டுள்ளார்.

மேலும் படிக்க – ரக்குள் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி..!

நகைச்சுவை நடிகர்

கடந்த ஓராண்டாகவே அவர் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை, இருந்தாலும் அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளை மக்கள் திரும்பத் திரும்ப பார்த்து அதன் மூலம் ஏராளமான நகைச்சுவை பதிவுகளை உருவாக்கி இணையதளம் மூலமாக தினமும் பதிவிட்டு வருகிறார்கள். அன்று முதல் இன்று வரை இருக்கும் எல்லாம் தலைமுறையினரும், சந்தோஷமாக கொண்டாட கூடிய ஒரு அற்புதமான நகைச்சுவை நடிகர் யார் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான்.

இவரைப் பார்த்த ஏராளமான மக்கள் மகிழ்ச்சியின் கடலில் முழுகி உள்ளார்கள். ஆனால் மக்களுக்கு ஒரு ஆபத்து நிகழ போகிறது என்ற அச்சத்தினால் இவர் தன் கம்பீரத்தை துறந்து கண்ணீர் மல்க தங்களது ரசிகர்களை பொறுப்புடன் செயல்படும் படி கேட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன