சைவ விரும்பிகள் வீட்டிலேயே முட்டை கலக்காமல் கேக் செய்யலாம்.!

vegetarian people can use this instead of egg in cake

புத்தாண்டு, பிறந்த நாள் கொண்டாட்டம், காதலர் தினம் என எல்லா நாட்களிலும் நாம் முதலில் வாங்குவது கேக்தான். ஒரு சிலரோ இதை வாங்கி அனைவரையும் ஒன்று சேர்த்து வெட்டி கொண்டாடுவார்கள் மற்றவர்கள் இதை உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு பரிசாக அளிப்பார்கள். அப்போது, அவர்கள் சைவமாக இருந்தால் நீங்கள் பரிசளிக்கும் கேக் வீணாகிவிடும். இப்படிப்பட்டவர்களுக்காகவே கடைகளில் சைவ கேக்கை விற்கிறார்கள் ஆனால் அது எந்தளவுக்கு ஆரோக்கியம் என்பது நமக்குத் தெரியாது எனவே வீட்டிலேயே எளிமையான முறையில் சில பொருட்களை வைத்து சைவ கேக்குகளை செய்ய முடியும்.

கேக்குகளில் முட்டையை கலந்தால் தான் அந்த கேக்கு மிக மிருதுவாக இருக்கும் இல்லையெனில் கேக் பிஸ்கட்டை போன்று மொறுமொறுப்பாக மாறிவிடும். அதனால் கேக் செய்வதற்கு முட்டை மிக முக்கியமான பொருளாக மாறிவிடுகிறது ஆனால் முட்டைக்கு பதிலாக சில சைவ பொருட்களை வைத்து நாம் கேக்குகளை செய்ய முடியும்.

மேலும் படிக்க – இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும்….. தீர்வுகளும்….!

பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கப்படும் அவகோடாவை நாம் முட்டைக்கு பதிலாக கேக்கில் பயன்படுத்தலாம். சியா விதைகள் அல்லது ஆளிவிதையை பயன்படுத்தலாம். இவைகளை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும் பின்பு அதையெடுத்து கேக் செய்வதற்கு பயன்படுத்தலாம். இதன் மூலமாக உங்களின் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும்.

வாழைப்பழம் பூசணி பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை நாம் கேக் செய்வதற்கு பயன்படுத்தலாம். இதன் பழச்சாறுகளை எடுத்து கேக் தயாரிக்கும் போது கலந்தால் மிருதுவாகவும் பழத்தின் ருசியுடனும் இருக்கும். ஆரோக்கியமான உணவிற்க்கு முடிந்த வரை நாம் பயன்படுத்தும் உணவுகளை வீட்டிலேயே சமைப்பது நல்லது அது போல் தான் நாம் கேக் மற்றும் பிஸ்கட்டுகளை தவிர்க்க முடியாமல் கடைகளில் வாங்குகிறோம் இதையும் வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களை வைத்து செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன