முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வயாகரா..!

  • by
viagra used by ancient people to satisfy sexual needs

பண்டைய தமிழர்கள் மற்றும் சீனர்கள் ஏராளமான மூலிகைகளை பயன்படுத்தி தங்கள் ஆயுர்வேத மருத்துவத்தை மேம்படுத்தி வந்தார்கள். அதில் கடல் மூலமாக பயணம் செய்து இது போன்ற மூலிகைகளின் பயன்களை உலகம் முழுக்க பரப்பி வந்தார்கள். இப்படி நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஏராளமான மூலிகைகளை வயாகரா போன்ற மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படுத்தி வந்தார்கள். ஆண், பெண் என இவர்களின் உடலுறவில் ஏற்படும் பிரச்சினையை தீர்த்து அவர்களை பல மணி நேரம் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு இந்த வயாகரா உதவியாக இருந்தது. அப்படி நம் முன்னோர்கள் வயாகராவிற்க்காக பயன்படுத்தி வந்த ஆயுர்வேத மூலிகைகளை இந்த பதிவில் காணலாம்.

பூண்டு வகை

பூண்டு வகையை சேர்ந்தது தான் இந்த நெருஞ்சி. நம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நாம் நீண்ட நேரம் உடலுறவு மேற்கொள்ள முடியும், அதே போல அக்காலத்தில் ஒரு விதமான பூண்டு வகையை சேர்ந்தது தான் இந்த நெருஞ்சி. இது இன்றும் சீன நாட்டில் பூக்க வைத்து மருந்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதை தவிர்த்து விளையாட்டு வீரர்கள் வலுவாக இருப்பதற்கும் மற்றும் உடலுறவின் போது நமக்கு நீண்ட நேரம் ஆற்றலாக இருப்பதற்கு இந்த மூலிகை பயன்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – தயிர் யோகர்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மக்கா வேறு

அக்காலத்தில் வயாகராவிற்காக பயன்படுத்த வந்த மற்றொரு மூலிகைதான் இந்த மக்கா வேறு. இதை இன்றும் ஏராளமான நாட்டவர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை மாத்திரையாகவும் அல்லது வேறு கலந்து நீராகவும் பயன்படுத்தி வருகிறார்கள். உடலுறவின் மேல் விருப்பம் இல்லாதவர்கள் இதை சாப்பிடுவதன் மூலமாக அவர்களின் உணர்வு அதிகரித்து ஆசையை தூண்டுகிறது. எனவே இது கணவன் மற்றும் மனைவிகள் ஆசையை துறந்த வயதிற்குப் பிறகு பயன்படுத்தலாம்.

சிவப்பு ஜின்ஸெங்

சிவப்பு ஜின்ஸெங் என்பது சீனர்களின் மருந்து வேர். இது பார்ப்பதற்கு சுக்கு போல் இருக்கும். இதை அக்காலத்தில் ஆண்மை சக்தியை அதிகரிக்க மற்றும் பெண்களின் உணர்வை அதிகரிக்க பயன்படுத்தி வந்தார்கள். ஆண்களின் உடல் உறுப்பை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவியது இது ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவிய மூலிகைப் பொருள். இதை தவிர்த்து உடல் உறவின் போது ரத்த ஓட்டம் சீராக்கி உங்கள் சதைகளை அமைதிப்படுத்த இந்த மூலிகை உதவுகிறது.

வெந்தயம்

நம்முடைய சமையலறையில் எப்போதும் இருக்கும் சமைக்கும் தானியம்தான் இந்த வெந்தயம். இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் உடலுறவை தூண்டும் ஹார்மோன்கள் சீராகச் செயல்படும். இது உங்கள் உடல் வலிமையை அதிகரித்து மற்றும் காம உணர்ச்சிகளை தூண்டும் சக்தி கொண்டது. ஒரு சிலர் உடல் உறவின்போது அதிக அளவில் பதட்டம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே வெந்தயத்தை சாப்பிட்ட பிறகு உடலுறவு மேற்கொள்வது அந்த பதட்ட நிலை குறைந்து உங்கள் இரத்தத்தை சீராக்க உதவும்.

மேலும் படிக்க – 2022ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்..!

குங்குமப்பூ

நாம் சாப்பிடப்படும் உணவுகளில் மிக அதிக விலையை கொண்டதுதான் இந்த குங்குமப்பூ. குங்குமப்பூ இயற்கையாகவே நமக்கு ஏற்படும் மன அழுத்த பிரச்சினையை குறைக்கிறது. இதைத்தவிர்த்து இருதயம், ரத்தம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்க குங்குமப்பூ உதவுகிறது. எனவே இதை முதலிரவின் போது கணவன் மற்றும் மனைவி இருவரும் பாலில் சிறிதளவு சேர்த்துக் கொடுப்பார்கள். இதனால் அவர்களின் காம உணர்ச்சி அதிகரித்து, நீண்ட நேரம் உடலுறவு மேற்கொள்ள உதவும்.

ஜிங்கோ, விசிறி மர மூலிகை எல்-சிட்ரூலைன், தர்பூசணி போன்றவைகள் கூட உங்கள் காம உணர்வை அதிகரிக்க உதவுகிறது. இதைத் தவிர்த்து நீண்ட நேரம் உடலுறவு கொள்வதற்கான ஆற்றலையும் இந்த உணவுகள் தருகிறது. எனவே அக்கால முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இந்த வழிகளை பின்தொடர்ந்து உங்கள் கனவுகளை உண்மையாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன