மீண்டும் சினிமாவில் விஜமாகின்றார் விஜயசாந்தி!

  • by

ஹைதிராபாத்தில் நடைபெற்ற திரைப்படவிழா மேடையில்  நடிகர் சிரஞ்சீவியும் நடிகை விஜயசாந்தியும் நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றியதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற  பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டது. இத்திரைப்பட விழாவில் சிரஞ்சீவி வயசானாலும் உன் திமிரும் அழகும் குறையவில்லை என்று பேசினார். 

மலரும் நினைவுகள்:

இதற்கு பதிலளித்த விஜயசாந்தி என் கைகளை பாருங்கள் மிக கடினமாக ர்ஃப் அண்ட் ட்ஃப் ஆக இருக்கின்றது. அரசியல் வேறு சினிமா வேறு, சினிமாவில் நான் உங்கள்  ஹீரோயினி என்றார். இருவரும் இணைந்து 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டோம். மீண்டும் நடிக்க முடியுமா என்று கேட்டார். 

விஜய சாந்தியும், சிரஞ்சீவியும் தங்களது மலரும் நினைவுகளை அசைப் போட்டனர். அப்பொழுது  பேசிய சிரஞ்சீவி, விஜயசாந்தியைப் பார்த்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றார்.  சென்னை தீ நகரில் வீடு இருந்த பொழுது தனது வீட்டு விழாக்களுக்கு தவறாமல் கலந்து கொள்வார். தானும் அவர் வீட்டுக்கு செல்வதுண்டு என்று கூறினார் ரசிகர்கள் இதனைப் பார்த்து கரகோசம் எழுப்பினார்கள். 

மேலும் படிக்க – சிவாஜி கணேசனின் பேரனும் விக்ரம் பிரபுவின் வாழ்க்கைமுறை.!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி:

தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சீரஞ்சிவி ஆந்திராவின்  என்.டி,ஆர், நாகேஸ்வராவுக்குப்பின்  நடிகர் சிரஞ்சீவி அறிமுகமாகி மாஸ் அண்ட் கிளாஸ் என்ற பெயரை தெலுங்கில் பெற்று மெகா ஸ்டார் என அழைக்கப்பட்டார். சிரஞ்சீவியின் பெரும்பாண்மையான படங்கள் ஹிட் அடித்தன. அரசியலில் நுழைந்த சிரஞ்சீவி அது எடுபடாமல் மீண்டும்  தனது 150 கைதி படத்தில் நடிக்கத் தொடங்கினார். 

சிரஞ்சீவி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட விஜய சாந்தியும் ஒன்றாக ஒரு மேடையில் சந்தித்தனர். விஜயசாந்தி சிரஞ்சீவி சந்திப்பானது  பல வருடங்களுக்குப் பிறகு நடந்த ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜாவால் கல்லூக்குள் ஈரம் படம் மூலம் விஜயசாந்தி அறிமுகப்படுத்தப்பட்டார். 25 ஆண்டுகள் தமிழ்,  தெலுங்கில் தில்லாக பெருமிதப்படுத்தப்பட்டார். 180 படங்களுக்கு மேல் தமிழ் தெலுங்கு மொழியில் நடித்திருந்தார். 

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

இந்திய சினிமாவில் ரஜினிக்கு இணையாக ஒரே தொகை சம்பளம் பெற்ற ஒரே நடிகை விஜயசாந்தியாவார். 1980 இல் சினிமாவில் நடிக்கத் துவங்கி 2006 வரை  நடித்துவந்தார். 2006 இல் அவர் நடித்த நாயுடம்மா இறுதியானதாக இருந்தது. தீவிர அரசியலில் இருந்தமையால் சினிமாவில் இருந்து காணாமல் போனார் தற்பொழுது மீண்டும் ஆளுமை கொண்ட நாயுடம்மா நடிகையாக மேக்கப் அப் போட்டு நடிக்கத் துவங்கிவிட்டார். சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் நடிக்கும் இந்தபடம் அவரை பேச வைக்கும் என நம்பபடுகின்றது மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறன. 

பணிவு, ஆளுமை, தீவிரமாக நாம் பார்த்துவந்த விஜயாசாந்தி இன்று  மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பின் ஒப்பனை இட்டு கேமரா முன்பு நிற்கும் பொழுது  ரசிகர்களின் தாக்கம் வேறு மாதிரி இருக்கும். 

மகேஷ்பாபுவின் சரிலேது நீகெவரு என்ற படத்தில் மீண்டும் விஜயசாந்தி நடிக்கவுள்ளார். சங்கராந்தியில் படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன