நாகா தீவை நோக்கிய பயணத்தில் வேதாளத்தின் கேள்வி!!!

  • by
vedhalam's question to vikram adityan during travel to naga island

ஒரு நள்ளிரவு நேரத்தில் வேதாளத்தை சுமந்து கொண்டு காட்டின் வழியே விக்ரமாதித்தன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வேதாளம் ஒரு கதையை கூறியது. ஒரு ஊரில் பத்மநாபன் எனும் ஒரு நபர் இருந்தார். அவர் அவரது மகளை அந்த ஊரில் உள்ள ஆனந்தன் எனும் இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து இருந்தார். ஆனால் அவள் விதி திடீரென்று ஒரு நாள் அவளுக்கு பேசும் திறன் போய்விட்டது. அவளைப் பரிசோதித்த வைத்தியர் அவளுக்கு பேச்சு திறனை மீண்டும் கொண்டுவர வங்கக் கடலில் இருக்கும் நாக தீவிலிருந்து தசமூலம் எனும்  மூலிகை வேண்டும் என்று கூறினார். அதுவே இவளுக்கு பேச்சுத்திறனை வரவழைக்கும் மருந்தாகும் என்றும் கூறினார். ஆனால் வைத்தியர் அதனுடன் ஒரு எச்சரிக்கையையும் வைத்தார். அந்த மூலிகையைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றார். அப்போது அவள் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த ஆனந்தன், தான் எப்பாடுபட்டாவது அந்த மூலிகையை கொண்டு வருவதாக உறுதி அளித்தான்.

 ஆனந்தனுடன் துணைக்கு வைத்தியருடைய சீடன் சஞ்சயணையும் வைத்தியர் அனுப்பி வைத்தார். இவர்களுடன் வழியில் சாகசத்தில் விருப்பமுள்ள சிவநாதன் என்பவனும் கபாலியும் இணைந்து கொண்டனர். பின்னர் நால்வரும் சேர்ந்து அந்த நாகா தீவுக்கு பயணத்தை மேற்கொண்டனர். நாக தீவிற்கு செல்வதற்காக ஒரு படகில் அந்த நால்வரும் பயணித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு திமிங்கலம் அவர்களின் படகை தன்னுடைய வாலால் அடித்து உடைத்து கொண்டிருந்தது. இதனால் அந்த நால்வரும் கடலில் விழுந்தனர். அப்போது கடலில் தத்தளித்த ஆனந்தனுக்கு உடைந்த ஒரு படகின் துண்டு கிடைத்தது. அந்த உடைந்த துண்டை கொடுத்தது சிவநாதன் ஆவான். அவன் ஆனந்தனிடம் இந்த உடைந்த துண்டை பிடித்துக்கொண்டே கரைசேர உதவி செய்தான். ஆனால் சிவநாதனால் அந்த கரையை அடைய முடியவில்லை அப்போது ஏற்பட்ட ஒரு பெரிய அலையில் சிக்கி சிவநாதன் இழுத்துச் சென்றான். அவன் இறந்துவிட்டான் என்று எண்ணி மற்ற மூவரும் கரையில் ஒன்று சேர்ந்து சோகமாக இருந்தனர். அப்போது பறக்கும் தட்டில் ஒரு முதியவர் செல்வதை அங்கு இருந்த மூவரும் கண்டனர். அவரிடம் பேசிய பிறகு அவர்கள் இருப்பது நாக தீவில்தான் என்பதை உணர்ந்தனர். பிறகு அவரிடம் அவர்கள் இந்த நாக தீவுக்கு வந்த காரணத்தை விவரமாக சொன்னார்கள். 

மேலும் படிக்க – மகாபலிபுரத்தின் சிறப்பு மற்றும் வரலாறு..!

பறக்கும் தட்டு 

அந்த முதியவர் இவர்கள் மூவரும் தேடி வந்த அந்த தசமூலம் மூலிகை இந்த தீவில் உள்ள மலை உச்சியில் இருக்கும் மாணிக்கப்புரி நகரில் இருப்பதாக கூறினார். அந்த மலை உச்சிக்கு செல்லும் பாதை இல்லாததால் இந்த பறக்கும் தட்டின் மூலமாகவே செல்ல முடியும் என்றும், உங்களில் யார் தனது இளமையை அந்த முதியவருக்கு தருகிறார்களோ அவர்களுக்கே இந்த பறக்கும் தட்டு கிடைக்கும் என்றும் கூறினார். அப்போது சஞ்சயன் என்பவன் முன்வந்து தனது இளமையை அந்த முதியவருக்கு தருவதாக கூறி, சில மந்திரங்களை ஜெபித்து பின் சஞ்சயன் முதுமை அடைந்தான். அதன் பிறகு அந்த முதியவர் இளைஞரைப் போல மாறினான். அதன் பிறகு அந்த பறக்கும் தட்டில் பயணித்த கபாலியும் ஆனந்தனும் மாணிக்க பொறியில் இறங்கினர்.  அங்குள்ள மனிதர்கள் விசித்திரமாக மனித உடலையும் தலையையும் கொண்டிருந்தனர். 

மந்திரவாதி 

அங்கிருந்த ஒரு சிலரிடம் இதைப் பற்றி கேட்டுக் கொண்டு அவர்கள் வந்ததற்கான நோக்கத்தையும் அவர்களிடத்தில் தெரிவித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் இந்த ஊரில் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் இந்த நகரின் இளவரசியை மணக்க விரும்பிய போது அவள் அதற்கு மறுத்து விட்ட காரணத்தினால் இவன் ஆத்திரமடைந்து தனது சக்தி வாய்ந்த மந்திர கோல் மூலமாக இவ்வூரில் உள்ள பெரும்பாலான மக்களை இப்படி விசித்திரமான உடலாக மாற்றி விட்டதாக கூறி புலம்பினர். அப்போது அந்த வழியே மந்திரவாதி செல்வதை கபாலி கண்டான். அவன் அந்த மந்திரவாதியிடம் சண்டையிட்டு அவருடைய மந்திரக்கோலை பறித்து சில மந்திரங்களை உச்சரித்து அங்கிருந்த மக்கள் அனைவரையும் மீட்டு முழு மனிதர்களாக மாற்றினான். 

அப்போது அங்கு வந்த இளவரசி மந்திரவாதியை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டாள். அரக்கனை அழிக்க செய்த உதவிக்கு நன்றியை தெரிவித்து அவர்களுக்கு கைமாறாக தசமூலிகையை கொடுத்து அனுப்பினாள். 

இந்த மூலிகையை பெற்றுக் கொண்டு திரும்பிய இருவரும் அங்கு சிவநாதன் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் முதியவரான சஞ்சயன் மீண்டும் இளைஞனாய் இருப்பதையும் கண்டு மகிழ்ந்தனர்..ஆனந்தன் தனது வருங்கால மனைவிக்கு அந்த மூலிகையைக் கொடுத்து அவளை பேசவைத்து குணமாக்கி பின்னர் திருமணம் செய்து கொண்டாள். மந்திரவாதியிடம் பறித்த கோலை பயன்படுத்தி கபாலி அதன் மூலம் பொருள் ஈட்ட நினைத்து அதை பயன்படுத்திய போது அது வேலை செய்யவில்லை.. மேலும் அந்த கோள் அவனை அடித்து ஊரை விட்டே விரட்டி விட்டது.

இப்போது வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கபாலி அந்த மந்திரக்கோலை பயன்படுத்திய போது  அது ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டது? அதுமட்டுமில்லாமல் அந்த மந்திர கோல் ஏன் கபாலியை தாக்கியது என்று கேள்வி எழுப்பியது?

மேலும் படிக்க – பழங்கால தமிழர்களின் கோவில்..!

அதற்கு பதிலளித்த விக்ரமாதித்யன்

ஆனந்தன் உடன் இருந்த மற்ற இருவரும் உண்மையாகவே அந்த மூலிகை எடுப்பதற்காக உதவி செய்தனர். ஆனால் அந்த கபாலி மந்திரக்கோலை மந்திரவாதி இடமிருந்து பெற்றது முதலே அவனது சுயநலத்திற்காக அதைப் பயன்படுத்த எண்ணினான். அதற்கான தண்டனையை தான் அந்த மந்திர கோலின் மூலமாக அவனுக்கு கிடைத்தது என்று பதிலளித்தார். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன