அன்று எம்ஜிஆர் இன்று விஜய் என பரபரக்கும் டிவிட்டர்

  • by

ஜனவரி 17 இல் எம்ஜிஆர் பிறந்தார். எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் மிகக் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மக்கள் தலைவர் எம்ஜிஆர் மிகச் சிறந்த கொடையாளி, ஆட்சியாளர், கரிஸ்மாட்டிக் தலைவராக இருந்தார். 1952 முதல் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கட்சியின் சாதரண உறுப்பனராக சேர்ந்தது திரைப்படங்களின் நல்ல கருத்துக்கள் பேசி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

கட்சியில் ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் 1962 இல் இரண்டாம் முறையாக சிறந்து செயல்பட்டு வந்தார். காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என எதிர்க்கட்சியையும் புகழ்ந்து பேசி பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.

1965 இல் இவர் சட்டமன்ற உறுப்பினார் மீண்டும் 1971 இல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாதி எம்ஜிஆர் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக 1972இல் கட்சியை விட்டு வெளியேறினார்.

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

1972 ஆம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் தொடங்கி செயல்படார். 1977 முதல் அ.இ.ஆ.தி.மு.கா தனது ஆட்சியை தொடங்கியது. அரிசி தேவைக்கு உண்னாவிரதம் இருத்தல், மத்திய அரசிடம் துணிந்து பேசுதல் இலங்கை பிரச்சனையில் தலையிடுதல் போன்ற பெரிய அளவில் செயல்பாட்டில் ஈடுபட்டார்.

மக்களிடையே புரட்சி தலைவர் மக்கள் நாயகம் எம்ஜிஆர் என அழியா புகழ் பெற்று வாழ்ந்தார்.

ஜெயலலிதா மகேந்திரை தந்த மாமேதை:

எம்ஜிஆர் ஒரு மாமேதை நல்ல உள்ளமுடன் செயல்பட்டவர். மக்களின் மீது மிகுந்த அன்புடன் செயலபட்டார். தமிழ்நாட்டிற்கு ஜெயலலிதா என்ற சிறந்த ஆளுமையை கொண்டு வந்த பெருமை எம்ஜிஆரை சாரும். மற்றும் இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநரான மகேந்தரரை கொண்டு வந்த பெருமையும் எம்ஜிஆரை சாரும். மாபெரும் நடிகர், நல்ல மனிதர், முதலமைச்சர் என பன்முகங்களை தன்னக்கதே கொண்ட தன்னிகரவற்றர் ஆவார்.

பிறந்தநாள் கொண்டாட்ட விழா:

தமிழகத்தில்  முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான எம்.ஜி.ராமசந்திரனின் 103வது பிறந்தநாள் இன்று அ.இ.அ.தி.மு.கவினாரால் கொண்டாடப்படுகின்றது. எம்ஜிஆரின் ஆளும் கட்சியான அதிமுகவினர் இன்று அவரது சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்து மண்டங்கள் வாரியாக  கொண்டாடப்பட்டு அண்ணதானம் செய்கின்றனர்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் எம்ஜிஆர் சமாதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

ஜெயலலிதா பற்றி எடுக்கப்படும் படத்தில் அரவிந்த சாமி எம்ஜிஆராக நடிக்கவுள்ளார். பஸ்ட் லுக்கில் அப்படியே எம்ஜிஆரின் லுக்கில் ஒரு நடனம் ஆடியிருப்பார்.

புதுசா தினுசா தொடங்கிய விஜய் ரசிகர்கள்:

 விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அரசல் புரசலாக பேசி வரும் நிலையில் விஜய் படங்களிலும் எம்ஜிஆருக்கு என  அதிகமாக இன்புளுயன்சுகள் உள்ளன, சமீபத்தில் வெளியான மெர்சல், பிகில் போன்ற படங்களில் எம்ஜிஆர் குறித்த வசனங்கள், பாடல்கள் இடம்பெறறிருந்தால், இதை வைத்து இன்று ரசிகர்கள் கிளப்பி  விட்டுள்ளனர். . விஜய் ரசிகர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளில் “அன்று எம்ஜிஆர் இன்று விஜய்” என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

எம்ஜிஆர் மக்களுக்கு கை காட்டுவது, குழந்தைகளுக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற புகைப்படங்களுக்கு நிகராக விஜய்யும் அதே செயல்களை செய்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு பந்தா காட்டி சீன்  கிளப்புகின்றனர். ஹேஷ்டேக் வேகமாக ட்ரெண்ட் ஆகி, அதிமுகவினர் இதனை எதிர்த்து விஜய் ரசிகர்களின் இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

நாட்டின் வளர்ச்சி பற்றிய யோசனை இல்லாமல் நாயகன்கள் பின்னால்  ஓடும் ரசிகர்களையும் அவர்களது செயல்கள் தேவையற்ற வதந்தி என கூறி வருகின்றனர்.   தமிழ் நாட்டில் அரசிலயல் தகவல்கள் எல்லாம் நம்மை திடுக்கிடச் செய்யும் போது இதுவேறயா என மக்கள் குமுறுகின்றனர்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன