கொரோனாவை குணப்படுத்தும் வெண்டிலேஷன்..!

  • by
ventilation which cures corona virus

கொரோனா வைரஸ் மனிதர்களை முழுமையாக பாதிக்கிறது, அதில் முதல் பகுதியாக நம்முடைய நுரையீரலை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் தவித்து இருமல் மற்றும் தும்மல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கிறது. சுவாசக் குழாயில் ஏற்படும் அடைப்பின் மூலமாக வரும் நோய்கள் மிக மோசமான நிலைக்குத் நம்மைத் தள்ளுகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் தானியங்கி வெண்டிலேஷன்களை பயன்படுத்த வேண்டும்.

உலக நாடுகள்

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலில் இருப்பது அமெரிக்கா, அதைத் தொடர்ந்த இத்தாலி, பிரான்ஸ் ஸ்பெயின் போன்ற நாடுகள் இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியா இருக்கக் கூடாது என்ற எண்ணம் எல்லா இந்தியர்களுக்கும் உண்டு, இருந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது. கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு மிக முக்கியமாக இருப்பது வெண்டிலேஷன். இப்போது இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெண்டிலேஷன் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதை மற்ற நாடுகளிலிருந்து வாங்கி தங்கள் சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.

மேலும் படிக்க – ராகி மால்டில் மருத்துவ குணங்கள்..!

இந்தியாவின் நிலை

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்டிலேஷன்கள் இருக்கிறது, இன்று வரை கொரோனா தொற்றினால் இந்தியாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளார்கள். இதில் கிட்டத்தட்ட 300 பேர் குணமடைந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளார்கள். இருந்தாலும் உயிரிழப்பு 100 தாண்டி செல்கிறது. இதை தடுக்கும் வழிகள் நம்மிடம் இருந்தாலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தொற்றுகள் அதிகரிக்கும்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸின் தொற்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலமாக இந்த வைரஸ் தொற்று இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் அதிகமாக இருக்க வேண்டும். இப்போது இந்தியாவில் கைவசம் இருப்பது வெறும் 40,000 வெண்டிலேஷன்கள்தான் அதனால் நாளுக்கு நாள் இதைத் தயாரிக்கும் உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக வெண்டிலேஷன் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஊக்கத் தொகைகளை இந்திய அரசு அளித்து வருகிறது. இதை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருவிகளையும் இந்தியா வாங்கும் முயற்சியில் இருக்கிறது.

மேலும் படிக்க – சீனா கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தியது..!

வெண்டிலேஷனின் விலை

நாம் வெளிநாடுகளிலிருந்து வெண்டிலேஷன் வாங்க வேண்டும் என்றால் ஒரு வெண்டிலேஷன் விலை 11 லட்சத்திலிருந்து 18 லட்சம் வரை இருக்கிறது. அதுவே நம் நாட்டின் உற்பத்தி செய்யும் வெண்டிலேஷனின் விலை கிட்டத்தட்ட 5 முதல் 7 லட்சமாகும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிணைந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வெண்டிலேஷனய் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதை தவிர்த்து இதன் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது இதை நாம் மற்ற நாடுகளுக்கும் வணிகம் செய்து நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தலாம்.

நுரையீரலில் ஏற்படும் அடைப்பை விடுவித்து நம்முடைய சுவாசத்தை சீராக்கும் செயலை இந்த வெண்டிலேஷன் செய்கிறது. எனவே இதன் உற்பத்தியை அதிகரித்து மக்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக இதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் இந்தியா மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து உதவ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன